Ushijima the Loan Shark

This entry is part 7 of 8 in the series 5 மே 2019

சைக்கோத்தனமான திரைப்படங்கள் எடுப்பதில் ஜப்பான்காரனை மிஞ்ச இன்னொருத்தன் இன்னும் பிறக்கவில்லை. பார்ப்பவர்களைக் குலை நடுங்க வைக்கும் ஜப்பானிய திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள் வேறு எந்த மொழியிலாவது எடுக்கிறார்களா என்பது சந்தேகம்தான். சாமுராய் திரைப்படங்களிலிருந்து, ரத்தக்களரியான யாக்கூசா படங்களையும் தாண்டி அடுத்த லெவலுக்குப் போய்விட்டார்கள்.

வாரக் கடைசியில் “Ushijima the Loan Shark” என்கிறதொரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண கந்துவட்டிக் கதை. ஆனால் அபாரமான திரைக்கதை.

பத்து வருடம் பழையது என்றாலும் அங்கே இங்கே நகரவிடாமல் கட்டிப் போட்ட திரைப்படம். ஒன்றில்லை. நான்கு திரைப்படங்கள் அல்லது நான்கு பாகங்கள். ஒவ்வொரு திரைப்படமும் இரண்டு மணிநேரம் என்பதால் இரண்டு நாட்களை ஒதுக்கியாக வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Amazon Prime-இல் இருக்கிறது. எனக்குப் பிடித்ததெல்லாம் உங்களுக்கும் பிடிக்கவேண்டிய அவசியமில்லை.

Tanoshinde Kudasai!!

Series NavigationPusher Trilogyபெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *