வீண்மழை

This entry is part 8 of 14 in the series 29 மே 2016

 

பிச்சினிக்காடு இளங்கோ

நாம்
புகழ்ந்து புகழ்ந்து
பழக்கப்பட்டுவிட்டோம்
அதில்
நமக்குள் ஒரு போட்டி

எது எது
யார் யாருக்கு
என்பதில்
எள்ள்ளவும் இல்லை
அக்கறை

அது அதுக்குரிய
அடர்த்தியை
அறிந்திருந்தால்
விரயங்களைத் தவிர்த்திருப்போம்

வேறுபாடு தெரியாமல்
வீணாக்கக்கற்றிருக்கிறோம்

அது எப்படி
இப்படிப்
பொறுப்பின்றிப்
புகழக்கற்றுக்கொண்டோம்

அந்தக் கணத்தில்
ஆவியாகிவிடுகிறோம்
வெற்றுத்தரையில்
பெய்தமழையாய்க் கொட்டிவிடுகிறோம்
கொட்டிமுழக்குகிறோம்

மழைநீர் சேமிப்பைப்போல்
சேர்க்கத்தெரிந்திருந்தால்
செலவுசெய்ய மனமிருக்காது

யாரோ தயாரித்ததை
அடுத்தநாளே
நமதாக்கிக்கொள்கிறோம்
முகவரியில்லாமல்
அலையவிடுகிறோம்
பெற்றோரை அறியாத
அநாதைகளாய் அவை
வெட்கமில்லாமல் நாம்

பெற்றெடுத்திருந்தால் அல்லவா
வலி தெரியும்
‘கடைத்தேங்காயை
வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுபோல்’
என்ற நம் பழையமொழி
நமக்கானப் பழமொழி.

பிச்சினிகாடு இளங்கோ
(12.3.15 அன்று காலையில் “நான் வீட்டுக்குப்போகவேண்டும்” என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திச்சிறுகதைகள் தொகுப்பில் மன்னு பண்டாரி எழுதிய ‘ஒருத்தி’ என்ற சிறுகதையைப்படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய சிந்தனையை 8.15லிருந்து 8.45க்குள் எமார்ட்டியில் இருந்துகொண்டு எழுதியது. தமிழில் மதியழகன் சுப்பையா.)

Series Navigationநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7காப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *