ஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம்

author
0 minutes, 1 second Read
This entry is part 12 of 12 in the series 7 ஜனவரி 2018

புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி நிலை பற்றியக் கருத்தரங்கும் அது பற்றிய ஆவணப்படம் வெளியீடும் ” சேவ் “ அமைப்பு சார்பில் புதன் காலை திருப்பூர் ரமணாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சேவ் இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கினார். சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஜெகதீசன் ( இணை இயக்குனர், சுகாதரம் மற்றும் பாதுகாபுத்துறை, திருப்பூர் ) ” கற்கை நன்றே “ ஆவணப்படத்தை ( புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி பற்றிய ஆவணப்படம் ) வெளியீட தொழிற்சங்கத் தலைவர் சம்பத், சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சு.மூர்த்தி ( கல்வி மேம்பாட்டுக்கூட்டமைப்பு ) – புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள், பதிவுகள் என்றத் தலைப்பிலும், சுந்தரமூர்த்தி ( தமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்றக் கழகம் )- தாய்மொழிக்கல்வியின் அவசியமும் அவசரமும் என்றத் தலைப்பிலும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வித் தேவையை உள்ளடக்கிய அணுகுமுறை என்ற தலைப்பிலும் மற்றும் சவுந்திரராஜன், குநதங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

சுப்ரபாரதிமணியன் உரையில்..

“ திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடுப்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று… அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.

குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும் 5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.

பெற்றோர் குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை கொள்வதில்லை. கேட்டால் 3 மாதங்கள் இருப்போம் பிறகு போய் விடுமோம் என்கிறார்கள். அப்படித்தான் 3 மாதங்கள் இருந்து விட்டு ஊருக்குப் போய் விட்டு மீண்டும் வருகிறார்கள். வாடகை பிடிக்கிற இடத்தில் முன்பணம் கொடுத்து விட்டுப் போகிறார்கள். மீண்டும் அங்கேயே வர… இடையில் அவர்களுக்குத் தெரிந்தவர்களே தற்காலிகமாய் அங்கு குடியேறுகிறார்கள். குழந்தைகளை சற்றே வளர்ந்த குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு பெண்களும் பனியன் தொழிற்சாலைகளுக்குப் போய் விடுகிறார்கள்.

வழக்கமாய் மொழி சார்ந்தச் சிக்கல்களால் அந்நியப்பட்ட இக்குழந்தைகள் சற்றே முரட்டுத்தனம் மிக்கவர்களாய் மாறி தனிமைப்படுகிறார்கள். இணைப்புப் பள்ளியிலோ, அரசுப்பள்ளியிலோ இந்தக் குழந்தைகளுக்குப் பெயர் முரட்டுக்குழந்தைகள். கொச்சையாக சிலர் தறுதலைகள் என்கிறார்கள் இரக்கமின்றி… ஆசிரியர்களும் அவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்று கைவிடுகிறார்கள். மீறினால் காவல்துறைய அணுகுகிறார்கள். இக்குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. “ என்றார். தமிழே தெரியாமல் திருப்பூரில் வாழலாம் என்ற நிலையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் அபாயமணி இந்தக்கூட்டத்தில் எதிரொலித்தது

சேவ் 94822 13011

Series Navigationமகிழ்ச்சியின் விலை !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *