தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

அருவம்

Spread the love

அருணா சுப்ரமணியன்

தனிமை பொழுதின்
துணையான கனவினில்
சிறகுகள் முளைத்து
பரந்த வானத்தில்
வலிக்கும் மட்டும்
பறந்து திரிந்தேன்
நீல மேகத்துள்
நீராகி இறங்கினேன்
காற்று கலைத்துச் சென்ற
கடைசி மேகத்தில் இருந்து
கடலுள் குதித்தேன்
அலையாய் அலைந்து
கரைக்குத் தள்ளப்பட்டேன்
மணற்கோட்டை ஒன்றை
அணைத்த வேகத்தில்
மணலாய்க் கரைந்தேன்
அழுது கொண்டே
சென்ற சிறுமியின்
பாதம் தொட்டு
மன்னிப்புக் கேட்டேன்
ஒட்டிக்கொண்ட என்னை
வீட்டுக்கே கூட்டி போனாள்
கூச்சத்தில் நானோ
வாசலிலேயே நின்றுவிட்டேன் …

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை

Leave a Comment

Archives