சோ_தாசன்
( les miserables டைட்டில் இன்ஸ்பிரேஷன் }
..
இடியாப்பச் சிக்கலில் எப்போதும் தமிழகம்.
தமிழகத்தின் பூர்வ குடிகள் யார் என்பதே தெரியாமல் போன ஒரு சூழல் சபிக்கப்பட்ட இனமான தமிழர்களுக்கு ஏனோ.
மொழி:
மெத்தபடித்த தமிழ்நாட்டில் பிறந்த தமிழைத் தாய்மொழியாக பல தலைமுறை கொண்ட தமிழன் முதலில் செய்வது,
தமிழ் பேசும் எல்லோரும் தமிழரே.
அட அறிவாளியே, அப்ப வறண்ட கத்தாளம் காட்டுப் பள்ளிகூடத்தில், கடன் ஒடன வாங்கி சேர்த்து விடும் பள்ளியில்
“ரெயின் ரெயின் கோ அவே” என்றும்
“மம்மி, டாடி, ஐயம் அக்ளி யூ ஆர் அக்ளி, “ என்றும் ஆங்கிலத்தில் பேசும் யாவரும் அப்ப இங்கீஷ்காரர்களா?
என்னே அறிவு இந்த படித்த ஜன்மங்களுக்கு.
இந்தி வேண்டாம் எனும் நிலையில் தமிழகம் 50, 60 களில் இருந்ததால் தான் பின் ஐடி துறை அதிரடியாக வளர்ந்த போது அதீத வேலைகள் கிடைத்தது, அதுவும்
முன்னேறிய ஜாதிகள் தாண்டி கிராமத்தான், நிலத்தை வித்து படிக்க வைத்த அன்னாடம் காச்சிகளின் பெண்டு பிள்ளைகள் அமெரிக்கா வரை சென்றது.
இன்று, ஹிந்தி திணிப்பு வேண்டாம் எனும் நிலையில் தமிழகம்.
ஹிந்தி எதிர்ப்பு , ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு , இரண்டின் நடுவே தமிழர்கள் இழந்தது விட பெற்றதே அதிகம்.
இன்று ரயில் நிலையம் முதல் பேங்க் வரை வட நாட்டினர் தான் மேல்நிலை நிர்வாகத்தில் அதிகமாக. அது ஏன் ?
அவர்களுக்கு ஹிந்தி தெரியும் என்பதாலா? இல்லை அவர்களுக்கு மேலாண்மை, தொழிலில் எல்லா ஜித்தும் செய்யும் மனநிலை, என இருந்ததால் தான்.
பேங்க் லோனை கோடி கோடியாக ஆட்டையைப் போட்டவனை நாம் திருடனாய் பார்க்க அதை அவர்கள், “சிஸ்டம் சரியில்லை “ அதனால் நான் இப்படி என தொழில் வளர்த்தான்.
செட்டியார்கள் நடத்திய பேங்குகள் எல்லாம், அரசுடைமை என்றாக, இன்று மீண்டும் எஸ் பேங்க் என வந்த போது, செட்டியார்கள் எங்கே போக வைத்தது இந்த த்மிழ் சமூகம் என்றே புரியா நிலை.
இன்றோ ஒய் பேங்க என கிர்ப்போடோ, என வந்த பின்னர் அதில் கோலோச்சுவது யார்? குறிப்பிட்ட வட இந்திய சமூகங்களே.
அப்ப தமிழ்ச் சமூகம் எதில் அழிந்தது? ஆம் அழிந்தது???
கூத்தும் கும்மாளமுன் என திரை அட்டைக்கத்திகளுக்கு , சமூக பொறுப்புக்கான வாளைக் கொடுத்தது.
மொழிப் பற்றை விஞ்ஞானம், மெஞ்ஞானம் , ஆற்றல் கூட்டல் என்று கொண்டு செல்லாமல்
தமிழ் எது சான்ஸ்கிரிட் எது என்று பிதற்றில் கடந்த கால மொழிவடிவை மாற்றங்களுக்குள்ளாக்கி நிகழ்கால தமிழர் வாழ்வை மேம்படுத்தாமல் போனதே அழிவின் காரணம்.
மதுரையில் லேசான மலை பொளியும் என டிவி யில் பேசுவது.
ஆக்சுவலா நான் ரொம்ப என்ஜாய் பண்ணுறோம் என குற்றாலத்தில் பேசும் டூரிஸ்டுகள்,
விளங்கிடும் மொழி.
இனம்:
இது தான் மிகப் பெரிய காமடியான வேதனை.
இனம் எனபது டி என் ஏ கூறு எனக் கொண்டால் , தமிழ் டிஎன் ஏ என்று இல்லை எனும் போது 2000+ ஜாதிகள் தமிழ் பேசும் தமிழ்நாட்டுப் பரப்பு வாழ் இனங்களாக.
அதிலும் விரல் விட்டு எண்ணும் படி சில ஜாதிகளே கோலோச்சிக் கொண்டு. மத்தவங்கெ,
மொழி அடையாளம் கொள்வதா, இன அடையாளம் கொள்வதா எனத் தெரியாமல் தத்தளித்து பிடிப்பது,
மத அடையாளம்.
மதம்:
மொழியின் தொன்மைய் தெரியாதது போல் , தமிழர் இனங்கள் ( இனங்கள் ) வழிபட்ட நம்பிக்கை புரியா நிலை.
தமிழர்களின் அடையாளம் எனக் கொண்டாடப்பட்ட சோழ பாண்டிய மன்னர்கள் ஏன் முனுசாமி, கருப்பசாமி, மாரியம்மன் இவர்களுக்கு மாபெரும் கோவில் எழுப்பவில்லை ?
வெரி சிம்பிள்
கலாச்சாரம் பற்றி பேசும் தமிழர்களைப் பாருங்கள்,
மொழி : ஹாய் புரோ…
உடை : ஜுன்ஸ், சுரிதார், காந்தி நேரு கோட், இல்லை பிஜேபியாக இருப்பின் மோடி கோட், என வேட்டி சட்டை சேலை தாவணி தவிர உடைகள்.
திருமணங்களில் குத்துப்பாட்டுடன் மணமக்கள் வரும் முறை.
சாப்பாட்டில் , பிச்சைக்கார அடையாளம் போல் தட்டைத் தூக்கிக் கொண்டு, பிளேட் வழிய வழிய உணவுகள். அடைத்து அடைத்து தின்னுதல்.
அப்புறம், ஏழைகள் குடித்தால் டாஸ்மாக் குடியர்கள் எனக் கிண்டல் அடித்து விட்டு, ஏர்போர்ட், ஃபைவ் ஸ்டார், கெட்டு கெதரில் கெட்ட ஆட்டம் என மாறிப்போன வாழ்வு இடையில்
வாந்தி எடுப்பது போல் , “அவர் தமிழ் கல்ச்சர் இஸ் தி பெஸ்ட்டுடா”. பெரியார் வராவிட்டால் மூட நம்பிக்கை இருந்திருக்கும், அய்யருக்க ஆதிக்கம் தொடர்ந்திருக்கும் எனச் சொல்லி விட்டு,
60க்கு திருக்கடையூரில் அய்யர் மந்திரத்துடன்
தர்பணத்திற்கு ராமேஸ்வரம் அய்யர் சூழ
வேலைக்கு ???
டிசி எஸ், சி டி எஸ், இன்போஸிஸ், ஜோகோ என பிறாமணாள் கம்பெனி.
நம்ம ஆளு கம்பெனி பேர் வெச்ச, “கிஸ் புளோ”… தமிழ் சினிமாவின் சமீப கால இருட்டு அறையில்… டைட்டில் போல
இப்படி எல்லோமும் குழம்பிக் கிடக்கும் சூழலில் ஒரு மாற்றம் வேண்டும் என தவித்த போது பாஜக இறக்கியது ஆபிசர் அண்ணாமலையை.
ஆரம்பத்தில் செந்தில் பாலாஜியை , அணில் பாலாஜி என்றவுடன், இறங்கி அடிப்பேன் என்றவுடன் ஆஹா மாற்றம் வரப் போகுது என நினைத்தல்……
கோவில் ஆக்கிரமிப்ப்பு நிறுத்தனும், இந்துக் கோவில்கள் விட்டு அறநிலையத்துறை வெளியேறனும்.,
பிரஸ் மீட்டில்,
அண்ணே அண்ணே, 200 பத்தவில்லையெனில் 2000 வாங்கிக்கோங்க இல்ல 5000 மா தரச் சொல்லுகிறேன் என எள்ளி நகையாடி அவர்தம் கைத்தடிகள் பின்நின்று சிரித்தபோது…
——–
உங்கள் மனதில் தோன்றிய எண்ணம் என்னவென்று கமெண்டில் , போடுங்கள்
அது தொட்டு நான் தொடர்கிறேன்…
இவண்
சோ_தாசன்
( சோதா _ சன் இல்லை, சோ_தாசன்,
கண்ணதாசன், பாரதிதாசன் என்பது போல்
நிலை சோதாசன் )
- கவிதைத் தொகுப்பு நூல்கள் 3
- வனம்
- பயத்தை உண்டாக்கு
- கனவு
- தாயகக் கனவுடன்…
- குடும்பம்
- உலகக் கிண்ண உதைபந்தாட்டமும் கனடாவும் – 2022
- மழை
- ஊமைகளின் உலகம்..!
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்
- மக்கள் படும் பாடு
- நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்
- குவிகம் இணையவழி அளவளாவல்
- குக்குறுங்கவிதைக்கதைகள் – 12
- பிழைத்திருப்போம் !
- திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா
- மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய