தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

உயிர்த்தோழி

பிச்சினிக்காடு இளங்கோ

 

 

தொடக்கம்: 31.1.2019)

 

 

நீ எனக்கும்

நான் உனக்கும்

வாய்த்தது வரம்

 

பெருமையாய்ச்சொன்னால்

பிறவிப்பயன்

 

உனக்கு நான்

ஒரு பொருட்டல்ல

எனக்கு நீ

பொருள் ,புகழ்

 

உனக்கு நான்

என்பதைவிட

எனக்கு நீ

எல்லாம்..

 

உன்னால்

உலவும்போதும்

உன்னோடு

குலவும்போதும்

மெளனமாய்

எதிரிகள் உருவாகிவிடுகிறார்கள்

 

 

கவலையில்லை

இருமடங்கு

ரசிகர்கள் கிடைப்பது

ரகசிய அதிசயம்

 

பயணங்களில் எல்லாம்

எனக்குப்

பரிசுகள் வரவு

 

பொறாமைக்காரர்களால்

பொருள்வரவுக்குத்தான் இழப்பு

புகழ்வரவு

உன்னால் தொடர்கிறது

 

என்

அடர்த்தியைக்கூட்டினாய்

என்

சுவாசத்தை

அர்த்தப்படுத்தினாய்

 

உன்வழியாய்

என்வழியை வகுத்து

நொடிகள்தோறும் விதைத்து

காலத்தில்

காலூன்றி யதே வெற்றி

 

Series Navigationபிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் ?மாயக்கனம்

Leave a Comment

Archives