ப. சுடலைமணி
நீண்ட நாள்களாகவே
கொல்லையில்டி சிட்டுகளைக்
கண்டு மகிழ்கிறேன்.
தொடர்ச்சியான
இடைவெளியில்
தோதகத்தி மரத்தை
எட்டிப்பார்க்கிறேன்.
இன்றும் கூட
ஜோடி சிட்டுகள்
வந்துவிடுமென்ற
நம்பிக்கை
சிறகடிக்கிறது.
சிட்டுகள்
வருவதும்
போவதும்
அவற்றின் விருப்பம்
என்னால்
என்ன
செய்துவிட முடியும்.
ப. சுடலைமணி