வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10

author
1 minute, 9 seconds Read
This entry is part 8 of 16 in the series 20 செப்டம்பர் 2020

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியனின்  நாவல் “ சாயத்திரை  “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட நாவல். இதை முன்னர் காவ்யா பதிப்பகம், பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் ஆகியவை மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளன. இந்நூல்

* தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது

  * ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், வங்காளம் ,மலையாள மொழிகளில் வெளிவந்துள்ளது

 Ebooks Pustaka Subrabharathimaian

Title                                  A                  B        Language

1. Sayathirai  –               Fiction /social-      Novel       Tamil

.சாய்த்திரை ” is now live and available* for purchase in the Kindle Store! . இந்நாவல் பற்றிய சிலரின் அறிமுகங்களை இணைத்துள்ளேன்

From India Today –

சுப்ரபாரதிமணியனின் நாவல்  :   ” சாயத்திரை ”

 * தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது

  * ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், வங்காளம் ,மலையாள மொழிகளில் வெளிவந்துள்ளது

  * தமிழின் சிறந்த நாவல் பட்டியலில் இடம் பெறுவது.

                        விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.

                இந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக்  கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

                1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.

சாயத்திரை – சுப்ரபாரதிமணியனின் “ நாவல் “  மறு பதிப்பு     விலை ரூ 195 , வெளியீடு  :  எதிர் , பைபாஸ் சாலை  பொள்ளாச்சி   98650 05084 )

செய்தி : கனவு

8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 மதுராந்தகன் :7708989639

Series Navigationஅதோ பூமிபத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *