தமிழில்: ட்டி.ஆர். நடராஜன்
இரக்கம்
பால் லாரன்ஸ் டன்பர்
அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்
காயமுற்ற அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு –
கதவுக் கம்பிகளில் அதன் படபடப்பு –
எக்களிப்போ மகிழ்சியோ அல்ல வெளிவருவது .
இதயத்தின் ஆழத்திலிருந்து அது இறைஞ்சுகிறது :
சொர்க்கத்தை நோக்கி மேலே என்னைப் பறக்க விடு.
அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வருகையில்
பில்லிஸ் வீட்லி
கருணை என்னை அந்தக் காட்டிலிருந்து கூட்டி வந்தது.
வெளிச்சம் தரும் ஆத்மாவைக் கற்பித்தார்கள். கடவுள் இருக்கிறார்
அவரே ரட்சகன்.
முன்னம் நான் அறிந்ததில்லை மீட்சி பற்றி
அது வேண்டுமெனக் கேட்டதுமில்லை. அவர்கள் என் கறுப்பினத்தை
ஏளனமாய்ப் பார்க்கிறார்கள். “விலை போக வேண்டிய விலங்குகள்” என்று.
நினைவிருக்கட்டும். கிருத்தவர்களும் , நீகிரோக்கள் போலவே.
கொலைகளில் ஆழ்ந்தவர்கள். அனைவரும் கறுப்பு மனதினர்தான்.
இறைவனுக்கு முன்பு எல்லோரும் தேவதைகளே.
நீ என்னைக் கொண்டாட மாட்டாயா
லூசி க்ளிஃப்டன்
நீ என்னைக் கொண்டாட மாட்டாயா ? என்ன மாதிரி வாழ்க்கை எனக்கு?
என்னிடம் பதக்கம் எதுவுமில்லை.
பாபிலோனில் பிறந்தேன்.
நான் வெள்ளையினமல்ல
மேலும் பெண்.
நான் என்னைத் தவிர வேறு என்ன பார்க்கிறேன்?
அபூர்வத்துக்கும் களிமண்ணுக்கும் இடையே பாலம் கட்ட முயலுகிறேன்.
என் ஒரு கை மற்றொரு கையை இறுகப் பிடித்திருக்கிறது.
ஒவ்வொரு தினமும் ஏதோ ஒன்று என்னைக் கொல்ல விரும்பித் தோற்றுப் போகிறது. கொண்டாட வா.
- ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!
- தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்
- தமிழிய ஆன்மீக சிந்தனை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி
- கடலோரம் வாங்கிய காற்று
- பக்கத்து வீட்டுப் பூனை !
- மகாத்மா காந்தியின் மரணம்
- மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிதைகள்
- வானவில் (இதழ் 121)
- வீடு “போ, போ” என்கிறது
- நிரம்பி வழிகிறது !
- தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்
- தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)
- தோள்வலியும் தோளழகும் – வாலி
- சத்திய சோதனை