தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

பாதி முடிந்த கவிதை

Spread the love

கு.அழகர்சாமி

கீழே

வீழ்ந்து கொண்டே

வெளியின் அகலப் பக்கங்களில்,

காற்று வீசி

அவசரமாய் எழுதும்

சருகின்

பாதி முடிந்த

சாவின்

கவிதை

முழுதும்

எழுதி

முடிவதற்குள்-

சருகு

மண்

சேர்ந்து

கடைசியாய்க்

கண்

மூட

எழுதி

முடிக்க

முடியாது-

மீதியை எழுத முயன்று

முடியாது தோற்றுப் போகும்

என் கவிதை.

கு.அழகர்சாமி

Series Navigationதிரைப்பட வாழ்க்கைபடித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடு

Leave a Comment

Archives