முள்

author
0 minutes, 27 seconds Read
This entry is part 5 of 16 in the series 20 செப்டம்பர் 2020

ப.தனஞ்ஜெயன் 

மாத்ருமேனன் கிளினிக்கில் கூட்டம்.

 எட்டு பேர் வரிசையில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.அங்கு உள்ளே நுழைந்தவர்,

“என்னமா டாக்டர் உள்ள இருக்கிறாரா” என்று கேட்டார்.

“ம்..இருக்கிறார்” என்றாள் வெள்ளை கோட் போட்ட நந்தினி நர்ஸ்.

“டோக்கன் போடவா” என்றாள்.

“ம் போடு மா” என்றார் பெரியவர்.

“உங்க பேரு?”

“”ராமன்…”

“வயது?”

“எழுபது”

“என்ன பிரச்சனை?”

“நீ என்ன டாக்டரா?

 உள்ளேதான் சொல்லனும்.”

 பணத்தைக் கட்டினார் ராமன்.

“ம்..இந்தாங்க ,நீங்க

 ஒன்பது,போய் உட்காருங்கள்” என்றாள்.

 நந்தினியைப் பார்த்து முறைத்துக் கொண்டே டோக்கனை வாங்கிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.

 சற்று நேரம் அமர்ந்தவருக்குத் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் தோன்றவில்லை.எல்லாமே பகட்டாக இருந்தது.வெறும் கண்ணாடி அலங்காரங்கள்,  அதிலும் கவர்ச்சி இருக்கவே செய்கிறது. அங்கிருந்த செய்தித் தாள்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டே ,அங்குச் சிகப்பு நிறத்தில் எரிந்து கொண்டு அழைக்கும் எண் வரிசையைப்பார்த்தார்.ஐந்தாவது டோக்கன் சென்று கொண்டிருந்தது.

 வெளியே எழுந்து சென்று மீண்டும் திரும்பி வந்து அமர்ந்தார்.அவருடைய டோக்கன் எண் ஒலித்தது.உள்ளே சென்றார் ராமன்.

“வாங்க ராமன்”  எப்படி இருக்கேள் என்றார் டாக்டர்.

“நல்லா..இருக்கிறேன் டாக்டர்”

“என்ன ராமன்? என்ன பிரச்சனை?”  என்று கேட்டுக்கொண்டே ,கையில் பிபி மெஷினை அழுத்தமாகக் கட்டினார்.

 மெஷினில் உள்ள ரப்பரால் ஆன முனையைப் பிடித்து அழுத்தினார்.மெர்குரி அளவு மேல் எகிறியது.பிபி, அளவு நார்மல் தான்,எப்பொழுதும் எடுத்துக் கொள்கிற மாத்திரையை போட்டுங்குங்க என்றார் டாக்டர்.

 ராமன் அந்த அறையில் நின்றிருந்த அசிஸ்டன்டை பார்த்தார்.டாக்டர் புரிந்துகொண்டார்,ஏம்பா மணி கொஞ்சம் வெளியில் போய்விட்டு வாப்பா என்றார்.

‘அப்பாடா’ என்றார் ராமன்.

“இப்பசொலுங்க” என்றார் டாக்டர்.

“சரிங்க டாக்டர்”, என்று ராமன் அந்த சீட்டை வாங்கிக்கொண்டு,

 சற்று தயக்கத்தோடு டாக்டர் அந்த மாத்திரை ஒன்று வேண்டும்,என் நண்பன் ஒருவன் கேட்டான் என்றார்.டாக்டர் எழுதித் தருகிறேன் என்றார் .

“ராமன்”…!

 என்ன டாக்டர்?

“நீங்க இந்த மாத்திரையைப் போடக்கூடாது.உங்கள் உடம்பு கண்டிஷனுக்கு நிச்சயம் போடாதீர்கள்” என்றார.அப்படி மீறியும் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அரை மத்திரைதான் அதற்கு மேல் போடக்கூடாது என்றார்.

“எனக்கு இல்ல டாக்டர்” ,என்று சொல்லியவாறே ,அந்த சீட்டின் பின்புறத்தில் எழுதி வாங்கிக்கொண்டு,மாத்திரையும் வாங்கி விட்டார்.

‘என்ன இது,இந்த மாத்திரையை வாங்க,இவ்வளவு பாடு’ என்று நினைத்துக்கொண்டே வீடு வந்தார்.மனைவி செத்து பத்து வருஷம் ஆச்சி.பசங்களெல்லாம் வெளியில் நிரந்தரமாகத் தங்கியாயிற்று.தனி மனுஷன் தான்.

 தொலைப்பேசி ஒலித்தது,ஹலோ நான் பாமீலா,ஓட்டல் பரேடைஸ்லிருந்து பேசறன்.அடிக்கடி ராமன் அங்குச் செல்வது வழக்கம்.”நீங்க ராமனா”என்றாள்.

 ஆமாம் நான் ராமன்தான்.

இல்லையே வயசான ராவணன் மாதிரியில்ல இருக்கிறது உங்க வாய்ஸ்.

இல்லமா பெயர்தான் ராமன்.நானும் மனுஷன்தானே என்றார்.என்னை உங்கள் வீட்டுக்கு இரவு பத்துமணிக்கு ட்ரப் பன்றங்கா,வரலாமா என்றாள்.

 இப்ப மணி எட்டுதான் ஆவுது,அதுக்காகதான் இந்த ஏற்பாடு நீ வாமா என்றார் ராமன்.

உடனே தயார் செய்து வைத்திருந்த சாப்பாட்டையும் பாலையும் அருந்திவிட்டு அவசரத்தில் சட்டென முழு மாத்திரையையும் போட்டுக்கொண்டார்.

டீவியை அழுத்தினார்.சேனல்களை தள்ளிக்கொண்டே வந்தபோது,தீடிர் சந்தேகம் அவருக்கு,அய்யயோ என்ன அரை மாத்திரைனு சொன்னார்,ஆனால் முழு மாத்திரையும் போட்டு விட்டமே என்று போன் செய்தார்.

“ஹலோ டாக்டர்,அவசரத்தில் பிபி மாத்திரைக்குப் பதிலாக நீங்கக் கொடுத்த வயகாரவை போட்டுக்கொண்டேன்,அதுவும் முழுசா போட்டுக்கொண்டேன்,என்ன செய்வது” என்றார் ராமன்.

“ஒன்றும் ஆகாது அப்படியே அமைதியா தியானம் பன்னுங்க” என்றார் டாக்டர்.

“என்ன டாக்டர் பயமாக இருக்கிறது” என்றார் மீண்டும்

 ராமன்.

 அந்த நேரத்தில் காலிங் பெல் சப்தம் வேறு,”சரிங்க டாக்டர்” என்று போனை வைத்துவிட்டு கதவைத் திறந்தார் ராமன்.

 பழைய சினேகிதன் அர்ச்சுனன் எதிரில் நின்றான்.”என்ன இந்த நேரத்தில்” என்றார் ராமன்.”இல்லை இந்தப்பக்கமா கடைக்கு வந்தேன்,அப்படியே உன்னை ஒரு எட்டு பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்.”

 எப்ப அர்ச்சுனன் வந்தாலும் காபி போட்டுத்தருவது வழக்கம்,அர்ச்சுனன் ரிட்டையர்டு பேங்க் ஊழியர்,ராமனும் அவரோடு பணிபுரிந்த ஊழியர்.

“என்ன டா? ஒரு மாதிரியா இருக்கிற,காபி எங்க?”என்ற அர்ச்சுனனிடம் ,”இல்லை கொஞ்சம் தலைவலி.இப்போதுதான் மாத்திரைப்போட்டேன்.நான் படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவேண்டும் போல இருக்கிறது” என்றார் ராமன்.

 டேய் நான் வேனும்னா உனக்குக் காபி போட்டுத்தரவா,என்றார் அர்ச்சுனன்.

வேண்டாம் டா ,நான் படுத்துக்கொள்கிறேன் என்றவுடன் அர்ச்சுனன் அங்கிருந்து கிளம்பினார்.கதவு வரை சென்று தாழிட்டார் ராமன். அப்பொழுதுதான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.என்ன இது சாதாரணமாக இவ்வளவு நாள் ராமனா இருந்தவரைக்கும் இவ்வளவு பிரச்சனை இல்லை,இன்றைக்கு முதல் முறையா இராவணனாக மாற நினைக்கும்போது இவ்வளவு பொய்களையும் குற்ற உணர்வுகளையும் சுமக்க வேண்டியதாகிவிட்டதே என்று மீண்டும் டீவியை அழுத்தினார்.

 இரண்டாவதாக காலிங் பெல் சப்தம்,

 ஆவலாகக் கதவைத் திறந்தார்,மணி பத்து.அன்றைய இரவு அமர்க்களமாக இருந்தது.திருமண புதிதில் எப்படி இருந்தாரோ,அதே உற்சாகம். ஆழமான உணர்வுகள் மனதிலும் உடலிலும் ஒரு ஓரமாக எந்த வயதிலும் வாழ்ந்துகொண்டிருப்பதைக் கவனித்தார்.

 வந்த பாமீலாவை சோபாவில் அமரச்சொன்னார்.

“பரவாயில்லை சார்”,அமர்ந்தாள்.

 எப்படி ஆரம்பிப்பது என்று கதவைத்தாழிட்டார்.மீண்டும் ஒரு முறை பரிசோதித்துவிட்டு கதவின் தாழ்ப்பாளை அழுத்தினார்.

 வந்தார்.அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்தார்.

 வந்தவளைப்பார்த்தாள் சுமாரான அழகுதான்.ஆனால் அதிகமான ஈர்ப்பு இருந்தது அவளிடத்தில்.

 ராமனுக்கு மனைவி இறந்த திலிருந்து இப்படி ஒரு ஆசை வரவில்லை.ஆனால் ஏதோ இந்த ஒரு வரமாக இந்த பசியில் ஒரு ஆர்வம்.”காமத்திற்குக் காரணம் தேவையா”என்று மனதில் கேட்டுக்கொண்டார்.

பிரகாசமான விளக்கொளியை அணைத்துவிட்டு,வண்ணவிளக்கு ஒன்றை எரியவிட்டார்.

 அவள் அருகில் சென்றார்,பாமீலாவின் மேல் கைவைத்தார்,ஏறத்தாழ நாற்பது வருடங்கள் முன்னோக்கி அழைத்துச் சென்றது அந்த நொடிகள்.அந்த கணம் அவர் எதிர்பார்க்கவில்லை,தீடிரென்று வாந்தி எடுத்தாள் பாமீலா.

 சற்று மயக்கமாக இருக்கிறது என்று படுத்துவிட்டாள்.

 அந்த நேரத்தில் தீடிரென்று தொலைப்பேசி அடித்தது.”ஹாலோ ராமன் என்ன ஏதாவது ?” என்றார் டாக்டர் மாத்ருமேனன்.அவருக்கு ஆவல்,மருத்துவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் கடவுள்கள் கிடையாது.அவர்களும் மனிதர்கள்தான்.

“ஆச்சி டாக்டர்”என்றார் ராமன்.

“எத்தனை முறை”?

 நான்கு முறை?

“இது உங்கள் வயசுக்கு அதிகம் ராமன்”என்றார் டாக்டர்.

 பெண்ணுக்கு எத்தனை வயது?

“முப்பது இருக்கும்” டாக்டர்.

“சந்தோஷமா இப்ப”என்று கேட்டார் மாத்ரூமேனன்.

“இல்லை டாக்டர்”

 ஏன்?

“வந்த பெண்ணை நான் தொட்டேன். அவ தொடர்ந்து நான்கு முறை வாந்தி எடுத்தா”டாக்டர்.

 அதற்குள்ளேயே வா?

அது இல்லை டாக்டர்?

“ம்..அப்புறம்”

” நான்கு மாதம் கர்ப்பிணியாக இருக்கிறேன் “என்று பாமீலா சொன்னாள் டாக்டர் என்றார் ராமன்.

ப.தனஞ்ஜெயன்

danadjeaene1979@gmail.com

முள்-சிறுகதை

“வாங்க ராமன்”  எப்படி இருக்கேள்” என்றார் டாக்டர்.

ப.தனஞ்ஜெயன்danadjeaene1979@gmail.com

Series Navigationவாழத் தலைப்பட்டேன்மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *