தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

கவிதை என்பது யாதெனின்

சி. ஜெயபாரதன், கனடா

Spread the love
image.png

சொன்னதைச் சொல்லும்

கிளிப் பிள்ளை போல்.

சொல்லாமல் சொல்லும்

ஊழ்விதி போல்.

மெல்லச் சொல்லும்

செவிட்டுக் காதில்.

ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும்

நெஞ்சினில்.

உரக்க இடிக்கும் முழக்கி

முரசு போல் !

அலை அலையாய் அடிக்கும்

ஆலயமணி போல்.

அசரீரி போல் சொல்லும்

வானிலிருந்து.

உன் எதிரே கூசாமல்

உரைக்கும்.

பையிக்குள் இருந்து

குரான், பைபிள், குறள் போல்

வழிகாட்டும்.

குத்தூசி போல் புகுந்து

உடல் நோய்க்கு மருந்து தரும்.

தூங்கும் ஆத்மாவை எழுப்பி

தூங்காமல் வைக்கும்.

ஆத்மாவின்

ஆணி வேரை அசைக்கும்.

சொல்லிச் சொல்லிக்

கொல்லும்.

சொல்லாமல் கொல்லும்

உன்னைக்

கொல்லாமல் கொல்லும்.

கொன்றபின்

உயிர்ப்பித்து எழுப்பும் உன்னை

புதுப் பிறவியாய் !

+++++++++++++++++++++++

Series Navigationஆம் இல்லையாம்ஒரு விதை இருந்தது

Leave a Comment

Archives