தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

என்ன வாசிப்பது

Spread the love
 

கண்களின் வழியோ 

கண்ணாடி வழியோ

பிரதிபலிக்கிறது

நீ வாசிப்பது….

எழுத்துக்களோ., கோப்புக்களோ.,

அங்கங்களோ., ஆராய்ச்சியோ..

காக்கைக்கால் கோடுகள்

உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்.,

நெற்றிச் சுருக்கங்கள்

பொருளாதார வரைபடங்களையும்

கன்னக் குழிவுகள்

ஒரு கிளர்த்தும் காமத்தையும்

இதழின் இறுக்கங்கள்

உள்பூக்கும் பிடிவாதத்தையும்…

என்னவென்று அறியாத

இன்பமாய் இருக்கிறது.

எதிர்வினைகள்

ஏதும் அற்று

எதிரே அமர்ந்து

என்ன வாசிக்கிறாய்

என்பதறியாமல்

உன்னை வாசிப்பது..

Series Navigationயாளி“யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்

Leave a Comment

Archives