தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை

சின்னக்கருப்பன்

Spread the love

தமிழகத்தில் எது இன்று அதிகாரப்பூர்வமான “சரியான அரசியல்” politically correct என்பதை சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி என்னும் திமுக தலைவரின் தனது பேச்சில் உறுதி செய்திருக்கிறார்.

அரசியல் ரீதியில் அவர் இரண்டு விசயங்களை பேசியிருக்கிறார்.
ஒன்று தலித் நீதிபதிகள் நியமிகப்பட்டது திராவிட இயக்கத்தின் பிச்சை என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது பத்திரிக்கைக்காரர்கள் ரெட்லைட் ஏரியாக்காரர்கள் போல காசுக்கு விலைபோவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டுமே இன்றைய தமிழகத்தில் “சரியற்ற அரசியல்” politically incorrect. இரண்டையுமே பேச கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்திய பின்னர், இந்த இரண்டுக்கும் மன்னிப்பு கேட்டுகொண்டார்.

தலித் மக்களின் தலைவராக தன்னை முன்னிறுத்திகொள்ளும் திருமாவளவன் சில பல நாட்கள் கழித்து, அவர்கள் நீதிபதி பதவிகள் எல்லாம் பெற்றது அம்பேத்கார் அரசியல் சாசனத்தில் ஏற்படுத்தி கொடுத்த  உரிமை என்று பேசியிருக்கிறார். (அவர்கள் திறமையினால் பெற்றார்கள் என்று திருமாவளவன் ஏனோ குறிப்பிடவில்லை. அதன் காரணம் அதன் காரணம் யாருக்குத் தெரியும்? )

திறமையினால் உயர்ந்த எத்தனை எத்தனையோ பட்டிலினத்தவர்கள் பல இடங்களில் பல்வேறு துறைகளில் கோலோச்சிகொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவை எல்லாம் அரசியல் பேச உதவாது என்று திருமாவளவன் கருதிவிட்டார் போலிருக்கிறது. இளையராஜா என்னும் மேதையினால் இன்று தமிழக இசையுலகமே பெருமைப்பட்டுகொண்டிருக்கிறது. அதற்கு அம்பேத்காரோ அல்லது திராவிட இயக்கமோ எந்த பிச்சையும் போடவில்லை என்று சொல்லவேண்டியிருக்கிறது. அவர் போல எத்தனை எத்தனையோ திறமைசாலிகள் எவரது பிச்சையையும் எதிர்பாராமல் எவரது பிச்சைக்கும் தேவையிராமல் அவர்கள் பாட்டுக்கு வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள்.

இரண்டாவது பத்திரிக்கையாளர்கள் பலர் ரெட்லைட் ஏரியாக்காரர்கள் போல காசுக்கு கூவுகிறார்கள் என்று சொல்லுகிறார். தமிழகத்தில் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் திமுகவுக்கு சொம்பு தாங்கிகள் தான். தமிழகத்தில் எவ்வாறு ஸ்டெர்லைட், நீட், ஹைட்ரோகார்பன் இன்ன இதர ஆகியவை பெரும் பிரச்னைகளாக ஊதி ஊதி உருவாக்கப்பட்டன, இந்த விவாதமேடைகள் யாரை குறி வைத்தன, யாருக்கு ஆதரவாக விவாதத்தை உருவாக்கின என்பதை பார்த்தவர்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இராது. ஆனால், அங்கங்கு இருக்கும் ஓரிரு பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி விவாத மேடை உருவாக்குபவர்கள், திமுகவை பற்றியும் பேசிவிட்டால்,  அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார் இந்த திமுக தலைவர் ஆர்.எஸ். பாரதி அவர்கள். ஒருவேளை திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று அவர் நினைப்பதால்  ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களுமே அப்படித்தான் என்று நினைத்துவிட்டாரோ என்னமோ !

