மீண்டும் நீ பிறந்து வா…!

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 21 in the series 16 அக்டோபர் 2016

ப.கண்ணன்சேகர்
மலைமகள் அருளே  மாகவி திரளே !
மறையாப் புகழே மணக்கும் தமிழே !
கலையாக் கதிரே கவிதைச் சுடரே !
கனியின் சுவையே கற்றோர் அவையே !
குலையாக் குன்றே குறையாக் குதிரே!
கூர்மைக் கவியே நேர்மை வழியே !
தலைமைக் தகையே தனித்துவ வகையே!
தத்துவ விளக்கே  திசையில் கிழக்கே !

வனவாச படைப்பே வாழ்வியல் படிப்பே!
வற்றா வெள்ளமே வளமிகு உள்ளமே!
மனதின் மகிழ்வே மறையா முகிழ்வே!
மயக்கும் அமுதே வியக்கும் தமிழே !
தணலின் ஒளியே தழைக்கும் மழையே!
தமிழன் தலைப்பே தத்துவ வியப்பே !
குணத்தில் குன்றே கோகுலம் கன்றே!
கோப்பெரும் கவியே கொண்டாடும் புவியே!

காவியத் தலைவா கவிதை முதல்வா !
கற்பனை விதையே களிப்புறு நகையே !
மேவிய நிலையே மேன்மைக் கலையே
மேடைப் பேச்சே மிகாத வீச்சே!
காவிரி அலையே கற்பனை மலையே
கண்ண தாசா  கவியின் ரோசா
பூவிரிப் போல புறப்பட்டு வருக !
பூமியில் பிறந்து புதுக்கவி தருக!

-ப.கண்ணன்சேகர்.

Series Navigationறெக்க – விமர்சனம்கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *