தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

மனப்பிராயம்

Spread the love

மஞ்சுளா                       மதுரை 

என் 

மனப்பிராயத்தின்

வயது 

இன்னும் ஒன்றுதான் 


அதில் 

நகராத கணங்கள் 

இன்னும் என்னுள் 

என்னை

நீரூற்றி வளர்க்கின்றன.


சிற்சில சமயங்களில்

பூக்கும் பூக்களை 

சுற்றி 

நினைவுப் பட்டாம்பூச்சிகள் 

பறந்து 

கதை சொல்லும் .


அந்த வயதில் 

பார்த்தே அறியாத 

எதைப் பற்றியும் 


வேகமாகப் பாயும் 

காலச்சாத்தனின் 

கைப்பிடிக்குள் சிக்கி 


இறக்கைகள் 

உதிர்ந்து போன 

இன்றும் கூட

 
எதையோ நினைத்தபடி 

மண்புழுவாய் 

ஊர்ந்து போகிறது 

சுவையூற்றை தேடி 

மனதின் அடியில்.

மஞ்சுளா                       மதுரை 

Series Navigationபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டனசி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’

Leave a Comment

Archives