இதை பற்றியும் ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற வகையில் பத்திரிக்கையாளர்கள் கண்டனத்தை பதிவு செய்துவிட்டு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், ஆகையால் இதனை பற்றி பேசக்கூடாது என்று அறிவுஜீவி புளுகர்கள் அறிக்கைவிட்டு திமுகவுக்கு சொம்படிக்க கிளம்பிவிட்டார்கள்.

மூன்றாவது என்று ஒன்று அவர் சொன்னார். ஆனால் அது பொலிடிகலி கரெக்ட்.

அதாவது ஹெச் ராஜா அவர்களை பொறுக்கி நாய் என்றும் பார்ப்பன நாய் என்றும் குறிப்பிட்டார்.

இது தமிழ்நாட்டில் எந்த ஒரு பத்திரிக்கையாளரும், பத்திரிக்கையும், அரசியல் விமர்சகரும், விகடனும், பெருந்தேவி, ராஜன்குறை,  காலச்சுவடு கண்ணன், கலாப்ரியா, அம்ஷன்குமார்,  ஸ்டாலின் ராஜாங்கம், கோ ராஜாராம், வெளி ரங்கராஜன், அம்பை போன்று (சில நேரங்களில் நான் முரண்பட்டாலும்) மதிக்கும் சிந்தனையாளர்கள் எவருமே இதனை விமர்சிக்கவோ, பேசவோ இல்லை. இதற்காக முக ஸ்டாலின் ஆர் எஸ் பாரதியிடம் மன்னிப்புக்கேளுங்கள் என்று சொல்லவுமில்லை. ஆர்.எஸ் பாரதி மன்னிப்பு கேட்கவுமில்லை. ஏன், வேறெந்த நபரும் இதனை பேசக்கூட இல்லை.  பார்ப்பனர்களால் பலனடைந்தவர்கள் மட்டுமே அவர்களுக்கு பரிந்து பேசவேண்டும் என்ற வார்த்தையையும் நான் நிராகரிக்கிறேன். இது ஒரு அடையாளத்தின் மீதான தாக்குதல். இது அசிங்கமான, பிறப்பின் அடிப்படையிலான, இனவெறுப்பு அரசியல்.

இதுதான் பரந்த தமிழக வெளியில் பெரியாரின் மிகப்பெரிய வெற்றி.
பெரியார் பரப்பியது வெறும் இனவெறுப்பு தானே தவிர அதில் எந்த விதமான புண்ணாக்கும் இல்லை என்று நான் வாதிட்ட போதெல்லாம் எடுத்து காட்டி பேசியவர்கள் இன்று ஒரு பார்ப்பன தாய் தந்தைக்கும் பிறந்த ஒருவரை பார்ப்பன நாய் என்று சொல்லும்போது அதனை மிக எளிதாக, அது ஒரு விஷயமே இல்லை என்பது போல கடந்து செல்கிறார்கள்.

ஹெச் ராஜாவை பொறுக்கி நாய் என்று சொல்லுவது அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது. ஆனால் பார்ப்பன நாய் என்று சொல்லுவது பார்ப்பன குலத்தில் பிறந்தவர்கள் மீது எறியப்படும் பொதுவான பகிரங்கமான வசைச்சொல்.

இந்த வெறுப்பு, யூதர்கள் மீது கிறிஸ்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கட்டமைத்த வெறுப்புக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை.  

இதே ஆர்.எஸ் பாரதி, இதே வார்த்தைகளோடு கிறிஸ்துவரையோ அல்லது இஸ்லாமியர்களையோ அல்லது செட்டியார்களையோ அல்லது பட்டியலினத்தவரையோ சொல்லியிருந்தால் தமிழகத்தில் எப்படிப்பட்ட கொந்தளிப்பான நிலை உருவாகியிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

இங்கே திமுக வெற்றிகரமாக இரண்டு அன்னியர்களை கட்டமைத்திருக்கிறது. ஒன்று பார்ப்பனர்கள். இவர்கள் நாய்கள். மற்றொன்று பட்டியலினத்தவர்கள். இவர்கள் திராவிட இயக்கத்தின் பிச்சையில் வாழ்பவர்கள். பார்ப்பனரல்லாத, பட்டியலினத்தவர் அல்லாத, குலங்களை ஒன்றிணைப்பது திராவிட இயக்க போர்வை. இதற்குள் வடுகர்கள், கன்னடர்கள் எல்லாரும் வரலாம். ஆனால் பட்டியலினத்தவரும், பார்ப்பனர்களும் விலக்கு.

“திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல” என்று ஆர்.எஸ் பாரதி, முக ஸ்டாலின் போன்றவர்கள் தற்போது சொல்லிகொள்வது.  திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல என்றும், நாங்களும் இந்துக்கள்தான் என்றும், நானும் இந்து கோவிலுக்கு போகிறேன் என்று சொல்லுவதும் காட்டும் அடிப்படை முரண்பாட்டை அவர்கள் உணர்ந்தும், அதில் இன்று சால்ஜாப்பு சொல்லி மேலும் மாட்டிகொள்கிறார்கள்.

”இந்து என்று சொல்லாதே இழிவைத்தேடி கொள்ளாதே” என்று முழக்கமிட்ட திகவும் திமுகவும் இன்று ஏன் தங்களை இந்துக்கள் என்று சொல்லி “இழிவை” தேடிக் கொள்கிறார்கள்?  தன்னை இந்து என்று சொல்லிகொள்ளும் திமுக தலைவர் ஏன் இஸ்லாமியரின் திருமணத்தில் சென்று இந்துக்களின் திருமணத்தை கிண்டல் செய்யவேண்டும்? இது எப்படியான இந்து?  அங்கே யாரும் இந்து மதத்தை கிண்டல் செய்தால், நானும் இந்துதான், அவ்வாறு கிண்டல் செய்வது என்னை அவமானப்படுத்துவதற்கு சமம் என்று சொல்லியிருக்கிறாரா ஆர்.எஸ் பாரதியோ அல்லது முக ஸ்டாலினோ?  இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் மதமாக இவர்கள் கட்டமைத்ததை இவர்களே ஒப்புகொள்ளவில்லை என்பதுதானே உண்மை? அதனால்தானே இவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் குலதெய்வத்திடம்  இந்து பாரம்பரியத்தின் படி நின்று வணங்கி அந்த பூசாரியிடம்  திருநீறு பெறுகிறார்கள்? இந்து கோவில்களுக்கு தர்ம கர்த்தர்களாக இருக்கிறார்கள்?  சமயபுரம் மாரியம்மனுக்கு முன்னால் சென்று அழுகிறார்கள்? கள்ளழகர் கோவிலில் உரிமை கொண்டாடுகிறார்கள்?  

ஆனால், இந்த முரண்பாட்டை அவர்கள் உணராததால், பெரியார் பரப்பியிருக்கும்  இந்த பார்ப்பனர்கள் மீதான வெறுப்பு இங்கே கால் வைக்கும் இடமெல்லாம் சகதி போல காலில் சிக்கிக்கொள்கிறது. நாம் சகதியில் நிற்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அனைவரும், பார்ப்பனர்கள் உட்பட, இதில் குளித்து சந்தனமாய் பூசிகொள்கிறார்கள்.

இந்திய கலாச்சாரத்தின் மீதும் இந்து கலாச்சாரத்தின் மீது கிறிஸ்துவ போதனையாளரும், இஸ்லாமிய போதனையாளரும், காலனிய அடிவருடிகளான திராவிட இயக்கத்தினரும் எறியும் சாணியே பார்ப்பனர்கள் மீது எறியும் சாணி. பார்ப்பனர்கள் என்பது இங்கே வெறும் குறியீடு மட்டுமே.  

எந்த நாட்டின் மரபையும் அதன் அறிவுச்செல்வத்தையும் அழிப்பதே இம்பீரியலிஸ மதங்களின் முதன்மை பணி. இந்த பணியின் விளைவே  பிரிட்டன், பிரான்ஸ், ஐயர்லாந்து நாட்டில் இருந்த டுரூயிட்கள் (Druids) அழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே அமெரிக்காவில் ஷாமன்கள் கத்தோலிக்கத்தால் அழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே சூனியக்காரிகள் என்று பெயர் சூட்டி பல புராதன அறிவை கொண்டிருந்தவர்கள் அழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே இந்தோனேஷியாவில் இந்துக்கள் கொல்லப்பட்டு, பல இந்துக்கள் பாலியில் தஞ்சம் புகுந்தது.

காலனிய ஆதிக்கத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்டவன் தனது கலாச்சாரம் இழிவானது என்று நம்பத்தொடங்குகிறான். அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய பழங்குடிகளின் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கட்டாயமாக பிரித்து எடுக்கப்பட்டு வெள்ளையர்கள் நடத்தும் ஹாஸ்டலில் அவர்களை பற்றி அவர்களே குற்ற உணர்வு கொள்ளும் அளவுக்கு வளர்க்கப்பட்டார்கள்.  அமெரிக்காவில் பழங்குடியினரின் குழந்தைகளும் இவ்வாறே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு ஹாஸ்டலில் வளர்க்கப்பட்டார்கள். இந்த குழந்தைகள் பல கொல்லப்பட்டன. பல குழந்தைகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்கள்.

அப்படிப்பட்ட உளச்சிக்கலில் இன்று முழு தமிழகமே சிக்கிகொண்டிருக்கிறது. இதற்கு ஒரு விடிவோ விமோசனமோ இங்கே நான் பார்க்கவில்லை. ஏனெனில் இது உளவியல் சிக்கல் என்றே புரிந்துகொள்ளாத ஒரு கூட்டமே இங்கே நான் காண்கிறேன்.

என்னை பார்ப்பன அடிவருடி என்று நிச்சயமாக கூறுங்கள். நிச்சயமாக அது பெரியாரிய நாஸி இனவெறுப்பு அடிவருடியாக இருப்பதை விட எவ்வளவோ மடங்கு மேலானது.

Series Navigationஊர் மாப்பிள்ளைசூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..

8 Comments for “பெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை”

 • V. Srinivasan says:

  Outstanding ! பலரும் மூடி மறைக்கும் உண்மையை மிகச் சரியாக எடுத்துக் கூறியமைக்கு.

 • பொன்.முத்துக்குமார் says:

  உண்மையை உரத்துச்சொன்னதற்கு பாராட்டுகள்.

  பெரும்பாலான ஊடகங்கள் என்னவோ அந்த ஜந்து சொன்னதுபோலத்தான் நடந்துகொள்கின்றன. பின்னே, இதையே ஒரு பார்ப்பனர் சொல்லியிருந்தால் இன்னேரம் ஒட்டுமொத்த ஊடகங்களும் கொந்தளித்துக்குமுறியிருக்காதா ? உண்மையில் ஊடகங்களுக்கு சட்ட நெறிமுறைகள் வகுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

  இந்த ஜந்துவிற்கெல்லாம் கால்துடைத்துவிடுமளவுக்குக் கீழிறங்கியிருக்கும் அப்துல் ஹமீது, அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார் என்பதால் அதற்குப்பிறகு அவரை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார். ”மனுஷ்யபுத்திரன் என்னும் கவிஞர்” என்ற பீடத்தில் அமர்ந்திருந்தவர் இவர். சேராத இடம்தன்னில் சேர்ந்ததன் விளைவு.

  இப்படிப்பட்ட வெறுப்புப்பேச்சிற்கு தீண்டாமைச்சட்டத்தின்கீழ் உள்ளே தள்ளி முட்டியைப்பெயர்த்திருக்கவேண்டும்.

 • latha ramakrishnan says:

  ஃபேஸ்புக் முழுக்க இந்த இனவெறுப்பு வாதம்தான். இந்துமதம் என்பதே வந்தேறிய மதம் என்பதாகக்கூடப் பேசப்படுகிறது. வருத்தமாக இருக்கிறது.

 • சி. ஜெயபாரதன் says:

  உன்னத நடிகர் பெரியார்

  சி. ஜெயபாரதன், கனடா

  உயிர்ப்பித்த பெரியாரை
  திரைமே டையில் ஏற்றி
  உரை முழக்கி
  நடிக்க வைத்துள்ளார்.
  ஒருபுறம் புத்தர்.
  மறுபுறம்
  எழில்மிகும் இளம் மனைவி.
  இடது கையில்
  கைத்தடி.
  வலது கையில் தீப்பந்தம் !
  வாயில் வருவது
  தீப்பறக்கும் சொற்கள் .
  பிள்ளையார்
  சிலை உடைப்பார் சீடர் !
  செருப்பால்
  அடிப்பார் பெரியார் !
  இந்து மதத்தை எதிர்ப்பதாய்
  இனவெறுப்பு,
  இறைமை மறுப்பு தான்.
  “பெரியாரியம்” என்றால்
  எழுபது வயதினிலே
  கிழவர் குமரி
  அபூர்வத் திருமணம்.
  கவிச்செல்வர்
  கம்பர் படைத்த காவிய
  இராமாயணம்
  அம்புலி மாமா கதையாம் !
  திரைப்படத்தில்
  பெருஞ் செலவு செய்து
  பேசுவது
  பெரியார் நடிகர்.
  ஏழை, எளியவர், எல்லாம்
  இழந்தவர் தமக்கு
  இலவசக் கல்விக் கூடம்
  நிறுவலாம்.

  +++++++++++++++

 • சி. ஜெயபாரதன் says:

  யாரில்லை கடவுளா ?

  சி. ஜெயபாரதன்

  கடவுள் இல்லை என்றார்
  பெரியார்.
  கடவுள் இல்லவே இல்லை
  என்று முழக்கியவர் பெரியார்.
  கடவுளுக்கு என்றுமே
  மரணம் இல்லை.
  செத்தவர் பெரியார்.
  கடவுள்
  நடமாடு மோர்
  பிரபஞ்சம்.
  உன் நாவிலும் மற்றும்
  என் நாவிலும்
  பெரியார் நாவிலும்
  திராவிட
  கழகத்தோர் நாவிலும்
  என்றும்
  எங்கும் இருப்பது
  கடவுள் நினைவுதான்.
  என்றும் மரணம் இல்லை
  எங்குமுள்ள இறைவனுக்கு.
  நேற்றுப் பிறந்த
  பெரியார் இன்று
  மூச்சு நின்று
  முகவரி
  இல்லாது போனார்.
  மனித ருக்கு
  மரணம்.
  பிரஞ்சம் இயங்குது
  யுக யுகமாக.
  தெரியாமலே இயக்கும்
  கடவுளுக்கு இல்லை
  மரணம்.

  +++++++++++++++++++

  • ஷாலி says:

   // கடவுள் இல்லையென்றார் பெரியார்
   கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கியவர் பெரியார்
   கடவுளுக்கு என்றுமே மரணம் இல்லை
   செத்தவர் பெரியார்.//

   கடவுளுக்கு மரணம் இல்லை…அப்படி மரணிப்பவன் கடவுளாக இருக்க முடியாது.ஆனால் யதார்த்த உலகம் இந்த நம்பிக்கையில் இல்லையே! ஆபிரஹாமிய பிரதான கிருத்துவ மார்க்கமே “ கர்த்தராகிய ஆண்டவராகிய இயேசு கிருஸ்து சிலுவையில் மரித்தார். ( பின்பு உயிர்த்தெழுந்தது வேறு). திரு.ஜெயபாரதன் அவர்கள் நம்பிக்கையின்படி மரித்த இயேசு எப்படி கடவுளாக இருக்க முடியும்? ஆனாலும் அவர் நம்புகிறார்.ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பை எதிர்க்கிறார்.

   இதோ…பெரியாரே பேசுகிறார்…….

   கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக் கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என் பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய், ஆத்திரப்படு கிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம் ஆதாரம் என்ன?

   முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக் கப்பட்டது என்கிறாயா? அல்லது அது ஒருவனால் கண்டு பிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது கடவுள் யாராலும் உண் டாக்கப்படாமல், யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதை, கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்?
   மற்றும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத் தானே கோபம், ஆத்திரம் வரவேண்டும்!

   நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்?
   அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதானே கருத்தாகிறது?
   இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா?) (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப் பட்டதா? (இன்வென்ஷனா?) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? (நேச்சரா) (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள்.

   நான் சொல்வதன் கருத்து – கடவுள் கண்டு பிடிக்கப் பட்டதுமல்ல; தானாகத் தோன்றியதுமல்ல; முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை, அதாவது கடவுளை, ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே கடவுளை உண் டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்?
   நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல; தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது என்பதுதான் இன்று கடவுள் நம்பிக்கைக் காரர்களின் கருத்து ஆக இருக்கிறது.
   ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

   இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ அவனுக்கும், கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக் கியதனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும்தான் கோபம் வரவேண்டும் – அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

   – ஈ.வெ.ரா
   – ‘உண்மை’, 14.3.1970

 • சி. ஜெயபாரதன் says:

  பல்லாயிரம் ஆண்டு காலம் இந்திய மண்ணில் பிறந்து, வளர்ந்து, வசிக்கும் தமிழரை வந்தேறிகள் என்று இழிவு செய்வது மாபெரும் தவறு.

  தமிழினம் இப்போது உலகிலே சுமார் 200 நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளது.

 • ருத்ரா இ பரமசிவன் says:

  பெரியார் ஒரு

  சோசியல் டைனாமிக்ஸ் விஞ்ஞானி.

  அவர்

  வகுப்பு வாரியம்

  பேசவில்லை என்றால்

  கருப்புத்தமிழன்

  காணாமல் போயிருப்பான்.

  பெரிது பெரிதுமானிடம் பெரிது.

  மனித நியாயத்தின் சரித்திரம்

  மண்ணுக்குள் போய்விடாமல்

  இருக்க‌

  மண் வெட்டி தந்தவர் பெரியார்.

  நூல் போட்டுக்கொண்டவர்கள் எல்லாம்

  நூல் படித்தவர்கள் என்று

  நூல்விட்டு செய்த சாணக்கியத்தில்

  தமிழர்களே தமிழ் நாட்டில்

  மிலேச்சர்கள் எனும் அன்னியர்கள் ஆனார்கள்.

  வெள்ளைக்காரன்

  இன்னொரு வெள்ளைக்காரனுக்குத்தான்

  சுதந்திரத்தைக்கொடுப்பான்

  என்று

  சுதந்திரத்துக்கு போராடவில்லை

  பெரியார்.

  கருத்து சுதந்திரம் இல்லாமல்

  சாதிகள் காட்டி

  கடவுள் என்னும் கல்லைக்கட்டி

  தமிழனை

  அறியாமைக் கடலுக்குள் எறிந்துவிடும்

  அபாயத்தை தடுத்த‌

  சமுதாய அறப்போரட்டத்தின்

  தந்தை பெரியார்.

  அவரைக்

  கொச்சைப்படுத்தி

  மகிழ்ந்து பார்க்கும் அறிவுஜீவிகளுக்கு

  அறிவும் இல்லை

  ஜீவனும் இல்லை.

  ========================================ருத்ரா இ பரமசிவன்


Leave a Comment

Archives