தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

தனிமை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Spread the love

   

உன் மௌனத்தின் உதடுகள்

என் இரவின் முட்களுக்கு

ஆதரவளிக்கின்றன

என்னை வாரிவாரி

விழுங்கிய பின்னும்

எச்சத்தின் தவிப்பு

திறந்து போடுகிறது

பெரும் ஆசை வெளியை…

என் எல்லா சொற்களையும்

பிடிங்கிக் கொண்டு

எப்போதாவது

ஒன்றிரண்டை என் கையில்

திணித்துப் போகிறாய்

சுருள் சுருளாய்

விழுகின்றன ஆசைகள்

இருள்

இழைத்து இழைத்துக்

குவித்ததில்…

காலத்தின் முன்

வலைப்பட்டுக் கட்டுண்ட

என் காலடியில்

நகர்கிறது பூமி

தன் முடிவிலாப் பயணமாய்…

Series Navigationரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவைதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

Leave a Comment

Archives