தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 அக்டோபர் 2018

உணவு மட்டுமே நம் கையில்

அமீதாம்மாள்

 

 

ஊறவைத்த

பச்சைக் கடலை 5

இரவே ஊறவைத்த

மல்லிக் கசாயம்

ஒரு குவளை

10000 காலடி நடை

3 இட்லி

கொழுப்பகற்றிய

பால் ஒரு குவளை

இப்படியாகக் காலை

 

3 சப்பாத்தி

உருளையில்லாக் கறி

கொஞ்சம் காய்கறி

எப்போதாவது

ஒரு துண்டு மீன்

அல்லது கோழி

இப்படியாகப் பகல்

 

இரண்டு சப்பாத்தி

கொஞ்சம் தயிர்

ஒரு துண்டு ஆப்பிள்

படுக்குமுன்

ஒரு சிட்டிகை

கடுக்காய்த் தூள்

வயிற்றுப்புண் வராதாம்

இப்படியாக இரவு

 

15 ஆண்டுகளாய்

இப்படியே வாழ்க்கை

 

எனக்குள்ள

சர்க்கரைதான்

அவருக்கும்

என்னைவிடப்

15 வயது இளையர்

எனக்கு முன்னேயே

சேர்ந்துவிட்டார்.

 

ஒன்று புரிந்தது

உணவு மட்டுமே

நம் கையில்

 

அமீதாம்மாள்

Series Navigationகிளிக் கதைபயணம்

Leave a Comment

Archives