ஸ்ரீரங்கம் பூங்கா !

This entry is part 2 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
 
ஸ்ரீரங்கம் பூங்கா
இப்போதில்லை
இடிக்கப்பட்டு விட்டது 
 
பசுமை பொழியும்
அடர்ந்த மரங்கள்
நடைப்பயிற்சிக்கென
ஏறி இறங்கும்
படிக்கட்டுகள் கொண்ட மேடை
சிமிண்ட் இருக்கைகள்
எல்லாம் எங்கே ? 
 
காற்று விரவி நின்று
மைதான பூமியோடு
என்ன பேசிக் கொண்டிருக்கிறது ? 
 
வெறுமையின் ஆழ்ந்த மௌனம்
எதற்காகக் தவம்புரிகிறதோ ?
 
____ ஸ்ரீரங்கம் பூங்கா
இப்போதில்லை ! 
Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்றுநாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *