தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

மாற்றம் !

Spread the love

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

எதுவும் நிரந்தரம் இல்லை
என்ற உண்மை ஒரு புதுமலர்
வாடி வதங்குவது போல
பல கோணங்களில்
நம்மை வந்தடைகிறது

நட்பில் முட்கள் பூத்துச் சிரிக்கின்றன
காதல் கைத்துப் போனவன்
பெண்ணைச்
சித்தர் சொற்களால் திட்டுகிறான்

மனித உறவுகளில்
துரோகத்தின் நிறம்
எப்போதும் பூசப்படுகிறது

வீட்டை விற்றபின்
அதன் விலை மிக உயர்ந்து
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது

நம் திட்டங்களின் பட்டியல் மாறி
நம்மைக் கேலி செய்கிறது

இழப்பு சுமையை அதிகரிப்பதும்
சுமை பலவற்றை இழக்கச் செய்வதும்
தொடர்கின்றன

மாற்றம் மட்டும் எப்போதும்
மனித உறவுகளில்
துரோகத்தின் நிறம்
எப்போதும் பூசப்படுகிறது

வீட்டை விற்றபின்
அதன் விலை மிக உயர்ந்து
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது

நம் திட்டங்களின் பட்டியல் மாறி
நம்மைக் கேலி செய்கிறது

இழப்பு சுமையை அதிகரிப்பதும்
சுமை பலவற்றை இழக்கச் செய்வதும்
தொடர்கின்றன

மாற்றம் மட்டும் எப்போதும்
சாசுவதம் ஆகிறது !

Series Navigationகம்பன் கழகம் காரைக்குடி கம்பன் திருவிழா, முத்துவிழா அழைப்புஇளையராஜாவின் இசை: பிரேம் ரமேஷ் முன்வைத்தவை

One Comment for “மாற்றம் !”

  • எஸ்.அற்புதராஜ் says:

    மாற்றம் எப்போதுமே மகிழ்ச்சியற்றதாகவே அமைந்துவிடுவது நிரந்தரம் தானா? ஒருபோதும் மகிழ்ச்சியளிப்பதில்லையா? என்ற கேள்விக்கு பதில் உண்டா?


Leave a Comment

Archives