தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 ஆகஸ்ட் 2019

யான் x மனம் = தீா்வு

Spread the love

ரகுநாதன்

என்னையே
எனக்குள்
தேடுகின்றேன்.

தேடுகின்ற
தேடுபொறியாய்
மனம்
உலாவிச்செல்கிறது.

ஒவ்வொரு
தோல்விக்கும்
காரணம்
காட்டுகின்றது.

நீ
உன்னையே
இழந்த தருணத்தில்
தோல்வியைத்
தழுவிச்செல்கின்றாய்

உன்னையே
சீா்தூக்கி
ஆராய்கின்ற
துலாக்கோலாய்
காட்சியளித்தபோது
வாகை சூடினாய்.

உன்னையே
அறியாமல்
மனத்தை
தொலைத்தபொழுது
பித்தனாய்
பிதறுகின்றாய்.
நிலையறிந்த
ஆதிசிவனோ
தொடா் சோதனைக்கே
ஆட்படுத்துகின்றான்.

தவறுகள் செய்ய
மனம்
நினைத்தபொழுதெல்லாம்
கடவுளாய் தடுத்தார்.

சூழ்நிலைகள்
தவறுகள் செய்ய
துண்டலாய்
தூரிதமானபொழுது
மனம்
நடுவுநிலையாய்
தடுத்தாண்டது.

உன்னுடைய
குறைகளை
அறிந்த
இறைவனோ
சோதனை ஓட்டத்தைத்
தொடருகின்றான்
மங்கையா்களின்
விழிகளில்…..

இறைவனின்
சோதனை ஓட்டத்தையும்
வெற்றிகொள்கின்றாய்…..

இறைவனிடமே
வினாவும்
எழுப்புகின்றாய்….

எந்த
பெண்ணின்
நீண்ட கால
தவவலிமையோ….
என்னுடைய
ஆழமான காதல்
தோற்றுப்போகின்றது
என்கின்றாயே………

தோழன்
தோள் கொடுத்தான்
அறிவுரைகளில்…….

சிறந்த சிற்பியாய்
உளிப்போன்ற
வார்த்தைகளால்
சிற்பமாக்கினான்
மனதை……..

தோழமையில்
வஞ்சப்புகழ்சியில்லாமல்
இடித்துரைக்கின்ற
பாங்கனாய்.

போதிக்கின்ற
போதிதர்மனாய்
உபதேசத்தில்
புத்தனேயே
தோ்ந்தெடுத்தாய்…….

ஆளுமையை
அள்ளித்தந்த
அரிதாரம் தழுவாத
அவதாரத் தோழன்
கிருட்டினன்.

குருவின்
காலடியில்
சரண்புகுந்தாய்.
எண்ணங்களில்
ஏற்றம்பெற்றாய்………..
மாற்றத்தை
விரும்பாத நீ
மாற்றத்தையே
உருவாக்குகின்றாய்……
செயல்களில்.

குரு
மனதிற்குள்
பிம்பமாய்
நிலைத்தபொழுது
தொடா்வெற்றியை
தொட்டுச்சென்றாய்……

பிம்பத்தை
மனதைவிட்டு
விலக்கிய நிலையில்…..
தோல்வியில்
துவண்டழுகின்றாய்………..

பேராசனின்
போதனைகள்
ஒவ்வொன்றும்
பரந்தாமன்
அர்சுனனுக்கு
உபதேசித்த
உபதேசமேயாகும்.

வாழ்க்கையை
சிறுபிள்ளை
விளையாட்டாய்
விளையாடுகின்றாய்……
எதிர்காலத்தின்
நொடிமுள்ளின்
வேகமறியாமல்
வாலிபத்தை
இழக்கின்றாய்…..

ஒவ்வொரு
முற்சியிலும்
தோல்விகள்
தொடா்ந்தாலும்
அனுபவமாய்
ஆராதிக்கின்றாய்……

தவறுகள் செய்வது
தவறில்லை….
அவை
போதித்த பாடத்தை
மறப்பதே தவறு
என்கின்றாயே……..

தன்னம்பிக்யை
தொலைவில்
இழந்த நிலையில்

குருவின்
அரவணைப்பு
அகழியைக் கடக்கும்
ஆா்வத்தையும்
அள்ளித்தந்த
வானத்தையும்
வளைக்கும்
பேராற்றலாய்
உருமாற்றம்
யான் கொண்டேன்.

Series Navigationபொம்மைகள்மூன்று முடியவில்லை

One Comment for “யான் x மனம் = தீா்வு”


Leave a Comment

Archives