லதா ராமகிருஷ்ணன்
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான, , ஆரவாரமில்லாமல் தொடர்ந்து இலக்கியவெளி யில் பங்காற்றிவரும் தோழி மதுமிதா தொடர்ந்து சமகாலத் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் என பல படைப்பாளிகளின் எழுத்தாக்கங் களை ஆத்மார்த்தமாக வாசித்து அதைத் தனது காற்றுவெளி என்ற பெயரிலான யூட்யூப் வெளியில் பதிவேற்றிவருகிறார். எனது நீள்கவிதையொன்றையும் அவ்வாறு வாசித்துப் பதிவேற்றியிருக்கிறார்.
பொதுவாக எனக்கு கவிதையை உரக்க வாசித்தல் உவக் காது. குரலில் ஏற்ற இறக்கங்களோடு ஒருவித நாடக பாணியிலான கவிதை வாசிப்பே நம்மிடையே அதிகம். நல்ல கவிஞர்களெல்லாம் தங்கள் கவிதைகளை நேர்த்தியாக வாசிக்கக்கூடியவர்கள் என்று சொல்லவியலாது. பல அர்த்த அடுக்குகளைக் கொண்ட கவிதையை உரக்க வாசிக்கும்போது அது ஒற்றை அர்த்தக் கவிதையாக சுருங்கிவிடும் வாய்ப்பே அதிகம். தவிர, உரக்க வாசிக் கும்போது மனது கவிதையில் ஒன்றாமல் கண்டதையும் அசைபோட ஆரம்பித்துவிடு வதும் உண்டு.
ஆனால், மதுமிதா பின்னணியிசை என்று எதுவுமில்லாம லேயே, அவர் குரலும் கவிதை யின் மீதான அவருடைய மனமார்ந்த பற்றுமே தம்பூரா போல் பின்னணியிசையாக வும் இழைந்துவர என்னுடைய கவிதைகளை வாசித் திருப்பதைக் கேட்டு யாரோ எழுதிய கவிதையைக் கேட்பதாய் என் மனதில் ஒரு பாரம் அழுத்தியது. என் கவிதைகளின் வரிகளோடு மதுமிதா கவிதைகளை வாசித்த பாங்கும் அதற்கு முக்கிய காரணம் என்று ஒரு வாசகராக என்னால் உணரமுடிந்தது.
https://www.youtube.com/watch?v=b0DBlX_IAkY
கீழே கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் மதுமிதாவின் குரலில்!
https://www.youtube.com/watch?v=Mdddn9A3eVI
- மதுமிதாவின் மதுரமான மனவெளி யொரு மகோன்னதக் காற்றுவெளியாய்….
- வின்சியோட நாட்டுப்புறப்பாடல்!
- கொலுசு
- 3 கவிதைகள்
- இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு
- நாவல் பயிற்சிப் பட்டறை
- ஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை