தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

ஆசைப்படுவோம்

அமீதாம்மாள்

Spread the love

விழிகள் நாடாக

இமைகள் நாமாவோம்

தேசியநாள் இன்று

இப்படித்தா னென்று

ஆசைப்படுவோம்

ஆகும்

பொருளாதாரங்கள்

புடைத்து நிமிரும் நாள்

பாச வீணைகள்

பந்தம் இசைக்கும் நாள்

சூழும் பகையாவும்

சொடுக்கில் விலகும் நாள்

தனிமை முகில்களை

விமானத் தோழிகள் தழுவும் நாள்

புண்ணகை யாவும்

புன்னகை ஆகும் நாள்

வானமகள் வாழ்த்திசைக்க

வான்குடைகள் ஆடும் நாள்

ஏனென்ற கேள்விக்குறியின்

இடுப்பு நிமிரும் நாள்

அழுகின்ற கண்ணீரெல்லாம்

ஆனந்தம் ஆகும் நாள்

இந்த நாள் இப்படித்த்தானென்று

அலைகள்

படைகள்

கொடிகள்

கொடைகள்

அத்தனையும் நம்மோடு

ஆசைப்படட்டும்

ஆகும்

55

வெறும் எண்ணல்ல எழுச்சி

வயசல்ல வரலாறு

அமீதாம்மாள்

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5

Leave a Comment

Archives