தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

பருப்பு உருண்டை குழம்பு

Spread the love

தேவையானவை –
உருண்டை செய்ய:
கடலைப்பருப்பு – முக்கால் கப்,
துவரம்பருப்பு – கால் கப்,
சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் தேக்கரண்டி,
இஞ்சி – சிறிய துண்டு,
வெங்காயம் – ஒன்று பொடியதாக நறுக்கியது,
உப்பு – தேவையான அளவு.

குழம்புக்கு:
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
சோம்பு, அரை தேக்கரண்டி,
கசகசா – அரை தேக்கரண்டி,
பெரிய தக்காளி, ஒன்று பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – ஒன்று பொடியாக நறுக்கியது,
புளி – மேஜைக்கரண்டி அளவு,
மிளகாய்த்தூள் – ஒன்றை தேக்கரண்டி,
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,
கரம் மசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 5.

செய்முறை:
உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு வெங்காயம் தவிர மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். மெல்ல வேகும்படி நேரடியாக குழம்பில் போட்டும் வேக வைக்கலாம். அதற்கு நேரமும் பக்குவமும் சரியாக இருக்க வேண்டும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.


இந்த உருண்டையை வேக வைக்காமல், ஊறவைத்த கடலைப்பருப்புக்களில் சிறிதளவு பிரட்டி எடுத்து எண்ணெயில் தனியாக பொரித்து எடுத்து தனியாக பரிமாறலாம்.

Series Navigationசெவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்

Leave a Comment

Archives