ஸர்மிளா ஸெய்யித் புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப் தடை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 2016 செப்டம்பர் 23ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட ஒரு பத்வாவில் “நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது விதிக்கப்பட்டது” என்றது. (பத்வா இல. […]
சைக்கோத்தனமான திரைப்படங்கள் எடுப்பதில் ஜப்பான்காரனை மிஞ்ச இன்னொருத்தன் இன்னும் பிறக்கவில்லை. பார்ப்பவர்களைக் குலை நடுங்க வைக்கும் ஜப்பானிய திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள் வேறு எந்த மொழியிலாவது எடுக்கிறார்களா என்பது சந்தேகம்தான். சாமுராய் திரைப்படங்களிலிருந்து, ரத்தக்களரியான யாக்கூசா படங்களையும் தாண்டி அடுத்த லெவலுக்குப் போய்விட்டார்கள். வாரக் கடைசியில் “Ushijima the Loan Shark” என்கிறதொரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண கந்துவட்டிக் கதை. ஆனால் அபாரமான திரைக்கதை. பத்து வருடம் பழையது என்றாலும் அங்கே இங்கே நகரவிடாமல் கட்டிப் […]
நாமெல்லாம் அறியாததொரு உலகம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது என்பதினை நம்மில் பலர் உணர்வதில்லை. போதைமருந்தும், விபச்சாரமும், வன்முறையும், கொலைகளும் நிகழும் மேற்கத்திய உலகத்தைப் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இந்திய மனோபாவம் அடிப்படையில் வம்பு தும்புகளிலிருந்து விலகியிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். நாமறியாத அந்த வன்முறையைக் காட்டும் நூற்றுக்கணக்கான மேற்கத்திய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் அதில் உச்சமாக நான் கருதும் திரைப்படங்களில் ஒன்று Pusher Trilogy என்றழைக்கப்படும் மூன்று நார்வேஜிய திரைப்படங்கள்தான். மூன்று திரைப்படங்களாக […]
நடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அரங்கில் நேற்று (ஏப்ரல்-26) மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மூத்த வழக்கறிஞர் ’சிகரம்’ ச.செந்தில்நாதன் தலைமையேற்றார். ‘இலக்கிய வீதி’ அமைப்பின் நிறுவனர் இனியவன் முன்னிலை வகித்தார். கவிஞர் கந்தர்வனின் படைப்புகள் பற்றி கவிஞர் தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார். கவிஞர் மு.முருகேஷூக்கு ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் ‘அன்னம் விருதினை’ வழங்கினார். வாசகர் வட்டத்தின் […]
“ ஸ்ரீ: “ நடந்து செல்லக் கைத்தடி தேவைப்படுகிறது எதற்குக் கிளம்பினேன் என்பதே அவ்வப்போது மறந்து போகிறது கண்ணாடி இருந்தும் படிக்கின்ற எழுத்துக்கள் தெளிவாக இல்லைதான் காது கேட்கும் கருவியை அடுத்த மாதம் பென்ஷன் வாங்கி ரிப்பேர் செய்ய வேண்டும் மூட்டு வலி மாத்திரையை ஒருவேளை மறந்தாலும் ரணகளம்தான். எது எப்படிப் போனால் என்ன எனக்கு ரஸ்தாளிப் […]
மஞ்சுளா கோபி கால் பட்டு உடைந்தது வானம் – இலங்கை மலையக மண்ணைச் சேர்ந்த எஸ்தரின் இக்கவிதைத் தொகுப்பு என் கையில் கிடைத்து நான் வாசிக்க ஆரம்பித்தவுடன் எவரும் அறியாத ஒரு குகைக்குள் செல்வதைப் போலவே உணர ஆரம்பித்தேன். அந்த இருளின் அமைதியை, அவருக்குச் சொந்தமான ஒன்றை நமக்கு வெளிச்சமாக்கி இருக்கும் இத்தொகுப்பை நாம் வாசிப்பதின் வழியேதான், அந்த இருளையும், வெளிச்சத்தையும் புரிந்து கொள்ள முடியும். எஸ்தரின் கவிதைகள் வழியாக அடையாளப்படும் ஒரு துண்டு வானமாகட்டும், அவரின் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ 1. http://news.mit.edu/2018/nas-report-right-path-fusion-energy-1221 [December 21, 2018] 2.https://news.newenergytimes.net/2017/10/06/the-iter-power-amplification-myth/ 3. https:// http://www.nextbigfuture.com/2015/07/china-will-bigger-than-iter-test.html ++++++++++++++++++++++++ சைனா கதிரியக்கம் இல்லாத அளவு மீறிய அணுப்பிணைவு மின்சக்தி ஆக்க முயற்சி 2018 நவம்பரில் சைனா அன்ஹுயி [Anhui] மாநிலத்தில் தயாரித்த அணுப்பிணைவு EAST [Experimental Advanced Superconducting Tokamak] என்னும் சோதனைச் சாதனத்தில் சூரியனைப் போல் ஆறு மடங்கு உஷ்ணத்தை [100 மில்லியன் டிகிரி C (212 மில்லியன் டிகிரி F)] முதன்முதல் உண்டாக்கி, அணுசக்தித் துறையில் ஒருபெரும் வரலாற்றுச் சாதனை […]