திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 8 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

கனவு இலக்கிய வட்டம் 

    8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

 

 

திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள “  டாலர் சிட்டி “  ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா

 

திருப்பூரில் 21/8/16 ஞாயிறு குறும்பட விழா ” கனவு “ சார்பில் நடைபெற்றது ..  ( இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர் )

திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள

“  டாலர் சிட்டி “  ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் “ நைரா “ ஆகியவை வெளியிடப்பட்டன. வெளியீட்டில் பொன்னுலகம் குணா, மானூர் ராஜா, இயக்குனர்  ஆர் பி அமுதன், சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் பங்கு பெற்றனர். மனோகர் தலைமை வகித்தார். ஜோதி நன்றி கூறினார். சுப்ரபாரதிமணியன்  நைரா நாவல் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. என்றார். இயக்குனர்  ஆர் பி அமுதன் திருப்பூர் பலருக்கு பல விதமான பார்வைகளைத் தரக்கூடியது. தொழிலாளர் நிலையும், பின்னாலாடை வளர்ச்சியும் பற்றி இந்தப் படத்தில் ( டாலர் சிட்டி 77 நிமிடப்படம் )  சில விசயங்களை இப்படத்தில்  எடுத்துள்ளேன். இது குறித்த மாறுபட்டப்பார்வைகள் திருப்பூரின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

செய்தி: கே. ஜோதி ( கனவு இலக்கிய வட்டத்திற்காக.. )

 

 

திருப்பூர் : டாலர் சிட்டி ஆவணப்படம்

இயக்குனர் ஆர்.பி. அமுதன் ..விமர்சனம்

1:தலித் பிரச்சினைகள் பற்றி முகத்தில் அடிக்கிற மாதிரி பல படங்கள் எடுத்த நீங்க இவ்வளவு மேம்போக்கா திருப்பூரைப் பத்தி ஏன் படம் எடுக்கணும். தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வெச்சு சமரசமா இயங்கற ஊர்லே, இதுலே நீங்களும் சமரசம் பண்ணீட்டீங்களா

 

  1. காலாவதியான மார்சியம், காணாமல் போன காந்தியம் .. இதையெல்லாம் தூக்கி பிடிச்சிருக்கீங்க  ..துக்கம்..தூக்கம் .

 

4.,  பனியன் தொழிலாளி வீட்டு கண்ணாடிப்புட்டி மீன் , முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன்… கேட்பாரற்று கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்… அபாரமான குறியீடுகள்…. அபாயமான குறியீடுகள்.

  1. கூட்டுக் களவணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாதத் தொழிலாளி,  சுரண்டலுக்கு பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதா  குறிக்கோள்.எல்லாரும் சேந்து பண்ற திருப்பூர் கூட்டுகளவணித்தனத்தே  நாசுக்கா சொல்லீட்டீங்க.
  2. சேரிக திருப்பூர்லே வளர்ந்திட்டே இருக்கு. பின்னலாடையிலே  சுமங்கலித்திட்டக் கொடுமை வந்திருச்சு. வட மாநில பெண்கள் வார இறுதிகள்லே விபச்சாரத்துக்கு பயன் படற நிலை.இதியெல்லா சொல்லாமா திருப்பூரைப் பத்தி படம் என்ன வேண்டிக்கிடக்கு….குணா
  3. பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை திருப்பூர்லே இருக்கு. இந்தப் படத்திலெ இதெல்லா இல்லே. திருப்பூரைப் பத்தின வெறும் அறிமுகம்.
  4. திருப்பூரைப்பத்திச் சொல்றப்போ மோடியில வந்து ஏன் முடியணும். மோடி காய்ச்சல் உங்களுக்கும் இருக்கு.. நேரடியான படமல்ல..முழுமையில்லாத படமல்ல.
  5. motivateபண்ற படம்.  Quiet, subtle   பார்வை.  . converted audience, non-converted audienceக்கான யுத்தம்  திருப்பூரைப் பத்தின விமர்சனம் இல்லை.
  6. பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத்தொழிலாளி, பவர்லூம் தொழிலாளிகளோட பார்வை இருக்கு. தமிழ் டப்பிங் பார்த்து மகிழ்ச்சியா இருக்கறதா ஒரு சின்னத்திரை வசனம் வருது. அதுதா திருப்பூர் உள்ளூர் வாசிகளின் நிலைமை.
  7. கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் பார்வையிலே தலித் அம்சம் இருக்கும், உங்களதும் தலித் பார்வை, விளிம்பு நிலைப் பார்வை இருக்கும்.  அது இதிலெ மிஸ்ஸிங். ஆனாலும் மகிழ்ச்சி.

 

  1. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்ட கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனதை உறுத்துகின்றன. ( போராட்ட கால கஞ்சித் தொட்டி சம்பவங்கள் பேசில்லாமல் பலவற்றை உணர்த்தி போகின்றன ) நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது
Series Navigation15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்ரௌத்திரம் பழகுவேன்…..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *