தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

தாய்மை!

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

Spread the love


நீண்டதொரு சாலையில்
மிதிவண்டியை இழுத்தபடியே
என்னோடு
பேசிக்கொண்டே நடந்தாய்
நீ!

நாமிருவரும்
தற்காலிகமாய் பிரியவேண்டும்
என்பதை
குறிப்பால் உணர்த்தியது
சாலையின் பிரிவு!

என்னிடம் விடைபெற்றபடியே
சாலையின் வலதுபுறமாய்
அழுத்தினாய் நீ
உன் மிதிவண்டியை!

என் கண்ணைவிட்டு
நீ மறையும்வரை
உன்னை
பதைபதைக்கும் உள்ளத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்!!
நடைவண்டியை தள்ளிக்கொண்டு
உற்சாகமாய்க் கிளம்பும்
தன் குழந்தை
கீழே விழுந்துவிடக்கூடாது
எனத் தவிக்கும்
தாய் போலவே…

Series Navigationகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?Navarathri Celebrations 2011 NJ Tamil Sangam

3 Comments for “தாய்மை!”

  • Reeegan says:

    Nice Suresh!

  • GovindGocha says:

    பதைபதைக்கும் உள்ளத்தோடு
    — விட்டு விடுதலையாகுங்கள்… தளர்நிலை உள நிலையில் இருந்து… பாதைகள் நீண்டவை,,, நமது பயணம் நமது காலடியில்… வழியில் வந்தவர்கள் வழியிலேயே பிரிந்தால் அது சலனத்தை ஏற்படுத்தினால் உன் உள்ளம் உன் எண்ணம் உன்னிடமில்லை என்றே பொருள் … அக்கணமே தொலைந்தாய் நீ…. நீ நீயாக இல்லாத போதே உன் பயணம் அர்த்தமற்று போகிறது அல்லது இன்னொன்றில் அமிழ்ந்து விடுகிறது…


Leave a Comment

Archives