“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து

author
0 minutes, 10 seconds Read
This entry is part 3 of 14 in the series 27 மார்ச் 2022

 

    

அழகியசிங்கர்

 

          27.03.2022

           

            அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து

 

          

            சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் என் இலக்கிய நண்பர் அஜயன் பாலா üஅந்த நாட்களில் மழை அதிகம்ý என்ற இலக்கியக் கட்டுரைகள் புத்தகத்தை வெளியிடும் கூட்டத்தில் கொடுத்து என்னைக் கௌரவப்படுத்தினார்.

            புத்தகக் காட்சி முடிந்தவுடன் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று நினைத்தேன்.

            புத்தகம் கொடுத்தவரும் எதாவது எழுதுவார் என்று எதிர்பார்த்துத்தான் கொடுத்திருப்பார்.

            200 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.220.  மொத்தம் 26 கட்டுரைகள் கொண்ட இப்புத்தகத்தை 5 பிரிவுகளில் கொண்டு வந்திருக்கிறார். 

            இலக்கியக கட்டுரைகள், ஆளுமைகள், அனுபவங்கள், விமர்சனங்கள், பிற என்பதுதான் இந்த ஐந்து பிரிவுகளின் தலைப்புகள்.

            இலக்கியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட 5 கட்டுரைகளும் ருஷ்ய இலக்கிய மேதைகள் பற்றிய கட்டுரைகள்.

            பல அரிய தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார்.  படிக்க படிக்க சுவாரசியமான அனுபவத்தை இக் கட்டுரைகள் கொடுக்கிறது.

            முதல் கட்டுரை கஸ்தயெவ்ஸ்கியின் இலக்கியத் துரோகம் என்று கட்டுரை.

            தஸ்தயெவ்ஸ்கியைப் பற்றி எழுதும்போது இப்படி எழுதுகிறார்.  üவாழும்போதும் இறந்த பின்பும் தன் இலக்கியச் செயல்பாட்டுக்காவும் படைப்புக்காகவும் ஜார் ஆட்சிக் காலத்திலும் சரி, கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டார்ü என்று குறிப்பிடுகிறார்.

            தஸ்தயெவ்ஸ்கியை ருஷ்யாவில் புகழ் பெற்ற எந்த எழுத்தாளரும் முழு மனதுடன் ஏற்கவில்லை.  வாழும் போது இருந்த எதிர்ப்பைவிட அவர் இறப்புக்குப் பின் உருவான எழுத்தாளர்கள்தான் அவரை கடுமையாக விமர்சித்தனர் என்று குறிப்பிடுகிறார். ருஷ்ய இலக்கியவாதிகளின் மத்தியில் டால்ஸ்டாயும் தஸ்தயெவ்ஸ்கியும் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களாக இருந்தனர். தத்துவார்த்த அடிப்படையில் மாக்ஸிம் கார்க்கி இருவரையும் கடுமையாக              எதிர்த்தார்.  கார்க்கியோ கலை மக்களுக்கானதாக இருக்க வேண்டுமென்று எழுதியும் பேசியும்  அவர்களோடு முரண்பட்டார். 

             1957 ல் குருச்சேவ் காலத்தில்தான் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகள் சிறையை விட்டு வெளியே வந்து உலகம் முழுக்க அன்பையும் மனிதநேயத்தையும் விதைக்கத் துவங்கின.  தடை  செய்யப்பட்ட தஸ்தயெவ்ஸ்கியின் பொஸஸ்டு நாடகம் பிற்பாடு  ஆன்டன் செகாவின் அண்ணன் மகனான மைக்கெல் செகாவ் ஐரோப்பியப் பயணத்தின் போடு மேடையேற்றினார்.

            இரண்டாவது கட்டுரையில் அஜயன் பாலா உலகின் மகத்தான இரண்டு நாவலாசிரியர்களாக டால்ஸ்டாயும், தஸ்தயெவ்ஸ்கியும் கருதுகிறார்.  

            இருவரும் கடைசி வரை பார்த்துக்கொள்ளவுமில்லை பேசவுமில்லை என்று ஆதங்கப்படுகிறார் அஜயன் பாலா.                       1881 இல் தஸ்தயெவ்ஸ்கி இறந்த செய்தி அறிந்தவுடன் மிகுந்த வேதனையுடன் டால்ஸ்டாய் தன் நண்பருக்கு எழுதிய  கடிதமொன்றில். ஓர் அற்புதமான எழுத்தாளனைக் கடைசி வரை சந்திக்காமல் போனமைக்கு தான் மிகவும் வேதனையுற்றுக் கண்ணீர் வடிப்பதாகவும், இப்போதுதான் அவர் தனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதை உணர்வதாகவும், என்றாவது ஒருநாள் இருவரும் சந்திக்கப் போவது உறுதி என்று குறிப்பிடுகிறார்.

            இந்தப் புத்தகத்தை தஸ்தயெவ்ஸ்கியை முன்வைத்து மற்ற எழுத்தாளர்களுடன் அவருக்கு ஏற்பட்ட பகை உணர்ச்சியைக் கட்டமைத்துள்ளார்.

            ஆஸ்யா, முதல் காதல், வசந்த கால வெள்ளம் போன்ற குறுநாவல்களும், தந்தையும் தனயனும் போன்ற ஒப்பற்ற நாவலையும் எழுதி ருஷ்ய இலக்கியத்தில் தனக்கென இடம் பிடித்தவர் துர்க னவ்.  குறிப்பாக, அவரது மூமூ சிறுகதை உலகப் பிரசித்தம் பெற்றது.

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி ஜேம்ஸ் தன் இலக்கிய ஆசானாக டால்ஸ்டாயையோ, தஸ்தயெவ்ஸ்கியையோ குறிப்பிடவில்லை   மாறாக இவான் துர்கனேவைத்தான் குறிப்பிடுகிறார்.

            கடைசியாக, இருவருக்கு மிடையிலான பகை தஸ்தயெவ்ஸ்கி ஆற்றிய புஷ்கின் உரையின் போதுதான் ஒரு முடிவுக்கு வந்தது.  அன்று தாஸ்தயெவ்ஸ்கி உரையைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத துர்கனேவ், தஸ்தயெவ்ஸ்கியை அற்புதமான எழுத்தாளன் என வாயாறப் பாராட்டினார்.

            நாலாவது அத்தியாயத்தில் புஷ்கின் என்ற எழுத்தாளர் பற்றி 

பல தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.  .  இது மாதிரியான கட்டுரைகளைப் படிக்கும்போது புஷ்கின் போன்ற எழுத்தாளரை நாம் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. 

            புஷ்கின் மரணம் பெரும் துயரம்.   கருப்பு நதி என அழைக்கப்படும் சோரான்யா நதி ஏற்கனவே சில டூயல்களுக்குப் பெயர்பெற்றது. அதில் கலந்துகொண்ட புஷ்கின், டி ஆதன்ஸின் தோள்பட்டையில் புஷ்கினின் துப்பாக்கிக் குண்டு துளைத்தது. புஷ்கின் இடுப்பில் டி ஆதன்ஸின் குண்டு பாய்ந்தது அவர்   இறந்து விட்டார்.  புஷ்கின், பெரும் துயரத்துடன் கறுப்பு நதியின் கரையில் பிணமாக வீழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 22.  

Illustration of a Alexander Pushkin was a Russian poet, playwright, and novelist of the Romantic era who is considered by many to be the greatest Russian poet

            புஷ்கின் குறித்து லொமண்டோவ் எழுதிய டெத் ஆப் எ பெயட் எனும் கவிதை நகரம் முழுக்க வினியோகப்பட்டது. அந்த கவிதை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆவேசத்தையும் உண்டாக்கியது. 

            5வது அத்தியாயத்தில் 26 வயதில் இறந்து போன வால் நட்சத்திரம் என்று லெர்மண்டோவ் என்ற ருஷ்ய எழுத்தாளரைப் பற்றி அஜயன் பாலா எழுதியிருக்கிறார்.

            இவர்தான் பூஷ்கின் மரணத்தை ஒட்டி டெத் ஆப் பொயட் என்ற கவிதை எழுதி பிரபலமானவர்.  இவரைக் குறித்து என்ன சொல்கிறார் அஜயன் பாலா என்று பின்னால் பார்க்கலாம். 

                                                (இன்னும் வரும்)     

                                                                                                                                                                 

Series Navigationஅவனை எழுப்பாதீர்கள்பட்டறை என்ற சொல்…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *