தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 அக்டோபர் 2018

கிளிக் கதை

 

தனிமைக் காட்டில்

ஓர் ஆண்கிளி

துணைக்கு வந்தது

பெண்கிளி

கூடின

மசக்கையில்

பெண்கிளி

பிரசவம் பெண்ணுக்கு

வலியோ ஆணுக்கு

 

முட்டை வந்தது

குஞ்சு வந்தது

ஜனனம் விரிந்தது

 

கழிவைத் தின்று பின்

கிளியையே தின்றது மரம்

 

இன்று

ஏராளக் கிளிகள்

ஏராள மரங்கள்

எந்தக் கிளியிலிருந்து

இந்தக் கிளி

எந்த மரத்திலிருந்து

இந்த மரம்

கிளிக்கும் தெரியவில்லை

மரமும் அறியவில்லை

 

எல்லாமும் அறிந்த

கரு ஒன்றுண்டென்று

மனிதன் அறிவான்

அதற்கு மேல் அறிய

கோடிக்கணக்காய்

தேடல்கள்

 

தொடர்ந்தது

தொடர்கிறது

தொடரும் தேடல்கள்

கிடைக்குமா

விடை?

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationஉணவு மட்டுமே நம் கையில்

Leave a Comment

Archives