தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

மழைப்பருவத் தொடக்கம்

Spread the love

நா. லதா

கணித்தனர் சோதிடம்

மழைக்கான தொடக்கம்

அவளுக்கும் சேர்த்தே

மழைவரும் நாளில்

மனக்கடலில் ஆரவாரம் 

கனவுகள் ஆர்பரிக்க

எண்ணங்களின்

அலைகள் கரைகளை

தொடுவதும் செல்வதுமாக

மையல் கொண்ட மழை

ஆலிலை கொண்டு

சாரலின் கதகதப்பாய்

ஆலிங்கனம் செய்திடுமோ

முல்லைப்பூவெடுத்து

சிலிர்க்கும் மழைத்துளியாய் 

மேனியில்

வரைந்திடுமோ

ஆயிரமிதழ்கொள்

மலர்கொண்டவளை

வருடும்

இசையருவியாய் 

துயில்செய்யுமோ

துளிர்த்திடும் 

முத்துக்களை

தம்மிதழ்கொண்ட

முத்தத்தால் 

சிந்தும்

தேன்மழையென

துடைத்திடுமோ

தினம் தினம் 

கொந்தளிப்பில் அவளுக்கான

மழைப்பருவம்…. 

நா. லதா. பி. அ. 

ம. ந. ம. கு. ந. துறை.

3.11.2019.

=====================================

Series Navigationசுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “மந்தைவெளி மரணக்கிணறுகள்

Leave a Comment

Archives