தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?

Spread the love

துக்காராம் கோபால்ராவ்

நான் முன்பு எழுதிய கட்டுரையை பற்றி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவர் சமீபத்தில் ஒரு சர்ஜரி செய்துவிட்டு ஓய்வெடுத்துகொண்டிருக்கிறார். அவரிடம் அவரது மருத்துவர் நிறைய பால் குடியுங்கள் என்று ஆலோசனை தந்திருக்கிறார். காரணம் அவருக்கு ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் இருக்கிறது (osteoarthritis) https://www.webmd.com/osteoarthritis/default.htm

அவரது எலும்புகள் பலவீனமாக ஆகியிருப்பதால், அவர் மாட்டுப்பால் குடிக்கவேண்டுமென்றும், அடிக்கடி எலும்பில் உள்ள அடர்த்தியை அளந்துகொள்ளவேண்டுமென்றும் ஆலோசனை தந்திருக்கிறார்கள்.

அதனால், அவர் என்னை அழைத்து, நீங்கள் பால் குடிக்காமல் இருந்து, உங்களது எலும்பு அடர்த்தியை இழந்துவிடப்போகிறது; எதற்கும் அடிக்கடி எலும்பு அடர்த்தியை அளந்துகொள்ளுங்கள் என்று அன்புக்கட்டளை இட்டார்.

இது சம்பந்தமாக மருத்துவ பக்கங்கள் என்ன சொல்லுகின்றன என்று தேடினேன்.

ஆஸ்டியோ போரோஸிஸ் என்னும் எலும்பு அடர்த்தி இழப்பு பற்றிய மருத்துவ இணையப்பக்கம் சிறப்பான செய்தியை தருகிறது.

https://www.webmd.com/osteoporosis/news/20141029/is-milk-your-friend-or-foe#1

பல ஆய்வுகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், மாட்டுப்பால் குடிப்பது உடல் நலத்துக்கு கெடுதி என்று இந்த மருத்துவ பக்கம் தெரிவிக்கிறது.

முந்திய ஆய்வு ஒன்று மாட்டுப்பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோஸிஸை தடுக்கிறது என்று கண்டறிந்தது. இதனால், அமெரிக்க சுகாதார அதிகாரிகள் பால் சாப்பிட பரிந்துரைத்தார்கள்.

ஆனால் சில புது ஆய்வுகள் நிறைய மாட்டுப்பாலை குடிப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆஸ்டியோ போரஸிஸ் வருவதை தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்த ஆய்வு காலத்திலேயே ஏராளமானவர்கள் இறப்பதற்கும் காரணமாக இருந்தது என்று கண்டறிந்தன.

ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் https://www.hsph.harvard.edu/nutritionsource/calcium-full-story/ ஆஸ்டியோபோரோஸிஸ் என்னும் எலும்பு அடர்த்தி இழக்கும் நோய்க்கு மருந்தாக ஐந்து விஷயங்களை குறிப்பிடுகின்றன.
1. அடிக்கடி உடற்பயிற்சி செய்வது.
2. தேவையான அளவு விட்டமின் டி மாத்திரைகள் அல்லது சூரிய வெளிச்சத்தில் நிற்பது. (சூரிய வெளிச்சத்தில் நின்றால் நமது உடல் தானாகவே இதனை உற்பத்தி செய்துகொள்கிறது).
3. தேவையான அளவு கால்சியம் உள்ள உணவுகளை உண்பது.
4. தேவையான அளவு விட்டமின் கே (vitamin k) எடுத்துகொள்வது. இது பச்சை கீரைகளில் நிறைய உள்ளது. வைட்டமின் கே என்பது, வாழைப்பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத்தண்டு, நெல்லிக்காய், கொய்யா, மொச்சை, புளிச்சகீரை ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது.
5. விட்டமின் ஏ (vitamin A) தேவையான அளவு மட்டுமே எடுத்துகொள்வது. இது அதிகமாக எடுத்துகொள்ளக்கூடாது.

இதில் முக்கியமாக கால்சியம் பற்றி பார்த்தால், கால்சியம் எடுத்துகொள்வதற்கும் எலும்பு முறிவுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதை ஆய்வுகளில் அறிந்தார்கள். சொல்லபோனால், விட்டமின் டி இல்லாமல் கால்சியம் மட்டுமே எடுத்துகொள்பவர்கள் அதிகமான எலும்புமுறிவுகளுக்கு ஆட்பட்டார்கள் என்றும் ஆராய்ச்சியில் கண்டறிந்தார்கள்.

அதிகம் மாட்டுப்பால் சாப்பிடுவதும் அதிகமாக எலும்பு முறிவுக்கு உள்ளாவதும் தொடர்புடையது என்று இந்த அட்டவணை கூறுகிறது
http://www.nature.com/bonekeyreports/2016/160629/bonekey201630/fig_tab/bonekey201630_T1.html
குறைவாக மாட்டுப்பால் சாப்பிடும் நாடுகளில் மிகக்குறைவாகவே எலும்புமுறிவு எண்ணிக்கைகள் இருக்கின்றன.

மேலும் மாட்டுப்பாலை விட அதிகமாக கால்சியம் இருக்கும் உணவுகள் இருக்கின்றன.
https://www.nof.org/patients/treatment/calciumvitamin-d/a-guide-to-calcium-rich-foods/
http://www.eatthis.com/calcium-rich-foods-not-dairy/
1. பச்சை கீரைகள்
2. புரோக்கலி (காலிபிளவர் மாதிரி இருக்கும் ஆனால் பச்சையாக இருக்கும்)
3. மொச்சைக்கொட்டைகள் (black eyed beans)
4. வெள்ளை மொச்சை (white beans)
5. எள் விதைகள்
6. பாதாம் பருப்புகள்
7. ஆரஞ்சு பழங்கள்
8. சர்க்கரை வள்ளிக்கிழங்கு
9. அத்திப்பழம்
10. கேரட்
11. பீன்ஸ்
12. சூரியகாந்தி விதைகள்
13. வெண்டைக்காய்
14. மீன்கள்

தமிழர்கள் அதிகம் எடுத்துகொள்ளும் இஞ்சி, கரும்பு, கோதுமை, ராகி, பீட்ரூட், வெங்காயம், கேரட் போன்றவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகம்.

ஆனால் பொதுவாக மாட்டுப்பாலில் மட்டுமே கால்சியம் இருப்பது போன்ற ஒரு பிரமை அனைவரிடமும் இருக்கிறது.
மாட்டுப்பால் மூலமாக கால்சியம் பெறுவது பல சிக்கல்களை கொண்டது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
https://www.hsph.harvard.edu/nutritionsource/calcium-full-story/
மாட்டுப்பால் அருந்துவது மிக அதிகமாக கர்பப்பை புற்றுநோய் வர சாத்தியங்களை பெண்களுக்கு அதிகரிக்கிறது என்று கூறுகிறது.
ஆண்களுக்கோ மிக அதிகமாக புரோஸ்டெட் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது.

மாட்டுப்பால் அருந்துவது நீரழிவு நோய் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
https://www.webmd.com/osteoporosis/news/20141029/is-milk-your-friend-or-foe#1
https://nutritionfacts.org/video/does-bovine-insulin-in-milk-trigger-type-1-diabetes/

ஆகவே கால்சியம் வேண்டுமென்பதற்காக மாட்டுப்பால் என்பது தவறான சிந்தனை.

உபரி செய்தி:
இதுவரை பல நண்பர்கள் தொடர்பு கொண்டு மாட்டுப்பாலை நிறுத்தியதும், சுமார் 5 கிலோ எடை குறைந்துவிட்டது என்று கூறினார்கள். நான் மாட்டுப்பாலை நிறுத்தியதும், சுமார் 5 கிலோ எனக்கு எடை குறைந்தது. ஆனால் அது அப்படியே இருக்கிறது. அதற்கு மேல் எடை குறையவில்லை. அதிகரிக்கவும் இல்லை. இது ஒரு தனிப்பட்ட செய்தியாக இருக்கும் என்று அதனை முந்திய கட்டுரையில் சேர்க்கவில்லை. தேடியதில் இது சம்பந்தமான ஆய்வு ஒன்றையும் காண நேர்ந்தது.
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/06/06/AR2005060601348.html
வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி ஒன்று, அதிகம் பால் சாப்பிடுவது சிறுவர்கள் குண்டாக வழி வகுக்கிறது என்று கூறுகிறது.

Series Navigationஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!மதுவும் கல்லீரல் செயலிழப்பும்

One Comment for “மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?”

 • சிவசங்கரன் says:

  பால் மட்டும்தான் பிரச்சனையா ? தயிர், மோர், வெண்ணை, நெய், பனீர் ஆகியவற்றை உண்டாலும் இந்நோய்கள் வருமா ?

  இதை கட்டுரை என்றே கூறமுடியாது. இனையத்தில் இருக்கும் ஐந்து ஆறு சுட்டிகளும் அவற்றை பற்றிய குறிப்புகள் தான் இது.

  Bio Availability, Serving Sizes and Number of daily servings, Nutrition Density, Daily Requirement போன்றவகளை கருத்தில்கொள்ளவே இல்லை என்று படுகிறது.

  1. கல்சியம் மட்டும் அல்லாமல் விட்டமின் டி, மக்னீஷியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு தேவை என்று ஆய்வுலகம் கூறுகிறது. எனவே அதற்கான உணவுகளையும்

  2. கல்சியத்திற்கு மாட்டுப்பாலை மட்டுமே சார்ந்திராமல் பல்வேறு வகை உணவுகளையும் சேர்த்துக்கொண்டு

  3. Strength exercises, Cardiac exercises , flexibility and Stability exercises ஆகிய நான்கு வகை உடற்பயிற்சிகளையும் வாழ்க்கை முறையில் செய்துகொண்டு

  4. மற்ற ஊட்டச்சத்துகள் உணவுகளின் இடைத்தாக்கங்கள்(interactions) , inhibitors ஆகியவற்றையும் கருத்தில்கொண்டு உணவுத்திட்டமிட்டு

  வாழ்ந்தால்தான் எலும்புகளுக்கு கல்சியம் சரியாக சேரும்.
  உண்மை என்னவென்றால் ஆரோக்கியத்தை புரிந்துகொள்ள வாழ்க்கையை பற்றிய முழுமைநோக்குடன் தேவை.

  பால் , பால் பொருட்களும் மட்டுமே கல்சியத்திற்கான உணவு மூலங்கள் இல்லையென்றாலும் அவை நல்ல மூலங்கள்தான். they are good sources indeed.

  பால் உட்கொள்வதால் சில நோய்களுக்கு சாத்தியங்கள் உள்ளன என்றும், சில நோய்களுடன் correlation உள்ளன என்றூம் தான் கூறபடுகிறது. உறுதிசெய்யபடவில்லை. எனவே தெரிந்த பால் உற்பத்தியாளரிடம் இருந்து வாங்கி அளவுடன் பால் உட்கொண்டால் நன்மையே விளையும். மிட்டாய் கடைகளில் நிரம்பி கிடக்கும் பால் இனிப்புகளை எடுத்துகொள்ளாமல் இருப்பது நல்லது


Leave a Comment

Archives