உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15

This entry is part 11 of 12 in the series 8 ஜனவரி 2017

 

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

++++++++++++++++

13.  புகழுக்குச் சிலர் இப்புவியில்;  சிலர் ஏங்குவர் 

            போதகரின் சொர்க்கபுரி வர வேண்டு மென்று;

            காசைப் பெற்று, கைவிடு உறுதி வாக்கை,

            தூர முரசின் குமுற லுக்குக் கவனம் வேண்டாம்.    

  1. Some for the Glories of This World; and some
    Sigh for the Prophet’s Paradise to come;
    Ah, take the Cash, and let the Promise go,
    Nor heed the rumble of a distant Drum!

 

            14.  மடமை அல்லவா !  சிலந்தி போல் பின்னி

            நிகழ் கால வாழ்வு நூலறுந்து வெல்வதா, 

            நாமிழுக்கும் காற்றை நாமே வெளியேற்றி 

            நமக்கே மூச்சு விடத் தெரியாத போது !
 

  1. Were it not Folly, Spider-like to spin
    The Thread of present Life away to win —
    What? for ourselves, who know not if we shall
    Breathe out the very Breath we now breathe in!

 

            15.  நமக்குப் புகழ் பரப்பும் நறுமணப் பூவை நோக்கு;

            நவிலும் அது நகைத்து,“தரணிக்குள் வீசுவேன்;

            பட்டுக் குஞ்சப் பணப்பை கிழியும் எனக்குடனே,

            கொட்டும் பணக் களஞ்சியம் தோட்டத் திடலில்.       

     

  1. Look to the Rose that blows about us — “Lo,
    Laughing,” she says, “into the World I blow:
    At once the silken Tassel of my Purse
    Tear, and its Treasure on the Garden throw.”
Series Navigationதொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *