தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

வாழ்க்கை

அமீதாம்மாள்

Spread the love

பொறியியல்

படித்திருந்தால்

பொன்னாகியிருக்கும்

வாழ்க்கை

உயிரியல் படித்தேன்

உழல்கிறேன்

சொந்த ஊரில்

சொத்துச் சேர்த்தேன்

சிங்கப்பூரில்

செய்திருந்தால்

சீமான் இன்று

நான்தான்

இவளாக ஆனதால்

இத்தனை பாடு

அவளாக இருந்தால்

அரசன் இன்று

நான்தான்

மகளைப் பெற்றதால்

மாட்டிக்கொண்டேன்

மகனாய் இருந்தால்

மகுடாதிபதி நான்தான்

அண்ணன் தம்பிகள்

இல்லாதிருந்தால் இன்று

நானே ராஜா

நானே மந்திரி

அந்தக் குரங்கின் நட்பை

முறித்திருந்தால்

என் அப்பம் இன்று

எனக்கே

ஒரு பறவை போல் வாழும்

பாக்கியம் பெற்றிருந்தால்

எஸ்கிமோக்களைக் கூட

எட்டிப பார்த்திருப்பேன்

கொரோனா மட்டும் இன்று

இல்லாதிருந்தால்……

கனவுகளே

வாழ்க்கையாய்

கடைசிவரை

அமீதாம்மாள்

Series Navigationவிருதுகள்வட்டத்துக்குள்

Leave a Comment

Archives