தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

உரிமையில் ஒன்றானோம்

சத்யானந்தன்

Spread the love

 

 

சொற்பக் கூலிக்கு

பல கோடி மதிப்புப்

பொதிகளை இடம்

மாற்றும் கூலிக்கு

கடனே நிரந்தரம்

பணி அல்ல

இந்தத் தேர்தலுக்குப் பின்னும்

 

அவரது சயன அறை

மற்றும் ஒரே தோழனான

கட்டை வண்டியை விட

அதிகம் ஒன்றும் பெரிதல்ல

குடும்ப இருப்பிடம்

 

எனக்கிணையான

உரிமை அவருக்கும் உண்டு

வாக்களிக்க

 

இவர்களுக்கான

என் சொற்கள்

அனல் பறக்கும்

என்பதைத் தவிர

இவரது வாழ்க்கையுடன்

எனக்குத்

தொடர்பேதுமில்லை

இன்னும் கூர்மையாய்

என் எழுத்தைத்

தீட்டுகிறேன்

 

தனது சாணைக்கல்

தீப்பொறியைத்

தாண்டி

கனல் கக்கும்

எதையும் நம்பவில்லை

சக்கர வண்டியைத்

தோள் மாற்றி மாற்றி

சுமக்கும்

கூர்மைக்காரர்

Series Navigation‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

One Comment for “உரிமையில் ஒன்றானோம்”

  • B.CHRISTY says:

    மிகவும் அருமை.கடமையே கண்ணென செல்லும் சாணைக்காரர் கண்ணிலேயே நிற்கிறார்.


Leave a Comment

Archives