Posted in

வெய்யில்

This entry is part 3 of 18 in the series 2 ஜூலை 2017

முல்லைஅமுதன்

வெய்யில்
வரும் போது புடவைகளை
காயப்போடுங்கள்.
‘ம்’
பிள்ளைகளுக்கு
உணவை ஊட்டிவிட்டு,
பாடசாலை வாகனத்தில்
அனுபிவிடுங்கள்.
‘ம்’
மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும்.
‘ம்’
அம்மா வரப் போறா
வீட்டைத்துப்புரவு பண்ணி வையுங்கள்.
‘ம்’
அப்படியே மாடியில
காயவிட்ட ஊறுகாயை எடுத்து வைச்சு
,பிறகு
சாப்பிடுங்கள்.
நான் வர தாமதமாகும்..
‘ம்’
செருப்பை
மாட்டியபடி நகர்ந்தாள்
மனைவி.
நான் இரவுப் பூக்களின் மீதான
பனித்துளியை
இரசித்தபடி இருந்தேன்.
என் கனவை
மிதித்தபடி
வெளியேறினாள்..

முல்லைஅமுதன்

Series Navigationசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *