ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!

author
23
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 15 in the series 14 ஜனவரி 2018

குமரன்

இச்சமூகம் மொத்தமுமே அறிவற்றும் நேர்மறை சிந்தனையற்றும் போய்விட்டதோ என்ற எண்ணம் தோன்றும் வண்ணம் நடந்தேறி வருகிறது “தமிழை ஆண்டாள்” தோற்றுவித்துக் கொண்டிருக்கும் விவாதங்கள்…இக்கட்டுரையை எழுதிய வைரமுத்து என் பார்வையில் சிறந்த பாடலாசிரியர். மலின வரிகளுக்கிடையிலும் சில மகத்தான வார்த்தை கோர்வைகளை அளித்தவர். ஓரளவுக்கு “ஜனரஞ்சக” கவிஞர். இதுவே, அவர் தன்னை நிறுத்த‌ வேண்டிய, நாம் அவரை பொருத்த வேண்டிய, இடம். இதை விடுத்து, அவரை இலக்கியவாதி என நோக்குவதில் துவங்குகிறது நம் அறிவீனம்.

எதற்காக நாம் இலக்கியத்தை நாடுகிறோமோ அதைத்தான் இலக்கியம் தரும். எனவே தான் எண்ணற்ற பரிமாணங்களை அடைத்து படைக்கப்பட்டிருக்கின்றன அவற்றின் அமைப்பும் ஆக்கமும். வைரமுத்து இலக்கியங்களை திறம்பட வாசித்திருப்பவர் என்றே வைத்துக் கொள்வோம். இருப்பினும், அதில் தென்படும் “சரக்கை” தன் பாடல்களிலும் கவிதைகளிலும் பயன்படுத்தும் பொருட்டு அதில் லயித்திருப்பார் எனின், அவர் இலக்கியத்தின் வழி பெறும் “பொருளும்” அப்படித்தான் இருக்கும். திரைப்பாடல் என்றாலே புறந்தள்ளத் தக்கவை எனக் கொள்ளுதலும் ஆகாது. அது நம்மை எவ்விதத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்துகிறது என்பதை பொறுத்தாக அமைய வேண்டும் அதன் நிராகரிப்பு. அந்த அடுத்த கட்டத்திற்கான வாயிலை கண்டடைய வேண்டியதும் நாமே.

கண்ணதாசனும் திரைப்பட பாடலாசிரியர் தான். அவர் பார்த்த ஆண்டாள் வேறு.

“சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்
சுட‌ராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்”

என்று நான்கு வரியில் ஆண்டாளை நச்சென சொன்னார். நம் விழைவின் தீவிரத்தை பொறுத்து, இந்த திரைப்பாடலில் கிடைக்கும் ஆண்டாளின் அறிமுகம் நாச்சியார் திருமொழி வரைக்கும் கூட நம்மை அழைத்துச் செல்லும். ஆனால் நாமோ, வைரமுத்துவின் கட்டுரைத் தலைப்பு இங்கிருந்து உருவப்பட்டிருப்பது போன்ற சில்லறைத் தனமான வாதங்களில் நேரத்தை வீணடிக்கிறோம்…

ஒரு சினிமா பாடலாசிரியரை, பக்தி இலக்கியத்திற்கு ஒவ்வாத ஒருவரை, அதன் மேன்மை குறித்து உரையாற்ற அழைக்கும் அளவுக்கு இருக்கும் முன்யோசனை அற்ற ஊடகங்களும், அத்தகையனவற்றை “பாரம்பரியம் மிக்க ஊடகங்கள்” என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாமும், அடுத்த அறிவீனம். வலை முழுவதும் ஆதரவும் எதிர்ப்புமாய் எத்தனை ஏச்சுக்கள்…அவற்றில் “பக்தி இலக்கியம்” வாசித்த பக்குவம் இருக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது, வைரமுத்து மட்டும் நுனிப்புல் மேயவில்லை. நாம் அனைவருமே அப்படித்தான் இருக்கிறோம். இதற்கு ஒரு எடுத்துக் காட்டு, அனைவருமே தேர்ந்தெடுக்கும் பாடல்களை கவனித்தால் நகைப்பாய் இருக்கிறது. இவர்களின் கண்ணில் “முலை”களும் “கொங்கை”களும் மட்டுமே தட்டுப்படுகின்றன. பக்தி மரபு, ஞான மரபு போன்றவற்றை தாங்கி வரும் இலக்கியங்களில் அதை படைத்தவர் ஓட்டும் உணர்வுத் தேரில் அச்சாணியாய் இருக்கும் பாவம் சார்ந்த கருப்பொருளை இவர்கள் கண்டது இல்லை என்பது தின்னம். திரைப்பாடல் மற்றும் அதன் காட்சிகளில் காட்டப்படும் “தொடை” நயத்திற்கும், பக்தி இலக்கியம் காட்டும் பாவங்களுக்கும் வேறுபாடு உண்டென்று உணரும் வகையிலா நாம் சமூகத்தை செம்மைப்படுத்தியிருக்கிறோம்? வானில் பறக்கும் வண்ணப்பறவையின் பிம்பத்தை சேற்று நீரில் பார்த்து அது சேறு வாழ் பறவை என்று கூறுவது எத்தனை அறிவீனமோ அதை ஒத்தது, ஆண்டாளின் வேட்கையை காமம் என்று பொருள் கொள்வது…நம் இருப்பும் விருப்பும் சேற்றின் மீதா வானின் மீதா என்பதைப் பொறுத்ததே இது. “யாழ்பாணம் யானைத் தந்த”த்திற்கும் “முலையெழுந்தார்”ருக்கும் இடையில் உள்ள விட்டு விடுதலையாதலின் பொருட்டான முதிர்ச்சியின் தொலைவு வெகு அதிகமல்லவா?

மலினங்கள் மட்டுமே எளிதில் பிரபலமாகும் திருநாட்டில் இத்தகைய கற்பிதங்களும் அதை பரப்புவதும் முளையிலேயெ கிள்ளி எறியப்படவேண்டும். இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகளில் சித்தர் பாடல்களுக்குக் கூட சிருங்கார விளக்கவுரைகளை தமிழ் கூறும் நல்லுலகம் பெறும் பேராபத்து நிகழக்கூடும். எனவே வைரமுத்துவின் கட்டுரைக்கு, எந்தச் சொல்லுக்கு எந்தக் காலத்தில் எந்தப் பொருள், ஆய்வுக் கட்டுரையா ஆன்மீகக் கட்டுரையா மேற்கோளா செயற்கைகோளா என்பது போன்ற வெட்டிப் பேச்சுக்களில் இறங்காமல், கடுமையான கண்டனங்களை நாம் தெரிவித்தாக வேண்டும்.

ஆனால், இதைவிட அதிகப்படியான கண்டனம் சென்றடைய வேண்டியது ராஜாவுக்கு. அதிர்ச்சியளிக்கும் சொல்லாடலை, பொதுவெளியில், இச்சிக்கலுக்கு சற்றும் சம்பந்தமில்லாத வைரமுத்துவின் உறவுகளை உள்ளிழுத்துப் பேசி, மெல்ல மத விரோதத்தை நுழைத்து…முள்ளை முள்ளால் எடுக்கத்தான் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறது. மலத்தை மலத்தால் அல்ல. இப்படிப்பட்ட பேச்சை பலர் பாராட்டியும் ஊக்குவித்தும் வருவதும் வருந்துதலுக்குரியது.

ஆனால் என் செய்ய?

கவிப்பேரரசுகளுக்கும் கள அரசியலுக்கும் நடுவில் அம்போவென விடப்படுவது இலக்கியம் மட்டுமல்ல. நாமும் தான். “பாடவா ஒரு பாசுரம் நீதானே என் ஸ்வரம்” என்று பாடிக்கொண்டே மரத்தை சுற்றி ஓடும் நாயகனும் நாயகியும் காட்டுவது தான் நமக்குத் தெரிந்த இலக்கியம். இந்த லட்சணத்தில், படித்துணரவே பல பிறப்புகள் தேவைப்படக்கூடிய‌ பழந்தமிழ் இலக்கியத்தை “ஆய்வு” செய்யும் செய்யும் தகுதி இன்றளவில் நம்மில் எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்வதானால், எவ்வித சார்புத்தன்மையுமின்றி இலக்கிய ஆய்வில் இறங்குபவர்களை, தங்களின் அக ஆய்வுக்கு இழுத்துச் செல்லும் ஆழமும் வலிமையும் இலக்கியத்திற்குண்டு. எனவே தான் அத்தகையவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் பரபரப்புக்குத் தீனி போடாமல் பக்குவமாய் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ அவர்களும் அத்தகைய கருத்துக்களும் சீண்டுவாரின்றி ஓரமாய் கிடக்க அர்த்தமற்ற கூச்சல்கள் மட்டுமே மேடைகளில் கேட்கின்றன.

நம்மால் ஆக வேண்டியதும் நான் அடைய வேண்டியதும் ஒன்றே. பக்தி மார்க்கத்தில் திளைப்பவரோ நாத்திகத்தின் வழி நடப்பவரோ…இங்கேயே தோன்றியவரோ எங்கிருந்தோ வந்தவரோ..கருப்போ சிவப்போ வெளுப்போ…யாதொரு நிறமோ…சாதியோ…தமிழ் என்னும் தொல்மொழியை வாசிக்கும் பேறு நம் நாக்கிற்கு வாய்த்திருக்கிறது. நம் ஆயுளுக்குள் அடங்காத அதன் இலக்கியப் புதையல்களை இதுவரை பார்த்திரா விடினும் இன்று முதல் தொடவேனும் எத்தனிப்போம். அப்போது தான் நுனிப்புல் மேய்வோரையும் அப்புல்லையும் பார்த்திராமல் மேய்பவரை எதிர்ப்போரையும் அடையாளம் கண்டு இருவரையுமே ஒதுக்கி வைக்க இயலும். வடிவேலு மொழியில் சுருங்கச் சொன்னால், “படிக்க வைங்கப்பா சும்மா கப்பித் தனமா பேசிகிட்டு…”

Series Navigationதொண்டிப் பத்துமாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?
author

Similar Posts

23 Comments

  1. Avatar
    Asokkumar christian says:

    I’ve seen Vairamuthu’s article on Thirumoolar, it’s not bad as explained in this article that he’s not a Thamil Ilakkiyavadhi. Yes Old Thamil Lit are very deep, but can’t stop in Bakthi ilakkiyam it included the earlier lit too. If we consider the current 21st century ilakkiyavadhikalil Vairamuthu neengal solvadhu pol sodai ponavar alla. Ilakkiam not meant for all highly literate but need to reach out to any common person who speaks the language. In that his books are really comparable and you can’t deny that I believe.

  2. Avatar
    BSV says:

    ஆசிரியர் கட்டுரை முழுவதும், ”நாம்” ”நம் அனைவரும்” என்றெல்லாம் பேசுகிறார். இது பணபாட‌ற்ற செயல். உங்கள் சார்பாக, அலலது உங்கள் நண்பர்கள் சார்பாக எழுதுங்கள். 8 கோடி தமிழர் சார்பாக எழுத உங்களுக்கு உரிமை இல்லை.

    //என் பார்வையில் சிறந்த பாடலாசிரியர். மலின வரிகளுக்கிடையிலும் சில மகத்தான வார்த்தை கோர்வைகளை அளித்தவர். ஓரளவுக்கு “ஜனரஞ்சக” கவிஞர். இதுவே, அவர் தன்னை நிறுத்த‌ வேண்டிய, நாம் அவரை பொருத்த வேண்டிய, இடம். இதை விடுத்து, அவரை இலக்கியவாதி என நோக்குவதில் துவங்குகிறது நம் அறிவீனம்.//

    என்ன சார் எழுதுகிறீர்கள். சிறந்த பாடலை எழுதுபவர் இலக்கியவாதி. அவரை அபபடி நோக்குவதில் என்ன அறிவீனத்தைக்கண்டீர்கள்?

    //கண்ணதாசனும் திரைப்பட பாடலாசிரியர் தான். அவர் பார்த்த ஆண்டாள் வேறு.
    “சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள்
    சுட‌ராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
    கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
    கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள்”
    என்று நான்கு வரியில் ஆண்டாளை நச்சென சொன்னார். நம் விழைவின் தீவிரத்தை பொறுத்து, இந்த திரைப்பாடலில் கிடைக்கும் ஆண்டாளின் அறிமுகம் நாச்சியார் திருமொழி வரைக்கும் கூட நம்மை அழைத்துச் செல்லும். ஆனால் நாமோ, வைரமுத்துவின் கட்டுரைத் தலைப்பு இங்கிருந்து உருவப்பட்டிருப்பது போன்ற சில்லறைத் தனமான வாதங்களில் நேரத்தை வீணடிக்கிறோம்…//

    ஒரு திரைப்படப் பாடல் மூலமாக திருப்பாவையைப் படிக்க ஆவல் வந்தது என்றால், என்ன கொடுமையிது சரவணா? நானும் திருப்பாவை மட்டுமன்று எல்லா ஆழ்வார்களையுமே படித்தேன். படித்துக்கொண்டேயிருக்கிறேன். திருமால் பெருமை என்ற திரைப்படத்தையோ, அல்லது ஏதாவது ஒரு சினிமாக்கவிஞரையோ கேட்டபின் எனக்கு ஆவல் வரவில்லை. வருவது தவறில்லை. ஆனால் அது உங்கள் வளர்ச்சி நிலையைக்காட்டுகிறது. அம்மன் படத்தை சினிமாகொட்டகையில் பார்த்து சாமியாடும் பெண்களை நினைவுபடுத்துகிறீர்கள். இத்தனைக்கும் உங்களைப்போல எல்லாரையும் கொண்டு /வீணடிக்கிறோம்// என்றெழுதுகிறீர்கள்.

    கண்ணதாசன் பார்த்த ஆண்டாள் மாதிரியே மற்றவர்களும் பார்க்க வேண்டுமென சொல்ல நீங்கள் யார்?

    நிறைய எழுதித்தள்ளிவிட்டீர்கள். ஆனால் இலக்கியத்தையும் புரிந்து கொள்ளவில்லை; பக்தியையும் புரிந்து கொள்ளவில்லை. வைரமுத்துவுக்கு உங்களைப்போன்ற ஆத்திக வாதிகள் கண்டனம் தெரிவியுங்கள். மற்றவர்களுக்கு – அவர்களுள் பலர் இந்து ஆத்திகர்கள்தான் – தேவையில்லை.

  3. Avatar
    ரவிசந்திரன் says:

    குமரன் இந்த கட்டுரையின் மூலம் என்ன சொல்லவருகிறார்.?..வைரமுத்து , சொக்க தங்கமும் கூட என்று சொல்ல வருகிறாரா ?,,, அல்லது கண்ணதாசனின் காலத்திலிருந்து வைரமுத்து காலத்திற்குள் தமிழ் சமுதாயமே முலை/ நாட்டு கட்டை என்று ஒரு காம வெளிக்கு பயணம் செய்ய …நம் தமிழ் தாத்தா செம்மொழி மாநாடு எல்லாம் நடத்தி வழி நடத்துகிறாரா.. ? தமிழ் சமுதாயத்திற்கு ஒரு பெரும் அவமானம்… அவரிடம் இருந்து பத்ம விருதுகளை திரும்ப பெற வேண்டும்… … தமிழ் சமுதாயத்திற்கு எப்பொழுது மதுக்குப்பியை அறிமுகப்படுத்தி ஒரு சீர்கேட்டை தொடங்கினார்களோ அன்றிலிருந்தே இந்த சமுதாய சரிவை நாம் எதிர் கொண்டு செல்கிறோம்… அவமானம்

    1. Avatar
      BSV says:

      விசித்திரமான பார்வை. ஓர் எழுத்தாளரின் தனிநபர் வாழ்க்கை ஒழுக்கமாக இருக்க்வேண்டுமென்று எந்த நாட்டிலும் சொல்லமுடியாது. உலகமெங்கும் இலக்கிய வாதிகள் தன்னிச்சையாக செயல்படுபவர்களே. மக்களும் கண்டுகொள்வதில்லை. குடிகாரன், பெண் விரும்பி, சூதாடி, ஊதாரி -இன்ன பிற குணங்களைக்கொண்டோர் இலக்கியம் எழுதக்கூடாதென்றால் தமிழ் இலக்கியம் – சமயப்பாடலகளைத் தவிர – ஒன்றுமில்லாமல் நீர்த்துவிடும். எனவே இலக்கியவாதிகள் என்ன எழுதுகிறார்கள் என்று பாருங்கள். அவர்களுக்கு எத்தனை வைப்பாட்டிகள்? கோப்பையைக் கையிலேடுத்து பெத்தடின் ஊசி போட்டுக்கொண்டு எழுதினார்களா? என்று பார்க்காதீர்கள்.

  4. Avatar
    smitha says:

    I am not at all surprised by Vairamuthu’s remarks. He is a pseudo secularist. He wrote a song in praise of Jesus Christ for the film “Minsraa Kanavu”.

    He wrote a song for the film “Neer Paravai”. On release of the song, a few Christian outfits in kanyakumari protested saying that it hurt their sentiments. Immediately, he deleted those lines from the lyrics.

    However, for the film “Periyar” , he wrote obscene lyrics about Lord Rama & Sita & stood by it.

    Today, he has criticized Aandaal.

    First & foremost, Dinamani is to blame for having invited him, knowing fully well what his true colors are.

    1. Avatar
      BSV says:

      However, for the film “Periyar” , he wrote obscene lyrics about Lord Rama & Sita & stood by it.

      இந்துக்கடவுளரகளையும் அக்கடவுளர்கள் பெயரால் காட்டப்படும் மூடநம்பிக்ககளையும் தன் வாணாள் முழுவதும் எதிர்த்து மறைந்த ஒருவரைப்பற்றிய வாழ்க்கை சரிதத் திரைப்படத்தில் இந்துகடவுளகளைப் போற்றி ப்ஜனையா பாடமுடியும்? அப்படியா வைரமுத்து எழுதியிருக்க வேண்டும்?

  5. Avatar
    BSV says:

    பாரதியாரும்தான் மாற்றினார். சிவாஜி சேனைக்கு ஆற்றிய உரை என்ற கவிதையில் இந்துத்வா நெடி பயங்கரமாக இருந்தது. அதைப்படிப்போருக்கு முசுலீம்களைப் போய் தாக்கிவிடவேண்டுமென்ற வெறியேற்படும்படி இருந்தது. அது பாரதி நடத்தும் பத்திரிக்கைவெளிவந்தவுடன் சென்னையில் சில முசுலீம்கள் பாரதியாரை நேரில் சந்தித்து தங்கள் மனக்குறைகளை எடுத்துச்சொன்னார்கள். பாரதியார் பின்னர் வெளிவந்த அக்கவிதையில் எந்தவிடங்களெல்லாம் அவர்கள் காட்டினரோ அவற்றையெல்லாம் மாற்றினார், இப்போது நாம் வாசிப்பது அதே.

    இதையேன் வைரமுத்து செய்தால் கோபம்? நீர்ப்பறவை படத்தில் வரும் பாடலில் உள்ள கருத்துக்களுக்கு எதிர்ப்பு ஏன் என்று அவரிடம் சொல்லப்பட்டது. அவருக்கு கொலை மிரட்ட்டல் விடப்படவில்லை. எனவே மாற்றினார். அப்படி கிருத்துவர்கள் கோபம் கொண்டார்கள் எனப்து மக்களுக்குத் தெரியாது. எனவே அது அமைதியாக நடந்தது.

    ஆனால் இங்கே வைரமுத்துவிடம் எவரும் அமைதியான முறையில் கோரிக்கை வைக்கவில்லை. மிரட்டினார்கள். நாக்கை வெட்டுவோம் என கொலைமிரட்டல் விட்டார்கள். ஆர்பாட்டம் நடாத்தினார்கள். பொதுமேடையில் தேசிய கட்சியில் இந்திய செய்லாலளரான ஹெச் இராஜா, வைரமுத்துவுக்கு மிரட்டல் மட்டும் விடவில்லை. வைரமுத்துவின் தாய், அவரின் முன்னொர் பெண்கள் அனைவரின் களவொழுக்கத்தையும் கேள்வி கேட்டார். காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆக, வைரமுத்து கையை விட்டு பொதுவெளிக்குச் சென்றபின் வைரமுத்து செய்தார் என்ற கேள்வியே நீர்த்துவிடுகிறது.

    திரைப்பாடலாசிரியர் ஓர் எழுத்தாளர். எழுத்தாளர்களின் இருவகை. ஒருவர் எழுத்தையே தொழிலாகக் கொண்டவர். மற்றொருவர் ஒரு நிர்ந்தர வேலைபார்த்துக்கொண்டே ஒழிந்த நேரங்களில் எழுத்தாளர். வைரமுத்து தமிழக அர்சு செயலகத்தில் வேலையில் இருந்து பின்னர் முழு நேர எழுத்தாளர் ஆனார். திரைப்பாடல்களைத் தவிர பிற இலக்கியங்களையும் எழுதி அந்நூல்கள் வெகுவாக நூல் கண்காட்சியின் இப்போது விற்பனையாகின்றன. அவர் வெறும் திரைப்படப்பாடலாசிரியர் என்பது வேடிக்கை பேச்சு.

    திரைப்பாடலாசிரியர் இலவசமாக எழுதிக்கொடுக்கவேண்டுமெனப்து மூடத்தனம். அவர் பணத்துக்காகத்தான் எழுதுவார். அது இரகசியச்செய்தியன்று. ஆக ஒரு படத்துக்கு அதற்குத்தக்கவாறு எழுதுவது; அல்லது தான் விரும்பியவாறு எழுதுவது என்பது சரியே. அவர் அப்படி எழுதக்கூடாதென்பது தாலிபானித்தனம். சுமிதா ஆஃகானிஸ்தான் போய் தன் சேவையை ஆற்றலாமே?

  6. Avatar
    smitha says:

    இந்துக்கடவுளரகளையும் அக்கடவுளர்கள் பெயரால் காட்டப்படும் மூடநம்பிக்ககளையும் தன் வாணாள் முழுவதும் எதிர்த்து மறைந்த ஒருவரைப்பற்றிய வாழ்க்கை சரிதத் திரைப்படத்தில் இந்துகடவுளகளைப் போற்றி ப்ஜனையா பாடமுடியும்? அப்படியா வைரமுத்து எழுதியிருக்க வேண்டும்?

    BSV,

    Now you have answered the question yourself. Dinamani had invited Vairamuthu to speak on the greatness of Aandaal. Is this the place for him to criticize Aandal?

    Then why do you defend him?

  7. Avatar
    smitha says:

    BSV,

    You have totally missed the point here. Bharathi made changes on realising that he had hurt muslim sentiments.

    ok.

    Vairamujtis; case is different. He was invited to speak on the greatness of Aandaal. He agreed & should have done as expected, but what did he do? He chose to malign here, that too by quoting some God forsaken book. What was the need to do so?

    Also, once he came to know it hurt the sentiments of Hindus, he should have apologized, bu did he do so?

    No. He simply expressed regret.

    There is a huge difference between regret & apology. I do not want to take an English class here. U are not worth that time.

