சேலம் எஸ். சிவகுமார்
தேடல் 1
காத்திருந்து காலம் போனது ;
பூத்திருந்து பார்வை போனது .
கடந்துபோன காலமும்,
கரைந்து போன பார்வையும்
திரும்பவும் கிடைத்தால் – என்
தேடலைத் தொடங்குவேன்
காத்திருக்காமல்.
தேடல் 2
குழந்தை இருக்கும் வீட்டில்
எல்லாமே கசமுசா ;
எதையோ தேடினால்
எதுவோ கிடைக்கிறது –
வாழ்க்கையைப் போல.
குழந்தையும் கடவுளும்
ஒன்றுதானோ !
தேடல் 3
கால் கடுதாசி கொடுத்துவிட்டு
வீட்டுக்கு வந்தால்
எல்லாரும் கடுகடுப்பு, சத்தம் ;
மீண்டும்
தேடவேண்டும் –
தொலைத்துவிட்ட
வேலையையும்,
தொலைந்துபோன
மரியாதையையும்!
தேடல் 4
யாரும் என்னைத்
தேடவேண்டாம் என
எழுதி வைத்து விட்டு,
எதையெதையோ தேடி
ஓடிப் போனேன் ;
ஓய்ந்து போன பிறகுதான்
புரிந்தது ; நானும் என்னைத்
தேடவில்லையென்று !
தேடல் 5
ஓன்று 1
பத்து 10
நூறு 100
ஆயிரம் 1000
பத்தாயிரம் 10000
லட்சம் 100000
பத்து லட்சம் 1000000
கோடி 10000000 – என
தேடித் தேடி
சேர்த்த பணம் ;
சோர்ந்த பின்புதான் புரிந்தது –
முதலிலிருந்தே வெறும்
பூஜ்யங்களாய் சேர்த்து வந்த
ஏழை நான் என்று
—————————-
- தேடல்
- தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்
- பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை
- ஹாங்காங் தமிழ் மலர்
- நீங்கள் கொல்லையிலே போக.
- ஏறி இறங்கிய காலம்
- 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்
- திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா
- ரௌத்திரம் பழகுவேன்…..
- இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்
- கவிநுகர் பொழுது-8 செந்தில் பாலா
- புத்தகங்கள் புத்தகங்கள் !! ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “
- கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி
- காப்பியக் காட்சிகள் 17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்
- களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’
- அறிவோம் ஐங்குறு நூறு