தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

வாழ்வின் மிச்சம்

Spread the love

மஞ்சுளா

மிச்சங்களில் 

மீந்து 

தன்னை உயிர்ப்பிக்கும் 

நாளுக்கு 

மனிதன் இட்ட 

ஒரு பெயரின் வழியாகவே 

அவன் பிறந்த தினத்தை 

கொண்டாடித் தீர்க்கிறது 

தன் வாழ்வின் 

மீதான 

வலியையும் 

தன் இருப்பின் 

மீதான 

வலிமையையும் 

இரண்டுக்கும் 

இடையிலான 

கேள்விகளையும் 

பதில்களையும் 

மனிதன் 

பிறகு 

எப்படித்தான் 

கொண்டாட்டம் 

ஆக்குவது? 

                       -மஞ்சுளா 

Series Navigationஒரு விதை இருந்ததுபவளவண்ணனும் பச்சைவண்ணனும்

Leave a Comment

Archives