    Also, Neer paravai was not a movie on christian beliefs. It was basically about the plight of fishermen. Christians openly criticized & this was published in the newspapers. Maybe you did not read it. Can’t help it.

    Those lyrics were approved by the director & even the censor board. Vairamithu could have stuck to the “freedom of expression” excuse which he had done for Periyar.

    Why did he not say so? He apologized & changed the lyrics.

    That is pseudo secularism. When you mean freedom of expression, it applies equally to all religions, not just to Hinduism.

    ஆனால் இங்கே வைரமுத்துவிடம் எவரும் அமைதியான முறையில் கோரிக்கை வைக்கவில்லை. மிரட்டினார்கள். நாக்கை வெட்டுவோம் என கொலைமிரட்டல் விட்டார்கள்.

    Many religious pontiffs have criticised & organised protests & fasts. Are they not peaceful? Just bcos H.Raja & some small outfits issued death threats, it does not mean it is approved by the vast majority.

    Do not try to divert the topic.

    BTW, u mentioned Afghanistan. Try talking like this there. U will know what will happen.

    Vairamuthu has sinned & he must be punished. He will be.

    1. Avatar
      BSV says:

      I’m taking now an English class to you. Listen. To regret is a better and likeable verb in this context than the verb to apologize. One can tender apology w/o feeling regret but can’t regret w/o putting heart into it. Regret comes from heart and apology can be formal and a clever pretension, given only because it was coerced. You’re cheated like a child. Since you don’t know the difference between regret and apology you want him to apologize than regret.

    2. Avatar
      BSV says:

      ‘Raja and small outfits… it doesn’t mean it is approved by vast majority’? I laughed at this when I read. Who’s that vast majority? Is there any system of approval in this religion? That’s why I wanted you to join Talib and and join their religion. In Hindu region there’s no authority ad no approval. Don’t treat us as idiots. Not only Raja and some outfits but religious leaders went on fast:thousands of brahmins led by jeeyars agitated on streets in many cities and towns and traffic came to halt:F I Rs were lodged in three police stations,threats to his life were issued:and case was taken up by High Court from a petition. You’re attempting to fool people here. Did the Christians stopped traffic:filed cases? Issued life threats to him? Show me the pictures. Neerparavai is both Christian a D fishermen issue based film.

      1. Avatar
        BSV says:

        He was called to speak on Andal as Tamil poet, not as an Alvar,the religious icon. The title given to him or chosen by him clearly indicates he was going to take her only as a great Tamil poet. Being an atheist he can’t speak on religious icon. The crowd gathered to listen to a flowery Tamil ovation from a poet on a great poet Andal. It’s not a religious gathering. In such a speech, there’s no hard and fast rule that he shouldn’t go to a historical point regarding her end. Whatever source he quoted he finished it saying ‘I don’t agree with it:yet her end will be a case point for those groups interested in feminism and social inequality’ He was correct. You may now gag mouths but Anda all is an open book and will remain so to be an interesting subject from the point of social history of TN. It was out and out the mistake of people like you to have assumed that it was on a religious figure. It’s a literary meeting

  8. Avatar
    smitha says:

    BSV,

    When a Danish cartoonist made a cartoon on the prophet, a AP MLA openly issued a fatwa. Tasleema Nasreen was beaten by in a press conference in full view of the cameras by a congress muslim MLA & his cohorts.

    Muslims held Chennai city to ransom for half a day when they laid siege on American consulate just bcos someone posted a video on you-tube.

    India was the first country to ban satanic verses even before it was published.

    What were you guys doing then?

    Taking a walk?

    1. Avatar
      BSV says:

      What do you want to say? To do as Muslims did? Why can’t you be open and say Hindus like you should also do as Muslims? Why are you afraid of saying that?

  9. Avatar
    Rama says:

    Smitha, I am totally with you on this. BSVs of the world do not have the stomach or the spine to crtitizise Christian, Islamic atrocity. ( he is a crypto Christian, had appeared in various avatars in Tamil Hindu). It would show his true bleeding heart secular credentials only if he fronts up the Muslims outside their mosques after their Friday prayer and tell them that hounding of Taslima Nasrin/ Salman Rushdie was wrong. Plus he should emphasise that Muslims should have the freedom to leave Islam without retribution. If he survives that and report back to us in one piece, then only I will consider him a true hard core secularist.Otherwise, all the blabbering from him amounts only that of the barking of dogs( but the caravan had in fact disappeared) Put the money where your mouth is a common saying here in Australia. All bleeding hearts, candle kissers and me too mob can now stop advising us Hindus about tolerance and our supposed acts of violence (!!!). You have foregone that right a long, long time ago.

  10. Avatar
    smitha says:

    BSV,

    You have given a new definition for regret & apologize. When you regret, you simply mean you should not have said it. But when you apologize, it means that you are sorry that you have hurt the other person’s sentiments/beliefs.

    The reason is that in the case of apology, the person’s ego is involved.

    Anyway, you can bring out a new dictionary.

  11. Avatar
    smitha says:

    BSV,

    Even going by your admission that it was only a literary meet & not a religious one, where was the need to speak about her ancestry?

    He could have stopped about speaking on her literary merits. Also, he has quoted from a book which has no basis whatsoever. In fact. the publishers are contemplating legal action against him.

    You asked me whether hindus must also do as muslims do?
    Definitely not.

    I am only saying that the silence of hindus should not be construed as weakness. As a secularist (of course, you are not one), why did you not question the other religious communities?

    What was your tongue doing then?

    oh..oh.. now you will say that my mouth only speaks, not my tongue… english, English… :-)

    1. Avatar
      BSV says:

      இனி தமிழில் எழுதினால் மட்டுமே என் பதில்கள். நான் ஆங்கிலத்தில் எதிர்வினைகள் வைக்கும்போது உங்களை ஆங்கிலத்தில் எழுத தூண்டுவதாக இருக்கிறது. இதுதான் என் முடிவு. நீங்கள் எழுதியவைகளுக்கு அருமையான‌ பதிலகள் என்னால் அட்டகாசமாக ஆங்கிலத்தில் வைக்க முடியும். ஆனால் ஆங்கிலத்துக்கு இங்கு மரியாதை கொடுப்பதை இனி நான் நிறுத்திவிட்டேன். என் ஆங்கில வளைபதிவு இருக்கிறது. அங்கு போய் என் ஆங்கிலத்தை வாசித்துக்கொள்ளலாம். இங்கன்று. ஆங்கிலத்தில் வைக்கப்படும் கருத்துக்கள் இனி என்னால் நிராகரிக்கப்படுகின்றன. There is no effective deterrence than indifference.

      1. Avatar
        ஷாலி says:

        BSV அவர்களே! தங்கள் முடிவு நல்ல முடிவு.சிலருக்கு தமிழில் எழுதுவது அலர்ஜியாக இருக்கும்.இவர்கள் எல்லா உலக கல்வியையும திரை கடலோடி திரவியம் தேட கற்றுக்கொள்வார்கள்.ஆனால் தமிழில் மட்டும் தட்டினால் கெட்டுப் போய் விடுவார்கள்.

        தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுவதில் சிரமம் இருப்பது போல் தமிழில் தட்டச்சு செய்யவும் சிலருக்கு சிரமம் இருப்பது புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

  12. Avatar
    Rama says:

    “நீங்கள் எழுதியவைகளுக்கு அருமையான‌ பதிலகள் என்னால் அட்டகாசமாக ஆங்கிலத்தில் வைக்க முடியும்”
    BSV, it looks like modesty is not exactly your forte! Looks like another cop out to me!

  13. Avatar
    smitha says:

    BSv

    Since you are unable to defend yourself, you are giving excuses. Anyway, I do not need to take English lessons from you, of all persons.

    U can save that for your fellow jalra “pseudo secularists”.

  14. Avatar
    admin says:

    தமிழில் உங்கள் கருத்துக்களை வையுங்கள்.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *