அனங்கன்.
உதிரம் கலந்துவிட்ட
இவள் உறவென்று ஏதுமில்லை…
என்னுயிர் வாழ்வதற்கு
இவளின்றி யாருமில்லை…
தோழமை உள்ளத்தில்
பால்பேதங்கள் ஏதுமில்லை..
நான் இவள் தூக்கி வளர்க்காத
முதிர்ந்த முதற்பிள்ளை..
பிறந்தபெருங்கடனை ஒருதாய்க்கே
தீர்க்கவில்லை..
தோழமைத் தாய் இவளின்
கடன் தீர்க்க வழியில்லை..
என்பாதையில் முள்ளெடுக்கும்
என்தோழிக்கு ஈடில்லை…
நன்றியென்று வார்த்தைசொல்லி
அவள் அன்பை அளக்கவில்லை..
நாயாகப் பிறந்தாலும்
வாலாட்ட வழியுண்டு…
நன்றிகெட்ட மானிடத்தில்
என்னிருப்பிலும் பிழையுண்டு..
அவளுக்காக தெய்வத்தை
தொழலாமா என்றொரு நினைப்புண்டு..
அவள் ஆயுள் நீண்டிருந்தால்
எனக்கெதற்கு தெய்வமொன்று.
—
அனங்கன்.