தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 டிசம்பர் 2017

மழயிசை கவிதைகள்

மழயிசை

1.அவள் எங்கே?
எப்போது பிறந்தாள்?
யார் ஈன்ற பிள்ளை?
அவள் குறியை யார் பார்த்தார்கள்?
எப்போது பூப்படைந்தாள்?
யாருடன் புணர்ந்தாள்?
என்று வினாக்கள் விவரமாக..
அலைகடலுக்கு அன்னை
என்று பெயர் சூட்டியவர்கள்
திண்ணையில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள்.
சூழலை எப்படிச் சமாளிக்கலாம் என்று…

2.நாடு முழுக்க
மது ஒழிப்பு மாநாடு
கலந்து கொள்வோருக்குக்
கோ… கோ… இலவசம்
முன்பதிவு செய்பவர்களுக்கே
முன்னுரிமை அளிக்கப்படும்  கண்டீசன்ஸ் அப்லை..

3.தலைவனைச் சந்தித்து
ஒரு திங்களாகிறது தோழியுமில்லை, செவிலியுமில்லை பாங்கனுமில்லை, பாங்கியுமில்லை
தூது அனுப்பவிருந்த
கைபேசியும்
இற்செறிப்பில் ..

மழயிசை

Series Navigationபூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் !கவிதை

Leave a Comment

Insider

Archives