என்னவளே

author
2 minutes, 2 seconds Read
This entry is part 6 of 9 in the series 2 ஜூன் 2019


கௌசல்யா  ரங்கநாதன்

     -1-

“ஹாப்பி, இன்று முதல் ஹாப்பி”, என்று மெதுவாய்  ஹம் செய்தவாறு நான் வெளியில் கிளம்பிய அந்த மாலை 5 மணிக்கு  என் மனைவி ஜானகி  வந்து என்னிடம்  ஒரு செல்போனை கொடுத்தாள்.

நான் அவளை நிமிர்ந்து பார்த்த போது “உங்களுக்கு,  ஸா¡¢ நமக்கு வயசாயிருச்சில்லையா ? ¡¢டயராயிடீங்க வேற..  வெளியில, போகச்சொல்ல கையில இந்த செல்போன்  இருந்தா
வசதியாயிருக்குமேனுதான் ” என்று இழுத்து, இழுத்து அவள் பேசிய போது  எனக்கு சி¡¢ப்புதான் பொத்துக்கொண்டு வந்தது.  “சி¡¢ப்புதான் வருகுதைய்யா” என்றே பாட ஆரம்பித்தேன்.   ஆனால் அவள்
கண்கள் கலங்க ஆரம்பித்த போது “அசடு, அசடு, உன் மனசு எனக்கு பு¡¢யாதா என்ன!  ஏன் அழறே? அன்போட நீ வாங்கி வந்திருக்கிற செல்லை எங்கிட்ட கொடு” என்றேன்.    கூடவே “உன் கண்ணில்
நீர் வழிந்தால்” என்று பாட ஆரம்பித்த போது “போதுமே வழியுது  துடைச்சுங்க.  பிள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினாம் ” என்றாள்.  கூடவே அவளுக்கு என் மீதான,
ஆத்மார்த்தமான பாசம், பற்று , அன்பு பு¡¢ந்தது.

இன்று, நேற்றாஅவளுடன் குடித்தனம் பண்ணுகிறேன் நான்?நீண்ட, நெடிய 49 வருடங்களை ஓட்டியாயிற்று. நிசமாலுமே என் கண்கள் கலங்கியிருந்தால்  அவள் துறுவி, துறுவி காரணத்தை
கேட்டு நான் சொன்ன பிறகுதான் சமாதானம் அடைவாள்.  திரும்பி பார்ப்பதற்குள் இவ்வளவு காலம் ஓடி விட்டிருக்கிறதே!.  எனக்கு மன்னன் “யயாதி” கதைதான்  நினைவுக்கு வரும் அப்போதெல்லாம்.  அவன்  வாழ்க்கையில் சகல சுக, துக்கங்களையும்ங்களையும் ஆண்டு
அனுபவித்து, முதுமையை அடைந்த பின்பும் திருப்தி அடையாமால் தன் பிள்ளைகளிடம்  அவர்கள் வாலிபத்தை கேட்டு பெற்றானாம்..பிறகு,
ஒரு கட்டத்தில் அதுவும் சலித்துப் போயிற்றாம் அவனுக்கு..
ஊம் இப்படி ஒரு வாழ்க்கைத்துணை, வெள்ளந்தியாய் ,என்னையே கடவுளாய் நினைத்து, அன்பு ,அது அன்பு அல்ல, பக்தி செலுத்தி ஆண்டாள் அந்த பெருமாளிடம் பிரேமை வைத்தாற்போல என்றுகூட சொல்லலாம்..
இப்போது நினைத்தாலும் புல்லா¢க்குது எனக்கு..  சிலர் என்னிடம் சொன்னதுண்டு “என்னடா அந்த சிவபிரான் கங்கையை தலைக்கு மேல் வச்சு தாங்கறாப்பல நீயும்” என்று மெல்லிய புன்னகையை சிந்துவார்கள்..நானும்,
சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டுமே என்று இருந்து விடுவேன்..  

ஜானகி கிராமத்திலிருந்து வந்தவள்.  பள்ளி படிப்புக்கு மேல் இல்லை.  அன்பு செலுத்த படிப்பு ஏன்?புறம் பேச மாட்டாள்.  வம்பு, தும்பு ஊஹூம் அறவே கிடையாது.  சிறந்த மனிதாபிமானி.

முதன் முதலாய் அவளை பெண் பார்க்க சென்ற போது அவள் என்னை நோ¢டையாய் பார்க்க முடியாமல் தவித்த தவிப்பு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி விளங்க வைக்க முடியாது…
இப்போதுகூட எனக்கு அந்த பிரபல திரைப்பாடல் வா¢கள் தான் நினைவுக்கு வரும்.அதாவது”பெண் பார்த்த மாப்பிள்ளை முகம் பார்க்கவா, முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா.”

எங்களுக்கென்றே கவிஞர்  அனுபவித்து பாடியதோ  என்றே தோன்றும்.  

திருமணமாகி என்னுடன் வந்தவள், இன்று வரை, அதாவது இந்த 49 வருடங்களில், ஒரு நாள் கூட தன் தாய், தந்தை, உடன் பிறப்புகள் வீடு
களுக்கென்று ஊஹூம்..  போனதில்லை  என்பதே உண்மை.

“ஏன் மத்தவங்க போல நீ உன் தாய் வீட்டுகோ, உடன் பிறப்புகள் மத்த உறவுக்காரங்க வீடுகளுக்கோ போய் வரதில்லை  என்றால் மௌனத்தை
மட்டுமே பதிலாக்குவாள்.  ஒரு முறை நான் அவளை  மிகவும்
வற்புறுத்தி கேட்டபோது “நான் சொன்னா சி¡¢ப்பீங்க.  என்னை பைத்தியம்பீங்க” ” என்றாள்.  

“அப்படியெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன்.  சொல்லு” என்ற போது “இமைப்பொழுதும் உனை விட்டு பி¡¢யாத வரம் வேண்டும்னு பாடச்சொல்றீங்களா? ஆனா அதுதாங்க உண்மை. எனக்கு
உங்களை விட்டு ஒரு நிமிஷம், இல்லை..இல்லை.. ஒரு செகண்டு,அதுகூட இல்லை.. ஒரு மைக்ரோ வினாடி கூட பி¡¢ஞ்சு இருக்க முடியாதுங்க”.

“இதென்ன பைத்தியக்காரத்தனம்? How is it possible?  எல்லா மனுஷாளும் நமக்கு வேணும்.  சில சமயங்களில் நாம் ஒண்ணா போய் வரலாம்
அவங்க வீடுக்ளுக்கெல்லாம்..  ஆனா சில தவிர்க்கவே முடியாத
சந்தர்பங்களில் தனித்தனியாய் போகத்தான் வேணும்.  இவ்வளவு ஏன்?  என்னை ஆபீஸ் வேலையாய் வெளியூர் டூர் அனுப்பினா என்ன பண்ண முடியும் சொல்லு.  அது மட்டுமல்லை.
உங்க சொந்தக்காரங்களேகூட என்னை தப்பா நினைக்கலாம் இல்லையா நான் உன்னை கொடுமைப் படுத்தறேனோனு..உன் சொந்த,பந்தங்கள்
வீடுகளுக்கு, தொ¢ஞ்சவங்க வீடுகளுக்கெல்லாம் நீ போகக்கூடாதுனு நான்  கட்டுப்பாடு விதிச்சிருக்கிறதா நினைக்கத் தோணும்ல..”

“த பாருங்க… யார் வேணா என்ன வேணா சொல்லிட்டு போகட்டும்.  எனக்கு அதை பத்தி கிஞ்சித்தும் கவலை இல்லை.  நான் இப்படித்தான் இருப்பேன்.  என்னை வற்புறுத்தி எங்கேயும் தயவு
பண்ணி அனுப்பி வைக்காதீங்க பிளீஸ்”.

