கஸ்வா ஈ ஹிந்த் – கம்யூனிஸ்டுகள்

This entry is part 5 of 9 in the series 10 மார்ச் 2019

பி எஸ் நரேந்திரன்

Ghazwa-e-Hind என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஹிந்துக்கள் இந்தியாவில் இருக்கிற வரையில் அவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள். பாகிஸ்தானிகளை ஆதரித்து மீம்ஸ்களும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களும் போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் கஸ்வா-எ-ஹிந்த் என்கிற வார்த்தையின் பயங்கரத்தை அவர்கள் அறிந்தார்களில்லை. அறிந்து கொள்ளவும் முயன்றார்களில்லை என்பதுதான் பரிதாபம்.

முதலில் இந்த கஸ்வா-எ-ஹிந்த் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

முகமது நபி கூறியதாகச் சொல்லப்படும் இஸ்லாமிய ஹதீஸ் ஒன்று இந்தியாவில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடைய நடக்கவிருக்கும் ஒரு பெரும் போரினைப் பற்றிச் சொல்கிறது. அந்தப் போர் முடிந்த பிறகு இந்தியா முழுமையும் இஸ்லாமியர்கள் வென்றெடுப்பார்கள் எனவும், உலகம் முடிவடைவதற்கு சிறிது காலம் முன்பு இது நடக்கும் எனவும், இந்தியா ஒரு இஸ்லாமிய காலிஃபேட் நாடாக மாறி முகமது நபி காலத்திய ஷரியா சட்டங்கள் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.

சிரியாவில் ஆரம்பமாகும் இந்தப் போர் ஜெருசலேம் வழியாக இந்தியாவை வந்தடையும் எனவும், இஸ்லாமிய போராளிகள் இந்தியாவை அழித்துக் கொள்ளையடித்த பின்னர் அந்தச் செல்வத்தைக் கொண்டு ஜெருசலேம் அலங்கரிக்கப்படும் எனவும் விளக்குகிறது.

இதுதான் கஸ்வா-எ-ஹிந்த். அதாகப்பட்டது காஃபிர்களான ஹிந்துக்களை அழித்து, அவர்கள் வழிபடும் ஆலயங்களை இடித்து, காஃபிர்களான ஹிந்து ஆண்களைக் கொன்ற பின்னர் அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தும் அவர்களின் மனைவி, குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையே கஸ்வா-எ-ஹிந்த் என்கிறது மேற்படி கஸ்வா-எ-ஹிந்த்.

“Armies carrying black flags will come from Khurasan, India would become part Khursan no power will be able to stop them and they and later India would become fully Islamic state later Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains. And Allah would forgive those warriors (by the Blessing of this Great War). And when those Muslims would return, they would find Isa Ibn Maryam [Jesus] in Syria.

இந்த ஹதீசை எத்தனை இந்திய முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பாகிஸ்தானிய முஸ்லிம்களும், அதன் ஆட்சியாளர்களும், அதன் ராணுவமும் முழுமையாக நம்புகிறது. பாகிஸ்தானின் நோக்கம் காஷ்மிரைப் பிடிப்பது மட்டுமல்ல. அதனையும் தாண்டி மொத்த இந்தியாவையும் பிடிப்பதுதான் என்பது மரமண்டைகளான இந்திய ஹிந்துக்களுக்குப் புரிவதில்லை. கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் தன்னைக் கொல்லக் காத்துக் கொண்டிருப்பவனின் கால்களை நக்கித் திரிகிறார்கள்.

இன்றைய இந்திய ஹிந்துக்களின் கழுத்துக்கு மிக அருகில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தி இந்த கஸ்வா-எ-ஹிந்த். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இதன் கொடூரத்தைக் இந்திய ஹிந்துக்கள் கண்டுகளிப்பார்கள் என்பது என்னுடைய எண்ணம். அதனைக் காண அனேகமாக நான் இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். ஆனால் இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கஸ்வா-எ-ஹிந்த் உங்களை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டே இருக்கிறது.

உலகின் ஒவ்வொரு ராணுவத்திற்கும் ஒரு சன்னதப்பாடல் இருக்கிறது. இந்திய ராணுவத்திற்கும் கூட. ஆனால் இந்திய ராண்வத்தின் சன்னதப்பாடல் நாட்டுப்பற்று மட்டுமே உடையது. எந்த மதத்தையும் சாராதது. ஆனால் பாகிஸ்தானிய சன்னதப்பாடலே கஸ்வா-எ-ஹிந்த்தான். காஃபிரி ஹிந்துக்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, அவர்களின் மனைவி, பிள்ளைகளை அடிமையாக்குவது ஒவ்வொரு பாகிஸ்தானிய ராணுவத்தினனது கனவும் கூட.

ஏனென்றால் அல்லா அளித்த ஹதீஸ் அவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்கிறது. நம்பிக்கையாளர்களை அல்லா கைவிட மாட்டான் என்பது அவர்களது நம்பிக்கை. இந்திய ராணுவத்தை எதிர்த்து இம்மையில் மறைந்தாலும் மறுமையில் அல்லா ஜன்னத்தில் தனக்கான 72 கன்னிகளுடன் காத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே இந்தியாவின் மீதான பயங்கரவாதத்தை அவர்கள் நிறுத்தவே போவதில்லை. அப்படியே நிறுத்தினாலும் அது தற்காலிகம்தான் என உணர்வாய் இந்திய ஹிந்துவே.

உலகத்திலேயே கஸ்வா-எ-ஹிந்த் ஹதீசை தனது சன்னதப் பாடலாக வைத்திருக்கிற ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் மட்டும்தான். இஸ்லாம் பிறந்த சவூதி அரேபியாவில் அது இல்லை என்பதினை இந்திய ஹிந்துக்கள் உணராத வரை அவன் தன்னைக் கொல்ல வரும் பாகிஸ்தானிகளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருப்பான். மீம்ஸ் போடுவான். ஃபேஸ் புக்கில் புகழ்ந்து எழுதித் தள்ளுவான். விதி வலியது. நானென்ன செய்ய?

https://rationalwiki.org/wiki/Ghazwa-e-Hind


கம்யூனிஸ்ட்டுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கம்யூனிஸம் முற்றிலும் ஒரு சர்வாதிகார இயக்கம். பொலிட்பீரோ என்று சில பல கிழட்டுப் பயல்கள் உட்கார்ந்து பேசி மக்களுக்கு என்ன தேவை என்று தீர்மானிக்கிற செத்துப் போன சித்தாந்தம். சென்ற நூற்றாண்டில் கம்யூனிஸ்ட்டுகளினால் உலகில் ஏற்பட்ட அழிவுக்கு இணையான ஒன்று வேறெதுவும் இல்லை.

ஹிட்லரின் நாஜிக் கொலைகாரக் கூட்டம் கூட இவர்களுக்கு அடுத்துதான். லெனினும், ஸ்டாலினும், போல்பாட்டும், மாவோவும், ஃபிடல் காஸ்ட்ரோவும், வெனிசூலாவின் ச்சாவோசும் இன்னபிற கம்யூனிச கபோதிகளும் பெரும் கொலைகாரர்கள். ஆட்சியைப் பிடித்த மறுகணம் கொலைகளைத் துவங்கிவிடுவார்கள் என்பது மீண்டும், மீண்டும் உலகில் நிரூபணமாகியிருக்கிறது.

இன்றைய “கம்யூனிச” சொர்க்கமான சீனாவில் ஜின்பிங் தன்னை ஒரு சர்வாதிகாரியாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். அதாவது அவர் விருப்பப்பட்டு விலகும் வரைக்கும் அவர்தான் அந்த நாட்டு அதிபர். எதிர்த்துப் பேசுபவன் அடையாளம் தெரியாமல் காணாமல் போவான் என்பது சீன நடைமுறை. சீனாவில் மட்டுமில்லை.

ஸ்டாலினின் கம்யூனிச சொர்க்கமான சோவியத் யூனியனிலும் அதுதான் நிலைமையாக இருந்தது. எந்த நேரத்திலும் உளவுத்துறையான கே.ஜி.பி. தங்களைக் கைது செய்து சைபீரியாவுக்கு அனுப்பி வைத்துவிடுமோ என்று ஒவ்வொரு ரஷ்யனும் அனுதினமும் அஞ்சி உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தான். ஜனங்கள் ஒவ்வொருவரை மற்றவர் உளவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியை ரேஷனில் வாங்க கொட்டும் பனியில் இரவு, பகலாக வரிசையில் நின்றார்கள். கம்யூனிச சோஷலிஸ நாடுகளில் அப்படித்தான் இருக்கும்.

ஸ்டாலினால் சைபீரியச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு துயரப்பட்ட Aleksandr Solzhenitsyn எழுதிய The Gulag Archipelagoவைப் படிக்கிற எவனும் தன்னை மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் என்றே சொல்லிக் கொள்ள மாட்டான்.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் எவனுக்கும் புத்தகம் படிக்கிற வழக்கமோ அல்லது சுய புத்தியோ அல்லது சுய சிந்தனையோ இருந்ததில்லை. 😅😅

அறிவுக்களையுடைய முகம் கொண்ட ஒரே ஒரு இந்திய கம்யூனிஸ்ட்டைக் கூட நான் கண்டதில்லை. அதிலும் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் முகத்தைப் பார்த்தாலேயே அவனை முழு மூடன் என்று தாராளமாகச் சொல்லிவிடலாம். செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் தமிழக கம்யூனிஸ்ட். பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்.

ஓரளவிற்கு சுபிட்சம் வந்திருக்கிற இன்றைய சைனா ஒரு கம்யூனிச நாடு என்று சொன்னால் சீனனே சிரிப்பான். இன்றைய சீனா முற்றிலும் கம்யூனிஸத்திற்கு எதிரான முதலாளித்துவ நாடு. ஒருவகையில் அமெரிக்காவை விடவும் முதலாளித்துவம் சீனாவில்தான் உண்டு. சீனர்கள் மாவோவை என்றைக்கோ தூக்கியெறிந்து விட்டார்கள்.

ஜின்பெங் மீண்டும் தன்னை ஒரு மாவோவாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அது வெல்வது சந்தேகம்தான். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் சீனர்கள் இவர்களை விரட்டியடிப்பார்கள் எனது நிச்சயம்.

கம்யூனிஸ்ட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஒரு சுக்கும் சம்பந்தமில்லை. ஜனநாயகம் பன்முகத் தன்மை கொண்டது. கம்யூனிஸம் “எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்” என்கிற அடக்குமுறைச் சித்தாந்தம். கம்யூனிஸத்தில் கடவுளுக்கு இடமில்லை. நாத்திகமே கம்யூனிஸத்தின் அடிப்படை.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்டுகள், குறிப்பாக கேரள கம்யூனிஸ்ட்டுகள் வித்தியாசமானவர்கள். அங்கு முஸ்லிம் கம்யூனிஸ்ட்டு உண்டு; கிறிஸ்தவ கம்யூனிஸ்ட்டு உண்டு. அவர்கள் மசூதிக்குப் போவார்கள். சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களின் மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதேசமயம், ஒரு ஹிந்து கம்யூனிஸ்ட் கோவிலுக்குப் போனோலா அல்லது பண்டிகைகளைக் கொண்டாடினாலோ ஊளையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

அது ஏன்? என்று கேரள ஹிந்து கம்யூனிஸ்ட் கேட்கிற காலத்தில் கேரள கம்யூனிஸம் செத்துப் போகும்.

கம்யூனிஸம் ஒரு நச்சுக் கிருமி. விஷப்பாம்பு. வெட்டிப் பயல்களின் கோட்டை. உழைக்கத் திறனற்ற சோம்பேறிகளின் சொர்க்கம். அது எத்தனை சீக்கிரம் இந்தியாவை விட்டு விலகுகிறதோ அத்தனைக்கத்தனை இந்திய முன்னேற்றம் துரிதம் பெரும். மெல்ல, மெல்ல இந்தியாவில் கம்யூனிஸம் செத்துக் கொண்டிருப்பதனை உவகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க தங்களது எஃப்16 விமானங்களை உபயோகித்தது குறித்து அமெரிக்கர்கள் அதிகம் கவலைப்பட மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். அவர்களுடைய கோபமெல்லாம் பாகிஸ்தானிகள் இப்படி ஒரு ஓட்டை உடைசல் இந்திய விமானம், அதுவும் ரஷ்யா தயாரித்த ஒரு விமானம் தங்களது பெருமைக்குறிய ஒரு விமானத்தை தாக்கி அழிக்க விட்டுவிட்டார்களே என்பதாகத்தான் இருக்கும்.

எஃப்16 விமானத்தை இந்தியாவிடம் தள்ளிவிட அமெரிக்கா பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிக்கையில், மேற்படி தாக்குதலைக் காரணம் காட்டி பிரதமர் மோடி அடிமாட்டு விலைக்கு அந்த விமானத்தை விலை பேசுவாரே என்கிற கோபமும், கவலையும் அவர்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். அதுமட்டுமல்ல, உலக நாடுகளும் அதையே காரணம் காட்டி விலைகுறைப்பு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா பாகிஸ்தானை என்ன செய்யப்போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அனேகமாக அந்த விமானங்களை பாகிஸ்தானிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் அல்லது ஸ்பேர் பார்ட்டுகளைக் கொடுக்காமல் தொங்கலில் விடுவார்கள். இரண்டாவதுதான் நடக்கும் என எண்ணுகிறேன்.

எஃப்16 விமானங்களை பராமரிப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. அதற்கு ஆகும் செலவும் மிக அதிகம். ஒரு எஃப்16 விமானம் ஒரு மணிநேரம் விண்ணில் பறப்பதற்கு $8000 மதிப்பிலான எரிபொருள் செலவாகும். பாகிஸ்தான் போன்ற ஏழை நாடுகளுக்கு அது கட்டுப்படியாகவே முடியாததொரு விஷயம். சோற்றுக்கே லாட்டரி அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எஃப்16 ஒரு தேவையற்ற சுமைதான். ஆனால் அடுத்தவனின் மீது கண்மூடித்தனமான வெறுப்பு கொண்டிருப்பவனுக்கு அதெல்லாம் எங்கு உறைக்கப்போகிறது?


Series Navigationகவிதை நாற்றுகள்‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    சுப. சோமசுந்தரம் says:

    சீன, ரஷிய கம்யூனிசத்தைப் பற்றியும் பொலிட்பீரோ ஜனநாயகத்தைப் பற்றியும் நீங்கள் எழுதியவற்றில் ஓரளவு உண்மையுண்டு. உலக முதலாளித்துவத்தை நெடுங்காலம் எதிர்த்து ஓரளவு (முழு வெற்றி நடைமுறையில் எதிலும் சாத்தியமில்லை) பெற்ற கியூபாவை எப்படி இதில் சேர்த்தீர்கள்? கல்வியும் சுகாதாரமும் நடைமுறையில் அடிப்படை உரிமையானது கியூபாவில்தான். பணமும் பதவியுமே கோட்பாடாகக் கொண்ட கட்சிகளை வைத்து ஜனநாயகக் கடை விரித்திருக்கும் நமக்கு மார்க்சியம் எனும் உயர்ந்த மக்கள் சித்தாந்தத்தைச் சாட என்ன தகுதி இருக்கிறது? “அறிவுக் களையுடைய முகம் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்டைக் கண்டதில்லை” என்பதெல்லாம் அறியாமையின் வெளிப்பாடு. கம்யூனிசம் ஒரு வாழ்வியல் நடைமுறை என வாழ்ந்து காட்டிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,ஜீவா,ஆர்.நல்லகண்ணு இவர்களைத் தெரியாத உங்களுக்கு என்ன நல்ல அரசியல் தெரியும்? நாட்டை அம்பானிகளுக்குத் தாரை வார்க்கிற நரேந்திர மோடி, இந்திரா காந்தி முகங்களில் என்ன அறிவுக் களை சொட்டுகிறது? இந்தக் ‘கிழட்டுப் பயல்’களிடம்தானே நாட்டை ஒப்படைத்தீர்கள்? கம்யூனிசம் சீனா, ரஷ்யாவை விட இயற்கையாகவே ஜனநாயக இயல்பு கொண்ட இந்திய சமூகத்திற்கே, குறிப்பாக தமிழ்ச் சமூகத்திற்கே, உரித்தானது (உண்டாலம்ம இவ்வுலகம்!). உங்களின் கடுமையான வசவுகளை அனுமதித்த திண்ணை எனது வசவினையும் அனுமதிக்கும் என நம்புகிறேன். வளமான பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை(!!) நோக்கி நாட்டை இழுக்கிற பாசிச ரௌடியான பாஜக போன்ற கட்சிகளை விட கம்யூனிச ‘கபோதிகள்’ எவ்வளவோ மேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *