தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 ஜனவரி 2021

இந்தியர்களின் முன்னேற்றம்?

நரேந்திரன்

Spread the love

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் இந்தியர்களைப் பார்க்கலாம். பெரும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இந்தியர்கள் இல்லாத இடமில்லை. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் என இந்தியர்கள் இல்லாத துறைகளும் இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக அல்லது ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியர்களின் கல்வித் தகுதியும், திறமையும் பெருவாக மதிக்கப்படுகிறது.

தாங்கள் வாழும் நாடுகளில் சட்டத்தை மதிப்பவர்களாக, குற்றங்கள் அதிகம் புரியாதவர்களாக, வரி கட்டுபவர்களாக, அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துபவர்களாக மட்டுமெ நீங்கள் இந்தியர்களைப் பார்க்க முடியும் விதிவிலக்குகள் இருக்கின்றன என்றாலும் அவை மிகக் குறைவானவைதான். உண்மையில் வெள்ளையர்கள் இந்தியர்களைப் பார்த்து அச்சமடைகிறார்கள் என்றால் அது மிகையில்லை.

இதற்கு முக்கியக் காரணம் கல்விக்கு இந்தியர்கள் அளிக்கும் முன்னுரிமைதான். இன்றைக்கு நேற்றைக்கல்ல. ஆண்டாண்டு காலமாக இந்தியர்கள் கல்விக்குத்தான் முக்கியத்துவம் அளித்தார்கள். பழங்காலம் தொட்டே அறிவியலும், கணிதமும், இலக்கியமும், கலைகளும் இந்தியக் கலாச்சாரத்தின் ஓரு அங்கம். ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனம் கூட அந்த ஆர்வத்தைக் குலைக்கவில்லை என்பதினை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

அதனைக் கண்டு பொறாமையில் எரிபவர்களில் முக்கிய இடம் வகிப்பவர்கள் பாகிஸ்தானிகள். என்னிடம் ஒரு பாகிஸ்தானி இதனைக் குறித்துக் கேட்டார். அந்தப் பாகிஸ்தானியைக் குறித்தவரை இந்தியர்கள் என்பவர்கள் அழுக்குப் பிடித்த பிச்சைக்கார ஹிந்துக்கள் எனக் கேட்டு வளர்ந்தவர். எப்படியோ அமெரிக்க விசா வாங்கி அமெரிக்காவிற்கு வந்தால் பிச்சைக்கார ஹிந்துக்கள் அங்கு கோலோச்சிக் கொண்டிருப்பதனைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர் கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொன்னேன்.

“ஹிந்துக்கள் கல்வியைக் குறித்தும், தங்களின் முன்னேற்றத்தைக் குறித்தும் மட்டுமே சிந்திப்பவர்கள். அவர்களுக்கு மதம் என்பது தனிப்பட்ட விஷயம். விருப்பமிருந்தால் கோவிலுக்குப் போவார்கள். இல்லாவிட்டால் இல்லை. தினமும் அவர்களின் மதப்புத்தகத்தைப் படித்து பாராயணம் பண்ணவேண்டுமென்றோ அல்லது பத்துதடவை சாமி கும்பிடவேண்டுமென்றோ எந்த நிர்பந்தமும் இல்லை. எனவே அவர்களால் சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்பட முடிகிறது. எந்த ஹிந்துவும் தன் மதம் சாராதவனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பதில்லை. அடுத்தவனை எப்படி மதம்மாற்றுவது என்று சிந்தித்துக் கொண்டிருப்பதுமில்லை….அதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம்” என்றேன்.

அந்த ஆளுக்கு சுருக்கெனத் தைத்துவிட்டது. ஹிந்துக்களெல்லாம் ஜாதி வெறியர்கள்…காஷ்மீரில் முஸ்லிகளைக் கொலை செய்பவர்கள் எனப் பிணாத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

ஒருத்தனின் கை,காலை கட்டிப் போட்டு வைப்பதுதான் அடிமைத்தனம் என்றில்லை. எவனோ எழுதி வைத்த “புனித” புத்தகங்களுக்கு அடிமையாக இருப்பதுவும் அடிமைத்தனம்தான் என்று அந்த ஆளுக்கு எப்படிப் புரியவைப்பது?

Series Navigationஎன்னுடன் கொண்டாடுவாயா?

One Comment for “இந்தியர்களின் முன்னேற்றம்?”

  • ராஜீவ் காந்தி says:

    கடந்த 70 ஆண்டுகளாய் தான் அவர்கள் பாகிஸ்தானியர்கள், அதற்க்கு முன் அவர்கள் நீங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்தியர்கள் பிரிவில் தான் வருவார்கள். உங்களது பார்வையில் இந்தியர்கள் என்றால் இந்துக்கள் என்று நினைப்பது தவறு. அவர்களைபோல் உங்களால் மதமாற்றம் செய்ய முடியாது ஏனென்றால் ஹிந்து மதத்திற்கு மாறுபவனை எந்த சாதியில் சேர்ப்பது என்ற ஒரு மாபெரும் சிக்கல் உள்ளது. சாதிதான் இந்து மதம் நீங்கள் உணரவில்லை.


Leave a Comment

Archives