எனக்கு அவளைபற்றி பெருமையாய் இருந்தது.  ஆனால்  நாளடைவில் இது ஒரு பொ¢ய பிரச்சினையாய் மாறும் என்று  நினைத்துக்கூட பார்க்கவில்லை நான். விஷயம்  ஒன்றும் பொ¢தாய் இல்லைதான்..
வாசகர்களே சப்பு கொட்டிக்கொண்டு வம்புக்கு அலையாதீர்கள்.  
-2-
எங்களுக்கு திருமணமான புதிதில் அனேகமாய் மாலை அலுவலகம் 5.30 மணிக்கு விட்டவுடன் அடித்து பிடித்து,  6 க்குள் வீடு திரும்புவதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன், அது  ஒரு  மைய அரசு அலுவலகம் என்பதால் .  என் வருகையை எதிர்பார்த்து என் புது மனைவி  ஜானகியும் “வழி மீது விழி வைத்து ” என்ற பாட்டுக்கொப்ப  வாயிலில் காத்திருப்பாள் கவலை தோய்ந்த முகத்துடன்.
என் முகம் பார்த்த பின்பே அவள் முகம் பிரகாசமடையும்.  நாளடைவில் என் அலுவலகம் வேறு இடத்துக்கு மாறிய போது அங்கிருந்து இரண்டு பேருந்துகள் பிடித்து வீடு திரும்புவது சற்றே
சிரமமானதாய் இருந்தது.  காரணம் என்னவெனில் என் அலுவலகம் ஒரு புற நகர் பகுதியில் சொந்த கட்டிடத்துக்கு இடம் மாறிப் போனது.  அங்கு நிறைய கல்வி கூடங்களும் , அரசு அலுவலகங்களும்
கொஞ்சம் கொஞ்சமாய் வந்து கொண்டிருந்தன.  ஆனால் அந்த அளவுக்கு போக்குவரத்து  வசதிகள் இல்லை.  எப்போதோ வந்து போகும் ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே. அதுவும் கூட
நினைத்தபோதுதான் வரும்.  பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் நெக்கி தள்ளும்.விழி பிதுங்கிப் போகும் அதில் ஏறுவதற்குள்.  இருப்பினும் எப்படியோ முண்டியடித்து  ஏறி சட்டை,  பாண்ட் கசங்கிட,
வியர்வை ஒழுக, ஒழுக, வீடு திரும்பும்போது மணி 6.30க்கு மேலாகிவிடும். வாயிலில் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாய் ஜானகி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் பா¢தாபமாய் இருக்கும்..சி¡¢ப்பும் வரும் எனக்கு..
“என்ன இன்னைக்கும் பஸ் கிடைக்கலையாக்கும்? ” என்பாள்.  பிறகு என் தோற்றம் பார்த்து “ஐயையோ, ஐயையோ….வாங்க காபி சாப்பிடுங்க முகம், கை, கால்கள் கழுவிக்கிட்டு வந்து” என்பாள்.ஒரு நாள் நான் ஆத்திரத்தில் வெடித்து விட்டேன். ஏன் அப்படி அவளிடம் பேசினேன் நிதானம் இழந்து என்று பு¡¢ய வில்லை.  அவள் முகம் சுண்டி போயிற்று.
அப்படி என்ன கேட்டுவிட்டேன் என்கிறீர்களா? கேட்கக்கூடாத கேள்வியைத்தான் கேட்டு விட்டேன்.  “நீ என்னை சந்தேகப்படறியா என்ன?” என்று.
உடனே ஹோவென அழவே தொடங்கி விட்டாள்.  
-3-
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி ஹோனு கதறி,கதறி  அழறே?”

“இன்னம் என்னங்க சொல்லணும்?உங்களை கடவுளாய் இல்லை அதற்கும் மேல் நினைத்து அன்பு செலுத்தற, தப்பு ,வழிபடற என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படிங்க உங்களுக்கு
மனசு வந்தது? உங்களுக்கொண்ணுனா என்னால் தாங்கிக்க முடியும்னு  நீங்க நினைக்கிறீங்களா  என்ன?”

“என்ன சொல்றே நீ.  பு¡¢யலை. அலுத்து, சலிச்சு வீடு திரும்பறப்ப என்ன, என்னவோ கேட்கிறே.  நான் பதில் சொன்னா அழத் தொடங்கிடறே..
நான் எதனாச்சும் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சிருமா பிளீஸ்”
“இதுதாங்க பொம்பிளை மனசுன்றது.காலைல அரக்க, பறக்க கொறிச்சுட்டு ஆபிசுக்கு ஒடறீங்க.  பாவமாயிருக்கு .நீங்க ஆபீசுக்கு போனப்புறம் ஒவ்வொரு நொடியும் எனக்கு ஒரு யுகமாய் இருக்கு.
அழுகை, அழுகையாய் வருது.  சுருக்கமாய் சொன்னா  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி  வன வாசம் போனப்புறம் அயோத்தி மாநகரம் களை இழந்து காணப்பட்டதாமே , அப்படி இருக்குங்க எனக்கு தினமும் நீங்க ஆபீஸ் போனப்புறம்..ஸ்ரீ ராமனாவது 14 வருஷம்தன் வனவாசம் அனுபவிச்சாராம்.
ஆனா, இங்கே நான் உங்களுக்கு வயசு 60 ஆகிறவரை தினம், சித்திரவதைப்பட்டே ஆகணும்ல..நீங்க சீக்கிரம் வேலையிலிருந்து ஓய்வு
பெற்றாக் கூட போதும்னு இருக்கு எனக்கு..அப்புறம் என் கூடவே எப்பவும் இருப்பீங்கள்ள!”என்றவளிடம்,

“பேஷ், பேஷ்..  உனக்கு ராமாயணம் கூட தொ¢யுமா?”

“ஸ்கூல்ல படிச்சதுங்க.  அந்த ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி போலவே எனக்கு நீங்க கிடைச்சது நான் செஞ்ச பாக்கியம்”.

“ஐயய்யோ,  விட்டா எனக்கு கோவிலே கூட கட்டி வழிபட ஆரம்பிச்சுடுவே போல இருக்கே ஜானு. ஆமாம் இவ்வளவெல்லாம் பேசறே .  ஆனா மாலை நேரம் ஆபீஸ் விட்டு நான் கிளம்ப கொஞ்சம் நேரமாயிட்டா மட்டும் உன் முகம் ஏன் சூம்பி போகுது?.  பட படப்பு கூடிப்போகுது.  உன்னை கொஞ்சம் மாத்திக்க ப்பாரு”.

அப்போதெல்லாம் வெள்ளந்தியாய் சி¡¢ப்பாள். நாளடைவில் நான் வீடு திரும்ப இன்னம் கொஞ்சம் லேட்டானது.  அவள் வாய் திறக்காவிட்டாலும் நானே  சொல்லி விடுவேன் அவளிடம் “பஸ்
கிடைக்கலைம்மா.  நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் அதிகமாயிட்டே போகுது.. அதுக்கு தக்கினாப்பல போதிய பஸ் வசதிகள் இல்லை.அதான் நேரமாகுது  வீடு திரும்ப.தப்பா நினைக்க மாட்டேல்ல.”

“நினைக்க மாட்டேங்க.  எனக்கு உங்க சிரமம் பு¡¢யாம இல்லை. ஆனாலும் மாலைப் பொழுது வந்துட்டா என்னால் நிம்மதியாய் இருக்க முடியலைங்க.  “.

“த பாரு எனக்கு உன்னை பார்த்தா பா¢தாபமாய் இருக்கு.  பு¡¢ஞ்சுக்க ஜானு.  என்னதான் ஆபீஸ்மாலை 5.30 க்கு முடிஞ்சாலும் சில சமயங்களில் அவசர வேலை  திடீர்னு வரலாம். டெல்லியிலிருந்து இப்பத்தான் 4 மணிக்கு டெலக்ஸ் வந்திச்சு..அதனால லேட்டானாலும் இருந்து வேலையை
முடிச்சு கொடுத்துட்டு போங்கனு மேலதிகா¡¢கள் சொன்னா, அப்ப என் மனைவி நான் லேட்டாப் போனா கவலைப் படுவா.  அழுவா.  அதனால் நான் 5.30 ஆனதும்  போயேயாகணும்.  பாக்கி வேலையை
நாளைக்கு பார்த்துக்கலாம்னு சொல்ல முடியுமா சொல்லு”.

பேந்த, பேந்த விழிப்பாள். எனக்கும் பாவமாய் இருக்கும்.நான் மற்றும் என் இரு குழந்தைகள் அடங்கிய சின்னஞ் சிறு உலகமே எல்லாம் அவளுக்கு.  ஒவ்வொரு நொடி ப்பொழுதும்  எங்களுக்காகவே
வாழ்ந்து கொண்டிருப்பவள் .  நாங்கள் ஒரு சின்ன தும்மல் போட்டால் கூட பதறிப்போய்  “என்னாச்சு, என்னாச்சு?” என்பாள். குழந்தைகள் விஷயத்திலும் இப்படித்தான்.  பள்ளியிலிருந்து சற்றே
அவர்கள் வர தாமதமானாலும் உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடையாய் நடப்பாள்.  பூஜை அறைக்கு போய் வேண்டிக்கொள்வாள்.  இது அவர்கள் வளர்ந்து கல்லூ¡¢க்கும்,பிறகு வேலைக்கும் போன பிறகும்கூட
தொடர்ந்தது.  சில சமயங்களில் அந்த மாலை பொழுதினில், அது நடுக்கும் குளிர் காலமானாலும், தலைக்கு குளித்து ஈரப்புடவையுடன் மஞ்சள் துணியில் காசு முடிந்து வைப்பாள் குல தெய்வத்துக்கு.

“என்னம்மா இது பைத்தியக்காரத்தனம் ” என்றால் “ஆமாம் நான் இப்படித்தான்.  என் தவிப்பு யாருக்கு பு¡¢யுது?” என்பாள் கண்களில் வழிந்தோடும்  கண்ணீருடன்.  காலப்போக்கில் அவள்
வீட்டு வாயிலை தவிர்த்து தெரு முனைக்கே வந்து பேருந்து  நிறுத்தத்தில் காத்திருக்க தொடங்கினாள். பாவமாய் இருக்கும் அப்போதெல்லாம் அவளை பார்க்க.  என்னை பார்த்ததும் அவள்
முகத்தில் ஒரு பரவசம் தோன்றும்.  அந்த காலத்தில் வீட்டில் தொலை பேசி, கை பேசி வசதிகள் இல்லை.   என்றாவது ஒரு நாள் காலை நான்அலுவலகம் கிளம்பும் போது என்னருகில் வந்து ஒருவித தயக்கமுடனே, மெதுவான( in a feeble voice)
குரலில் “அருகில் வந்தாள். உருகி நின்றாள்.அன்பு தந்தாளே” என்ற பாடல் வா¢களுக்கொப்ப “என்னங்க, இன்னைக்கு, இன்னைக்கு ” என்பாள்.
-4-

“என்ன   சொல்லு?” என்றவுடன் “கொஞ்சம் சீக்கிரமாய் வர முடியுமானு” என்று மென்று முழுங்குவாள்.

“என்ன கலியாணம் இன்னைக்கு சீக்கிரமாய் வர அளவுக்கு?”

“கலியாணம் எல்லாம் இல்லை.  இன்னைக்கு நம்ம கலியாண நாள்”.

“வாவ்.  நான் எப்படி இதை மறந்தே போனேன்.  சொல்லியிருந்தியானா நேத்தே ஏதாவது கிஃப்ட்  வாங்கி வந்திருப்பேன்ல”.

“எனக்கு நீங்களே பொ¢ய கிஃப்ட் .  அப்புறம் வேற கிஃப்ட் எதுக்கு? என்பாள்.

அவள் கலியாணமாகி வந்த அந்த நாள் முதல் இந்த நாள் வரை தனக்கு ஒரு முழம் பூ வேண்டும் என்றுகூட ஊஹூம் என்னிடம் கேட்டதில்லை.
அன்பை வெளிக்காட்ட தொ¢யாது எனக்கு. ஆனாலும் அப்போதைய பேமஸ் திரைப்பாடல் வா¢கள் என் நெஞ்சில் வந்து, வந்து அலை மோதும்.
அதாவது “அவளில்லாமல் நான் இல்லை… நான் இல்லாமல் அவளில்லை”.  என்ன அற்புதமான, காதலை வெளிப்படுத்தும்  பாடல் வா¢கள்.அது மட்டுமா? இன்னொரு பாடல் வா¢கள் கூட நன்றாய்
  என் நினைவில் இருக்கிறது இன்றும்.  
“இளமையிலே காதல் வரும் எது வரையில் கூட வரும்?” என்று கதாநாயகன் கேட்க நாயகி சொல்வாள்…
“முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்” என்று.  உணர்ந்து எழுதப்பட்டது என்றே தோன்றும்.  
என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பவளிடம் “சா¢ ரெடியாயிரு.  சீக்கிரமே வந்துடறேன்.  எங்கே போகலாம் இன்னைக்கு ஈவினிங்? ” எனும் போது  to my surprise  சொல்வாள்.
“எங்கேயும் போக வேணாம்.  எங்கூடவே நீங்க வீட்டில இருந்தா அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது” என்பாள்.

“உனக்கு ஏதாவது வாங்கி தரணும்னு மனசு கிடந்து அடிச்சிகுது”.

“எனக்கு எல்லாமே நீங்கதான்றப்ப கிஃப்டெல்லாம் வேணாமே பிளீஸ்” என்பாள் மறுபடி, மறுபடி..

என்றாவதொரு நாள் மாலை நான் அலுவலகம் விட்டு கிளம்பும் போது யாராவது பிரண்ட்ஸ்  “வாப்பா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.  காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம் ” என்று வந்தால் கூட “பிளீஸ் இப்ப வேணாமே . கொஞ்ச்ம் அவசர வேலை இருக்கு. லெட்ஸ் மீட் ஆன் எ சண்டே” என்பேன்.

“அப்படி என்னப்பா தலை போற அவசரம்”?என்பார்கள்..

“அது, அது வீட்டுக்கு போக கொஞ்சம் லேட்டானாலும் என் மனைவி துடி துடிச்சு போயிடுவாப்பா” என்று என்னால் அவனிடம் சொல்ல முடியும் அது உண்மைதான் என்றாலும்..ஆனாலும் எப்படி சொல்வது?”

“டேய், இவன் எப்படா மணி 5.30 ஆகும்னு காத்து கிட்டிருக்கிறவன்.இவனை போய் காபி சாப்பிடலாம் வான்னா எப்படிப்பா?உடனே ஓடிப்போய் மனைவியை பார்த்து டூயட் பாடணும் இவனுக்கு.
அப்பத்தான் நிம்மதி பெருமூச்சே விடுவானாக்கும் இவன்” என்பார்கள் சில சகாக்கள்.

“சில்லி ..இவன் என்ன இப்பத்தான் புதிசா கலியாணமானவனா என்ன அரக்க பறக்க ஓட”.

