தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

வெங்காயம் — தக்காளி !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Spread the love

 

” வெங்காயம் — தக்காளீ…” என்ற

 

தள்ளுவண்டி வியாபாரி ராஜசேகரின்

கம்பீரமான குரல்

அவ்வூருக்கு மிகவும்

பரிச்சயமானதுதான்

 

விளையாட்டு போல்

இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன

ராஜசேகருக்குச் சில

வாடிக்கையாளர்கள் உண்டு

அதிலும்

கட்டிட ஒப்பந்தக்காரர்

ஸ்ரீராம் வீடு முக்கியமானது

மிக முக்கியமானது

 

வாரத்திற்கு இரண்டு கிலோ வெங்காயம்

இரண்டு கிலோ தக்காளி

வாங்குவார் அவர்

விலை ஏற்ற இறக்கம் பற்றிய

எந்தக் கவலையும் இல்லை

 

பணம் மாதா மாதம்

மிகச் சரியாக வந்துவிடும்

முன் பணமும் வாங்கிக் கொள்ளலாம்

 

வீட்டு வாசலில் உள்ளபிளாஸ்டிக் வாளியில்

வைத்துவிட்டுப் போய்விடுவார்

 

முதல் நாள் வியாபாரத்தில்

” எடை சரியா இருக்கணும் …

வீட்டில் தராசு வைத்திருக்கிறேன் … ”

என்றார்  வீட்டுக்கார அம்மா

 

 

தீபாவளி – பொங்கலுக்கு

ராஜசேகருக்கு ரூ. 100

அன்பளிப்பு உண்டு

 

— ஒரு மாதமாக

அவருக்கு சிறு வருத்தம்…

ஸ்ரீராம் குடும்பத்துடன்

ஓய்வுக்காக

சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்

 

இன்றுகூட

அந்த வீட்டு வாசல் வரும் முன்

வழக்கம்போல் கூவல் விட்டார்

கதவு பூட்டியே இருக்கிறது

 

வசதியான வாடிக்கையாளர்

நேர்மையான வியாபாரி

மனிதர்களின் உயர் பண்புகளில்

ராஜசேகர் மனம் மகிழத்தான் செய்தது

 

 

 

Series Navigationவாழ்க நீபின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி

3 Comments for “வெங்காயம் — தக்காளி !”

  • S.Arputharaj says:

    தக்காளி-வெங்காயம் கவிதை மிக அருமை. அனுபவ பூர்வமான கவிதை வரிகள்.நன்று.

  • BSV says:

    உரைநடைச் சொற்றொடர்களை மடித்துமடித்துப் போட்டெழுதி கவிதை என்ற வட்டத்துக்குள் பட்டமாக விட முயல்கிறார் ! வசன கவிதை என்று சொல்லக்கூட அதில் கவிதை நயமில்லையே! கருத்தைச்சொல்ல மட்டுமென்றால் அது உரைநடையில்தான் இருக்கவேண்டும். கவிதை என்ற நாடகமேன்?


Leave a Comment to S.Arputharaj

Archives