“டேய் எல்லாருமே உன்னை மாதி¡¢யும் என்னைப் போலவும்  இருப்பாங்கனு நினைச்சியா என்ன?.  நம்ம வீட்டில இருக்கிறதுக நாம் வீட்டுக்கு வந்தாலும், வராங்காட்டியும் எதுவுமே கேட்காதுங்க.
சாப்பாடு வச்சிருக்கேன் டேபிள்ள போட்டுகிட்டு சாப்பிட்டுட்டு பாத்திரங்களை சிங்க்ல போட்டுட்டு படுங்க.  என்னை டிஸ்டர்ப் பண்ணாமனு
சொல்வாங்க..”
“ஆமாமாம்.. ஏன் வீட்டுக்கு போறம்னு இருக்குடா சலிப்பா.  அவனாவது எஞ்சாய் பண்ணட்டுமே. ” மனைவி அமைவதெல்லாம்… ஊம் “என்பார்கள் என் காது படவே.

ஒரு நாள் அவளிடம் சொன்னேன்..” நீ ஏதாவது கோர்ஸில் சேர்ந்து ஏன் படிக்க கூடாதென்று.  “

“வீட்டில, குழந்தைகளையும், உங்களையும் தவிக்க விட்டுட்டு நான் எதையும் படிக்க விரும்பலை. சுருக்கமா சொன்னா நீங்க இல்லாம தனியா வெளியே போகவே எனக்கு  பிடிக்கலை.  ஈ.பீ.,பில் கட்ட, மளிகைக்கடை, ரேஷன் கடைக்கு
 போறப்ப கூட நீங்க எங்கூட  வரதா கற்பனை பண்ணிகிட்டுதான் போவேன். ” பார்க்கும் இடங்களில் எல்லாம் உன் முகம் தொ¢யுதுடி ” என்பாள்.  

“உன்னை நல்ல சைக்கியாட்டி¡¢ஸ்ட் கிட்ட தான் காட்டணும்.” என்பேன்.

“அப்ப என்னை மென்டல்னு சொல்றீங்களா”.

“ஐயயோ, ஐயயோ, அப்படி எல்லாம் எதுவும் சொல்லலைம்மா.மறுபடி மூஞ்சியை  தூக்கி வச்சுக்கிட்டு அழத் தொடங்கிடாதே.  “

“அழலாம் மாட்டேன்.   ஆனா நீங்க ஒண்ணு பு¡¢ஞ்சுக்கணும்.  நான் உங்க மேல வச்சிருக்கிறது அளவுக்கு அதிகமான அன்பா, காதலா, பக்தியா தொ¢யலைங்க எனக்கு.  நான் இப்படித்தான் இருப்பேங்க. என்னை என் போக்கில் விட்டுடுங்க.”

அப்போதெல்லாம் ஜானுவை நினைத்து அழுவதா,சி¡¢ப்பதா என்றிருக்கும் எனக்கு.  இப்படி காலம் வேகமாய் போய்க்கொண்டிருந்ததொரு தருணத்தில்  எனக்கு அதிகா¡¢யாய் பதவி உயர்வு
வந்தது.  பதவி உயர்வு கிடைத்ததில் எனக்கும், என் மனைவிக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும் முன்னிலும் அதிகமாய் இப்போது பொறுப்புகள் கூடியது. அதனால் முன் போல மாலை 5.30 க்கு
ஆபீசை விட்டு விருட்டென்று அப்படியே போட்டது போட்டபடி வீட்டுக்கு கிளம்ப முடியாத சூழல்.  அலுவலக தலைமை அதிகா¡¢ என் பி¡¢வு சம்பந்தமான பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு
அனேகமாய் மாலை 5.30க்கு பிறகுதான் நேரம் ஒதுக்கி கொடுத்திருப்பார் நான் பர்சானல் பி¡¢வில் முக்கிய அதிகா¡¢ என்பதாலும், எந்த வித குறு
க்க்£டுகளும் இல்லாத சமயமாய் பார்த்து, (அவர் காபினில் ரெட் லைட் போட்டுவிட்டு)  பேசி முடிவு எடுக்க வேண்டியிருக்கும்
என்பதாலும், ரகசியம் காக்கப்பட வேண்டியிருக்கும் என்பதாலும்.இதனால் எல்லாம் தாமதம் தவிர்க்க இயலாததாகி விட்டது. ஒவ்வொரு சமயம் பதவி உயர்வே வேண்டாம் என்று கூட சொல்லியிருக்க
லாமோ என்றும் தோன்றும்.  ஆனாலும் ஓய்வு பெறும் தருணத்தில் இருக்கும் எனக்கு இந்த பதவி உயர்வினால் கணிசமான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். தவிர மாதாந்திர ஓய்வூதியமும் கணிசமாய் உயரும் என்பதால் மௌனம் காத்தேன்..
ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் ஜானுவும் வழக்கம் போல தெரு முனையில் கால் கடுக்க நிற்பதையும் நிறுத்திக்கொள்ளவில்லை.  நானும் தினம், தினம் வழக்கம் போல “ஸா¡¢ டியர் லேட்டாயிருச்சு.”
எனும்போது மெல்லிய சி¡¢ப்பு மட்டுமே உதிர்த்திடுவாள்  கண்கள் கலங்கி இருக்கும்.. “அழுதியா என்ன” என்றால் “இல்லையே.. நான் ஏன்அழணும்?” என்பாள்.   மாதத்தில் ஒரு சில நாட்களை தவிர
அனேக நாட்களில் 6.30க்குள் வீடு திரும்பி விடுவேன். சில நாட்களில் மட்டும் மாக்ஸிமம் 7.30 ஆகும்.  இப்போது போல் அப்போதெல்லாம் தொலை பேசி வசதிகளோ, கை பேசி வசதிகளோ
இல்லாத கால கட்டம் அது.  அதனால் எனக்கு அலுவலகத்தில் கால தாமதம் ஆகும் போல இருக்கிறது என்று முன் கூட்டியே வீட்டுக்கும் தொ¢விக்க முடியாது. அப்போது ஒரு நாள்
 ஜானு என்னிடம் “ஒரு டூ வீலர் நாம் வாங்கிட்டா பஸ்ஸுக்காக காத்திருக்காமலும் கூட்ட நொ¢சல்ல சிக்காமலும் சீக்கிரமா வீடு திரும்பிடலாம்ல.  களைப்பும் தொ¢யாதுல்ல உங்களுக்கு ” என்றாள்.  

“ஆமாம்ல.  பன்டாஸ்டிக் ஐடியா” என்று சொல்லி உடனே ஆபீஸ் வெஹிக்கிள்  லோனுக்கு விண்ணப்பித்து ஒரு நவீன டூ வீலர்  வாங்கினேன்.  ஆனாலும் எனக்கு உள்ளூர கொஞ்சம் பயம்தான்
டிராபிக்கில் வண்டி ஓட்ட செல்ல என்பதை வெளியில் காட்டி கொள்ளவில்லை.  ஆனாலும் ஜானுவுக்கு இப்போதும் பயம்  நான் ஒழுங்காய் வண்டியை ஓட்டி வருவேனோ என்பதில். இப்படி
சில மாதங்கள் போன பிறகு ஜானு என்னிடம் ஒரு நாள் வந்து மெல்ல, தயக்கமுடனே நின்றபோது “என்ன சொல்லு”என்றபோது, …
-5-
“என்னங்க, என்னங்க நான் சொல்லப்போறதை கேட்டா என்னை பைத்தியம்பீங்க.  ஆனாலும் என்னால் சொல்லாமல் இருக்கவும் முடியலை”.

“சா¢ பீடிகை போடாம சொல்லு என்னனு”.

“அது, அது வந்து நீங்க லேட்டா வந்தாலும் பரவாயில்லைங்க.  இந்த ஸ்கூட்டர் வேண்டாமே.  பஸ்லயே போய் வாங்களேன்.  சொன்னா சி¡¢ப்பீங்க  என்னை மென்டல்னு சொல்வீங்க மறுபடியும்.ஆனாலும் என்னால சொல்லாம இருக்கவும் முடியலை.. நீங்க
ஸ்கூட்டர்ல போய் வரதுக்குள்ள நான் வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேங்க. இன்னைக்கு இருக்கிற டிராபிக்கை பார்த்தா தலை சுத்துதுங்க.நெஞ்சு படக்,படக்குனு அடிச்சுக்குது நீங்க வீடு திரும்பறவரைக்கும்”

“த பாரு ஜானு .. விபத்து ஏற்படணும்னு தலை விதி இருந்தா  தெருவில் வண்டியில் போனாதான் ஆகும்னு இல்லை.  நடந்து போனாலும்..  இவ்வளவு ஏன்? ஒரு பஸ் தறி கெட்டு ஓடி ஒரு குடிசைக்குள்
நுழைந்து அங்கே தூங்கிக்கிட்டு இருந்தவங்க மேலல்லாம் ஏறி எல்லாரையும் ஒட்டு மொத்தமாய் எம லோகத்துக்கு  அனுப்பினதா செய்திகள் படிச்சோமே”

“வேணாங்க ..என் பேச்சை கேளுங்க.  உடனே ஸ்கூட்டரை வித்துடுங்க வந்த விலைக்கு.  பிளீஸ், பிளீஸ்”..

“சா¢ அப்ப மாலையில் வேலை முடிஞ்சு வர தாமதமானக்கூட பரவயில்லைன்றியா?”

“பரவாயில்லைங்க.  காத்திருப்பேங்க.  எதுவும் கேட்க மாட்டேன்”.

“என்ன சொல்றே? எவ்வளவு நேரம்தான் தெரு முக்கில் எனக்காக கால் கடுக்க காத்திருப்பேம்மா நீ?…

“எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பேங்க.  காத்திருக்கிறதும் ஒரு சுகம் தானே.  காக்க வைப்பதிலும் சுகம் உண்டுனு ஒரு சினிமா பாட்டும் உண்டே.  காதலி வருகைக்காக காதலனும்,பள்ளி சென்ற
குழந்தைகள் வருகைக்காக பெற்றோரும், கடவுள் தா¢சனம் வேண்டி நீண்ட கீயூவீல் பக்தர்களும் , டாக்டர் வருகைக்காக, பேஷண்டுகளும், இன்னம் சினிமா தியேட்டர்களில் , ரேஷன் கடைகளில், ரயில்வே ஸ்டேஷன்களில்னு காத்திருக்கிறவங்க கூட்டம் அதிகம்தானே”..

“அப்பா பிளந்து கட்டறியே” என்றேன்..
-6-
அப்போதுதான் ஒரு நாள் எங்களது அலுவலகத்துக்கு ஒரு எஸ்.டி.டி. கால் வந்தது எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து அதுவும்  மதியம் 3 மணியளவில் ஒரு அவசர விபரம் அன்றே அனுப்புமாறு..
அது மக்களவை கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயம் ஆதலால் கனம் எதிர் கட்சி உறுப்பினர் எங்கள் இலாகா செயல்பாடு  பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார் .  மறுநாளோ, அதற்கு அடுத்த நாளோ அந்த
விபரம் அவையில் சமர்பிக்க வேண்டும் என்பதால் அவசரம்.  அப்போதெல்லாம்  ஈ மெயில், ஃபாக்ஸ், .செல்போன்கள் பயன்பாட்டுக்கு வராத கால கட்டம் என்பதால் “ஸ்பீட் போஸ்டில்” விபரம் அனுப்ப
கோ¡¢யிருந்தார்கள்  தலைமை அலுவலகத்தில்.  இப்படி கேட்பதற்கு “STARRED QUESTIONS”என்று பெயர். ஆளும் கட்சி பதில் அளித்தாக வேண்டும் உடனடியாய் என்பது
விதி.  அப்படித்தான் அன்று எங்கள் அலுவலகத்துக்கு விபரம் STDயில் கேட்டபோது மாலை 4 மணி ஆகியிருந்தது.  சில ஊழியர்கள் வீட்டுக்கும் போய் விட்டார்கள்.
ஆனாலும் எங்கள் தலைமை எப்படியாவது விபரங்களை எல்லா பி¡¢வுகளிலிருந்தும் கோ¡¢, முடிந்தால் ஒ.டி. கொடுத்தாவது பெற்று அன்றே ஸ்பீட் போஸ்டில் அனுப்பியாக வேண்டும் என்றும் என்னிடம் சொல்லி,
 you kinfly organize,okey  என்றார்.  மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தேன்.  பல பி¡¢வுகளில் அந்த குறிப்பிட்ட ஊழியர் இல்லை என்றும் நாளைக்குத்தான் முடியும்
என்று சொன்னார்கள்.  இதை நான் உடனடியாய் செய்யாவிட்டால்  you are inefficient  என்பார்  என் மேலதிகா¡¢.  ஸி. ஆ¡¢ல் என்டி¡¢  adverse remark  வரும். அடுத்த பதவி உயர்வும் இதனால் தாமதிக்கப்படலாம்..  அதனால் எப்படியோ ஒவ்வொரு பி¡¢வுக்கும் நோ¢ல் போய் கெஞ்சி, கூத்தாடி நானும் உடனிருந்து விபரங்களை சேகா¢த்து கவா¢ங் லெட்டருடன் தலைமையின் கையொப்பம் பெற்று, கவா¢ல் போட்டு யாரை அனுப்பலாம் போஸ்ட் ஆபீசுக்கு என்று பார்த்தால் அனைத்து கடை நிலை ஊழியர்களும் தத்தம் வீடுகளுக்கு சென்று விட்டிருந்தனர்.  அப்போது இரவு மணி 8.30.  தலைமை அதிகா¡¢
என்னை அலுவலக ஸ்டாப் கா¡¢ல் போய் எப்படியாவது அன்றே அந்த தபாலை ஸ்பீட் போஸ்டில் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய பிறகே நான் வீட்டுக்குப் போக வேண்டுமென பணித்திருந்தார்.  
அப்போதெல்லாம் அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஸ்பீட் போஸ்ட் வசதிகள் பல்கி பெருகியிருக்கவில்லை.  அதுவும் இரவு 8 மணிக்கு மேல் என்றால் அண்ணா சாலை தலைமை அலுவல
கத்துக்குதான் போக வேண்டும்.  அங்கும் வெவ்வேறு அலுவலக ஊழியர்கள் கியுவில் கால் கடுக்க நின்று கொண்டிருப்பார்கள்.  கணினி வசதியும் இல்லை  என்று சொல்லியிருக்கிறேனே, அந்த குமாஸ்தா கையால் தான் ரசீது எழுதி கொடுக்க வேண்டும்.  அன்றைக்கென்று பார்த்து அதுவும் ஒரு வெள்ளிகிழைமை வாரக் கடைசி நாள் என்பதால் எக்கசக்க கூட்டம் நின்று கொண்டிருந்தது அந்த தபால் அலுவலகத்தில்..
என் முறை வந்து வேலை முடித்து நான்அண்ணாந்து  பார்த்த போது இரவு மணி 10.30 ஆகியிருந்தது. ஜானு பற்றிய பயம் நெஞ்சில் பந்தாய் அடைத்துக்கொண்டது.  அலுவலக கார் ஓட்டுனர்
என்னிடம் சொன்னார் “டி.டி.ஜி, ஐயா உங்களை உங்க வீட்டாண்டவே ட்ராப் பண்ண சொல்லியிருக்கார்” என்றான்.  எனக்கு டிரைவரை பார்க்க பாவமாய் இருந்ததால் அவா¢டம் “நான் ஆட்டோ
பிடிச்சுக்கிட்டு வீட்டுக்கு போய்க்கிறேன்.  பாவம் நீ எப்ப இங்கிருந்து 8 கி.மி. தூரம் உள்ள நம்ம ஆபீசுக்கு போய் காரை ஷெட்டில் விட்டுட்டு, எப்ப வீடு திரும்புவே, அதுவும் உன் லொடலொட்டா சைக்கிள்ள” என்ற போது”ஆமாம் சார்..
நான் வீடு போக ராத்தி¡¢ 12 , 1, 2 கூட ஆயிடும் சார் சமயத்தில்..  அதுக்கு இன்னா  பண்றது சார்?”என்றவனைப் பார்த்து,”உன் வீட்டில்,
 பதறிப்போயிட மாட்டாங்களா, கவலைப் பட மாட்டாங்களா இவ்வளவுவு நேரமா உன்னை க்காணலைனு” என்ற போது  “அதெல்லாம்
பதறவோ, கவலைப்படவோ மாட்டங்க சார். என் டூட்டி நேரம் அப்படினு தொ¢யும் என் சம்சாரத்துக்கு.  உங்களுக்கே தொ¢யுமே, டெல்லி, மும்பை, கோல்கட்டா, சண்டிகட்டிலல்லாம் இருக்கிற நம்ம
ஆபீசுகள்ளருந்தெல்லாம் ஆபீசர்மாருங்க வந்துகினும், போய்க்கிணும் இருக்காங்கள்ள பிளைட்டில.  அப்பல்லாம் நேரம் காலம் பார்க்க முடியுமா ஐயா” ராத்தி¡¢ 1 மணிக்கு பிளைட் வந்தா
செகூ¡¢டி செக்கெல்லாம் முடிஞ்சு அவங்க வெளில வந்து அங்கிருந்து அவங்க தங்கியிருக்கிற கெஸ்ட் ஹவுஸுக்கு இட்டுகிணு போய் விட்டுட்டு திரும்பி பார்த்தா மணி 3 ஆகியிருக்கும்.  அப்ப கூட
சில ஆபீசர்மாருங்க “கொஞ்சம் இரப்பா.  டீ வாங்கி கொடுத்துட்டு போ, சிகரட் வாங்கி கொடுத்துட்டு போ… அப்புறம் காலைல 7க்கு இங்கே இருக்கணும்பாங்க”. ஒருத்தர் ரெண்டு பேர்களை தவிர
மத்தவங்க” ஏம்பா வீட்டுக்கு போகலையா நீ?சாப்பிட்டியா? சாப்பிடலைனா , ஏன் சாப்பிடலை… அட பாவமே! இப்படியா பட்டினி கிடந்து உடம்பை கெடுத்துப்பாங்கனுலாம்,ஒரு மா¢யாதைக்குக்கூட.ஊஹூம் கேட்கவே மாட்டங்க.”
அவங்களை சொல்லியும் என்ன லாபம்? அவங்களும் பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டுட்டுத்தானே டூர் வராங்க ஆபீஸ் வேலையா.. வந்த வேலையை நல்லபடியா முடிக்கணுமேன்ற பயம் இருக்கும்ல.
சில ஆபீசர்மாருங்க ஏம்பா எங்கூடவே இருந்துடேன்.  எனக்கு மொழி பிரச்சினைனு சொல்வாங்க.  எனக்கு பல ஆபீசர்மாருங்க கூட பேசி, பேசி ஓரளவுக்கு  ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்,
கன்னடம் அப்படியே கொஞ்சம் பட்லர் இங்ளிஷ் வரும்.  சில பேர்கள் அவங்க சாப்பிடச்சொல்ல எனக்கும் வாங்கி கொடுப்பாங்க.  இன்னம் சிலர்! “வண்டியிலேயே இரப்பா.  சாப்பிட்டுட்டு வந்துடறேன்னு” சொல்வாங்க..2 மணி நேரம்கூட காத்திருந்தது உண்டுதான்..
நாய் வேஷம் போட்டானு ! அட வீட்டுக்கு போனா அங்கே, அங்கே… வேணாம் சார் என் சொந்த கதை, சோகக்கதை.  கிடைக்கிற காப்பில ஒரு பன்னோ, பொறையோ எதையோ தின்னு பசியாற வேண்டியதுதான்..”

 “சா¢ நான் கேட்ட கேள்விக்கு என்ன, என்னவோ சொல்லி சமாளிக்கப் பார்க்கிறேனு தொ¢யுது.  நீ எப்ப வீட்டுக்கு போனாலும் ஏன்யா லேட்டுனு கேட்கவே மாட்டங்களா உன் சம்சாரம்? என்ற போது தன் மௌனத்
தையே பதிலாக்கினான்.  ஊம்.  என் வீட்டிலும் இருக்கிறதே ஒரு பிசாசு…நான் அலுவலகம் விட்டு வீட்டுக்கு போக கொஞ்சம் தாமதமானலும் அழுது, ஊரை கூட்டி….  இப்படி எதை, எதையோ
எண்ணியவாறு நான் என் வீட்டு வாயிலுக்கு வந்துபோது, அங்கு…!!
-7-
பதற்றமுடன், என் இரு பெண்களும் விக்கி,விக்கி அழுதவாறு “அப்பா,அப்பா” என்று…மேலே எதுவும் பேச முடியாமல் திணறியவாறு நிற்க,
.”என்னம்மா, என்னாச்சு? ஏன் அழறீங்க? அம்மா எங்கே?” என்று கேட்டவாறு உள்ளே எட்டிப் பார்த்தபோது என்
வீட்டுக்குள் அக்கம், பக்கத்து பெண்டிர் சிலரும் நின்று கொண்டிருக்க, ஏதோவொன்று நடந்திருக்கிறது என்று தொ¢யவர,  என் பெண்களை பார்த்து “என்னம்மா? என்னாச்சுனு அழாம சொல்லுங்க.
அதான் அப்பா வந்துட்டேன்ல” என்றபோது “அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கப்பா நீங்க இவ்வளவு நேரமா வராததால .எங்களுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. என்ன செய்யறதுனு பு¡¢யவும் இல்லை..தொ¢யவும் இல்லை.. அதான் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு ஆண்டிகளை கூப்பிட்டோம். அவங்களும் தண்ணியை எடுத்து மூஞ்சில அடிச்சு பார்த்தும் மயக்கம் தெளியாததால டாக்டருக்கு போன் பண்ணி,உடனே
டாக்டரும் வந்து பார்த்து பர்ஸ்ட் எய்ட் கொடுத்துட்டு இன்னம் ஒன்னவர்ல மயக்கம் தெளியலைனா, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண வேண்டியிருக்கும்னு  வயத்தில புளியை கரைச்சாப்பல ஒரு சேதியை
சொல்லிட்டு போயிட்டார்பா.  அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாதேப்பா? பயமாயிருக்கேப்பா.  ஏம்பா இவ்வளவு லேட்டு ஆபீஸ் விட்டு வரதுக்கு? ஏதவாது சினிமா போயிருந்தீங்களா பிரண்ட்ஸ்க கூட”என்ற பெண்களிடம்,

“இல்லைம்மா.. இன்னைக்கு ஒரு அவசர வேலை.  அதை இன்னைக்கே முடிச்சு எங்க டெல்லி ஆபீசுக்கு ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பணும்னுட்டார் எங்க பாஸ். அதான்…”

சின்ன பெண்களான அவர்களுக்கு என் வேலை பற்றி தொ¢யவில்லை.  சொன்னாலும் பு¡¢யாதுதான்.  ஒரு கால் பெண்களே மாலை வேளைகளில் “அப்பா ஏம்மா இன்னம் ஆபீஸ் விட்டு
வரலைனு கேட்டாலும் “ஏதாவது அவசர வேலை வந்திருக்கும்மா.  அதை முடிச்சு கொடுத்துட்டு தானே வரணும்.  சா¢யா? நீங்க சாப்பிட்டுட்டு தூங்குங்க” என்று சொல்லி சமாதானப்படுத்த
வேண்டிய ஒரு குடும்பத்தலைவியே இப்படி தொட்டதற்கெல்லாம் மனதை தளர விட்டுக்கொண்டு, குழந்தைகளையும் அச்சுறுத்தி…  என்ன பெண்மணி இவள்? ஒரு கால் நாளையே நான்
ஆபீஸ் வேலையாய் மாதத்தில் சில நாட்கள் வெளியூருக்கு டூர் போக நேர்ந்தால்… இவளை ஒரு தேர்ந்த சைக்கியாற்றிஸ்டிடம்  காட்டி கௌன்சல்லிங் கொடுத்து சா¢ பண்ண வேண்டும் என்று
நினைத்துக்கொண்டேன்.  எனக்கு ஒரு பக்கம் வெள்ளந்தியான சுபாவம் கொண்ட அவளை பார்க்க பாவமாயும் இருந்தது. இன்னொரு பக்கம் பயமாகவும் கூட.  சா¢ இப்ப என்ன செய்யறது..யோசித்து,யோசித்துப் பார்த்து கடைசியில் அவனடி பணிவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்
என்று நினைத்தவாறு  என் குல தெய்வமான உப்பிலியப்பா காப்பாற்று… மகாலிங்க ஸ்வாமி, பிரகத்சுந்தரகுசாம்பிகை தாயே, மூகாம்பிகை தாயே, ஏகச்சக்கர நாராயணா.. மனத்துணை நாதா,
மாழையொங்கண்ணி அம்மா காப்பாறு என்னை இப்போது இந்த இக்கட்டிலிருந்து.  என் ஜானுவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது” என்றெல்லாம் பிரார்த்தனை செய்தவாறு,  “ஆதித்ய ஹிருதயம்” மும்முறை  சொல்லி வேண்டி
நின்ற போது என் பெண்கள் என்னிடம் வந்து!!
-8-
“அம்மா கண் விழிச்சுட்டாங்கப்பா.  உங்களை தேடறாங்க” என்ற போது ஓடோடி சென்று பார்க்க கண்களில் வழிந்தோடும் கண்ணீருடன் ஜானு “வந்துட்டீங்களா? அப்பா நான் கும்பிடற
தெய்யவங்கள் என்னை கை விடலைங்க” என்றாள்.  “இதுக்கெல்லாமா போய் கடவுள் கிட்ட முறையிடறது?” என்று நான் கேட்டேன் சற்று முன் நான் வேதனைகளுடன் கடவுளிடம்
வேண்டிக்கொண்டதையும் கன்வீனியன்டாய் மறந்து ..

என் கைகள் பற்றி அழுதது என் மனைவியா அல்லது குழந்தையா.  என்ன சொல்லி இவளை தேற்றுவேன்? எத்தனை முறைகள் இவளிடம் சொல்லியிருக்கிறேன் ஒரு அலுவலகம் என்றால்
சில சயமங்களில் வீட்டுக்கு கிளம்பும் தருணத்தில் அவசர வேலை வரலாம் உடனே முடித்து கொடுத்துவிட்டு வருமளவுக்கு.  இதெற்கெல்லாம் பயப்படக்கூடாது” என்றெல்லாம்.  என் பணி சுமையையும்
மறந்து நான் ஏதாவது சொல்லப்போய் மறுபடி ஜானுவுக்கு ஏதாவது….  

“ஆபீஸ்ல லேட்டாகும்னா முன் கூட்டியே சொல்லிட்டு போக மாட்டீங்களா என்ன” இந்த விஷயத்தில எல்லா ஆம்பிளைகளும் ஒரே மாதி¡¢யாதான் இருக்காங்க.  ஆபீஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்குப்
போனமா, பெண்டாட்டி,பிள்ளைங்க காத்திருப்பாங்களே ஆவலோட நமக்காகனு பார்க்காம பிரண்ட்ஸ்க கூட சீட்டாடறது, சினிமா போறது, ஹோட்டலுக்கு,  பீச்சுக்கு போறது ¡¢லாக்ஸ் பண்ணிக்கிறேன் பேர்வழினு…ஆனா
வீட்டு பொம்பிளைங்களான நாங்க எங்கே போய் ¡¢லாக்ஸ் பண்ணிக்க முடியும்” என்றார்கள் அக்கம்,பக்கத்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் எப்படி சொல்லி பு¡¢ய வைக்க முடியும் நான் மத்த ஆம்பிளைகள் போல இல்லை என்று.
எனக்கு ஜானு மீது கோபம், கோபமாய் வந்தது ஊரை கூட்டி ஆர்பாட்டம் செய்ததால் தானே கண்டவர்களின் அட்வைஸையும் கேட்க வேண்டியிருக்கிறது.

“இவ்வளவு நேரமானதில்லை இது வரை ஆண்டி.  இன்னைக்குனு பார்த்து” என்ற போது “கவர்மென்ட் ஆபீஸ்தானே என்ன அவசரம் ? நாளைக்கு பார்த்துக்க வேண்டியதுதானே” என்றனர்.
இவர்களுக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கு கவர்மென்ட் ஆபீஸ் என்றால் யாருமே வேலை செய்வதிலை என்றதொரு அபிப்பிராயம் பரவலாய் இருக்கிறது.  ஏதோ சிலர் வேண்டுமானால்
அசட்டையாய் இருக்கலாம்.  அதனால் எல்லாருமே வேலை செய்ய மாட்டர்கள் அரசு அலுவலகத்தில் என்று எப்படி? உதாரணத்துக்கு இன்றைய சம்பவத்தையே எடுத்துக்கொள்ளலாம்.
மக்களவைகூட்டம் நடந்து கொண்டிருக்கிறது டெல்லியில். அங்கு கார சாரமாய் அரசின் செயல்பாடுகள் பற்றி விவாதம் அனல் பறக்கிறது.  அப்போது கனம் எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர்
எங்கள் துறை பற்றிய கேள்வியை முன் வைக்க, எங்கள் துறை அமைச்சர் எங்கள் இலாகாவில் விளக்கம் கேட்க, டெல்லி தலைமை அலுவலகத்திலிருந்து  பாரதம் பூரா விரவியிருக்கும்  எங்கள்
அலுவலகங்களிடம் உடனடியாய் விளக்கம் கேட்க, அதை செய்து முடித்து, சா¢ பார்த்து அன்றே எங்கெல்லாமோ அலைந்து, நீண்ட வா¢சையில் கால் கடுக்க அந்த இரவு  வேளையில் நின்று
ஸ்பீட் போஸ்டில் அனுப்பிவிட்டு திரும்பி பார்த்தால் மணி இரவு 10.30.  இப்படி அனேக நாட்களில் மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது என் மேலதிகா¡¢ என்னை கூப்பிட்டு
“இப் யு டோன்ட் மைண்ட்.  ஒரு அர்ஜன்ட் வேலை.  இருந்து முடிச்சு கொடுத்துட்டு போக முடியுமா?” எனும் போது எப்படி என்னால் முடியாது.  என் மனைவி எனக்காக காத்திருப்பாள்” என்று சொல்ல முடியும்..!
அப்படியே சொன்னாலும் “எங்க வீட்டில மட்டும் காத்திருக்க மாட்டாங்களா என்ன ? என்ன சார் செய்யறது? ஏற்கனவே கவர்மென்ட்  ஆபீஸ்னா வேலை செய்ய மாட்டாங்கனு பரவலா ஒரு
அபிப்பிராயம். நாம் வாங்கற சம்பளத்துக்கு மனசாட்சிக்கு பயந்து நம்ம கடமையை செய்ய வேண்டாமா” என்று நீண்டதொரு பிரசங்கம் செய்வார்.  அவர் சொல்வதும் சா¢தானே? அவரும்தானே என்னுடன் அந்த இரவு வேளையில் காத்திருந்து
நான் சேகா¢த்து டைப்படித்து கொடுத்த விபரங்கள் எல்லாம் சா¢யா என்று ஒரு தடவைக்கு இரு முறை பார்த்து “எல்லாம் கரக்டா இருக்கா? ஒரு முறைக்கு இரண்டு முறை செக் பண்ணிட்டீங்களா?
இது பார்லிமென்டுக்கு போக வேண்டிய பதில். இதில ஏதாவது சொதப்பிட்டம்னா, மெமோ, எக்ஸ்பிளனேஷன்,லொட்டு, லொசுக்குனு வரும்.  தேவையா நமக்கு? என்பவர் “டீ சாப்பிட்டீங்களா?
ரொம்ப டயர்டா இருக்கு (அவருக்கு ஏசி அறையில் உட்கார்ந்திருக்க டயர்டாயிருக்காம்)  என்ன செய்வது? “காலம் செய்த கோலமடி”என்று பாடத்தான் வேண்டியிருக்கிறது.
அப்போதெல்லாம் அதிகா¡ என்னைப் பார்த்து,என்ன சார் யோசனை?
ஆர்டர் பார் டீ அண்ட் பிஸ்கட்ஸ் ஓகே.  மறக்காம எங்கிட்ட காசு வாங்கிக்குங்க” என்பார்.  ஊம். இதை எல்லாம் நான் என் அக்கம் பக்கத்தா¡¢டம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன?
“மௌனம் கலகம் நாஸ்தி” என்றொரு வட மொழி பழ மொழி .  அதாவது வாயை மூடிக்கொண்டிருந்தாலே பல பிரச்சினைகள் தானாகவே தீரும் என்று பொருள்பட.  

“என்னை மன்னிச்சுருங்க.  உங்களுக்கு ஆபீஸ்ல அனேக நாட்கள்ள  லேட்டாயிருக்கு.  ஆனா இவ்வளவு நேரம் ஒரு நாளும் ஆனதில்லை.  நான் என்னனு நினைக்கிறது சொல்லுங்க.  இன்ணொண்ணுங்க.  நீங்க இல்லைனா நான் இல்லை.  அந்த ஷணமே என் உயிர் ஆட்டமாட்டிக்க போயிரும்.” என்ற அவளிடம் “அதான் பார்த்தேனே இப்ப” என்று ஆதுரமாய் அவள் கைகளை பற்றிக்கொண்டபோது “குடும்பம்னா இது குடும்பம் சார்.  இப்படி ஒரு சம்சாரம் உங்களுக்கு அமைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்.  கொஞ்சம் லேட்டானதுக்கே என்ன பதற்றம், அழுகை, மயக்கம் போட்டு
விழுந்து… “அம்மா உங்களை கையெடுத்து கும்பிடத்தோணுதும்மா.  சார் நீங்களும் அம்மா மனசு கோணாம நடந்துக்குங்க .  ஆங்க்.. அன்னைக்கு ஒரு கேள்வி என்னியப்பர்த்து கேட்டீங்களே, நினை
விருக்குதா சார் உங்களுக்கு? அதான் நீ லேட்டா வூட்டுக்கு போனா உன் சம்சாரம் உன்னிய எதுவும் கேட்காதானு? கேட்காது எத்தினி நாள் நான் வீ£ட்டுக்குப் போகாட்டியும்கூட. சா¢யான மண்ணாந்தை, ஜடம் சார் அது.
புருஷங்காரன் நேரம் காலம் பார்க்காம ஓடி, ஓடி உழைச்சு கொண்டுகிட்டு வரானே , உனக்கு என்னையா வேணும்? என்ன சமைக்கட்டும்? கையை காலை பிடிச்சு விடவா, சுடு தண்ணி போட்டு
தரேன்.  அதில குளி.  ஊஹூம். நைட்ல நேரம் கழிச்சு வூடு போய் மதியமும் சா¢யா சாப்பிடாம நைட்டிலயும் எதுவும் சாப்பிடாம டீயை, டீயை குடிச்சிட்டு ஆசை, ஆசையாய் பெண்டாட்டி
கையால துண்ணணும்னு போனா, அது நேரம் காலம் பார்க்காம தூங்கிக்கினு இருக்கும்.  “இப்பத்தான் வந்தியா? நீ வர மாட்டியாங்காட்டியும் துண்னனு உனக்கு எதுவும் வைக்கலையா”என்பாள், அதுவும் படுத்துக்கிட்டே..அரைதூக்கத்தோட.  சா¢ வைக்கலை இப்ப ஏதாவது செஞ்சு தரட்டுமாயா? எப்ப சாப்பிட்டே? என்ன சாப்பிட்டேனு … ஊஹூம்.  அப்படியே பேசிக்கிணே இருக்கச்சொல்ல குறட்டை விட்டு தூங்கிடுவா? என் கஷ்டங்களை நான் யாராண்ட சார் பகிர்ந்துக்க முடியும்?
நல்லாதான் ஐயா கவிஞர் அன்னைக்கே பாடி வச்சார் “மனைவி அமைவதெல்லாம்  இறைவன் கொடுத்த வரம்னு”.  ஐயா நீங்க கொடுத்து வச்சவர்.  அம்மாவை பொக்கிஷமா காப்பாத்துங்க…
அவங்க மனசு கோணாம பார்த்துங்க.  உங்களைப்போல மனசொத்த தம்பதிகளை பார்க்கிறப்ப கையெடுத்து கும்பிடணும் போல இருக்கு ஐயா.  நான் வரேன் ஐயா.  வரேம்மா” என்று சொல்லி விட்டு,
கண்களில் வழிந்தோடும் கண்ணீருடன் எங்களை பார்த்து கூப்பிய கைகளுடன் விடை பெற்றான்.

மீண்டும் முதல் பாராவுக்கு வருக..நினைவலைகளிருந்து மீள்கிறேன் நான்,
அன்று, என் மனைவி நான் வாக் போகக் புறப்பட்டபோது ஒரு செல்போனை என்னிடம் கொடுத்தபோது..என்ன அற்புதமான காலகட்டம் அது..அதாவது ..50 வருடத்துக்கு முந்தைய எங்கள் தாம்பத்திய காலம்..இன்றுவரை எங்கள் தாம்பத்தியம் சிறப்பாகத்தானே நடக்கிறது..”அன்பின்
வழியது உயிர்நிலை” ..என்ன அற்புதமான கவி வாக்கு..
ஆனால் இன்று! கணவனும்,மனைவியும் ஒரே நேரத்தில் வேலைக்கு போய் வந்தால் கூட பரவாயில்லை..மாறி,மாறி இருவருக்குமே ஷிஃப்ட்..
ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசக்கூட நேரமில்லாமல்..இன்றைய இளசுகளை நினைத்தால் வேதனைதான் நெஞ்சை கவ்வுகிறது..

                                                                                                                 ——-

Series Navigationஉள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதிநமக்கான எதுவும் நம்மிடம் இல்லை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *