வானம் வசப்படும்.

This entry is part 38 of 45 in the series 2 அக்டோபர் 2011

மண் பயனுறவேண்டும்
வானகம் இங்கு தென்படவேண்டும் என்பது மகா கவி பாரதியின் கவிதை வரிகள்.
எப்போது வானகம் மண்ணில் தென்படும்? யாருக்கு அது தென்படும்?
என்பது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு சிந்திக்க முயன்றால் விடை கிடைப்பது திண்ணம்.
பாரதியின் மேர்க் கூறிய கவிதை வரிகள் அகில உலகிர்க்குமான சிந்தனையாகும்.

ிதே கூற்றினை சங்க கவிஞர் கணியன் பூங்குன்றனாரும் ஓர் உலக நோக்கில் யாதும் ஊரே யாவரும் கேளீர்
என பாடுதலை பார்க்கிறோம்.

இன்று ஓர் உலக சமுதாயம் என்ற கருத்துக்கே வலிமை மிகுதி.
அத்தகைய சமுதாயம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், மூத்தோர்கள் என பலரையும் அங்கமாகக் கொண்டு விளங்குகிறது.

இனி சமுதாயத்தில் அங்கங்களாக திகழும் மேர்ச் சுட்டிய பிறிவினருக்கு வானகத்தையும் மண்ணில் லட்சிய பாதையில் வசமாக்கிக் கொள்ளும் வழிகளைக் காண்போம்.
குழந்தைகள் வானத்தையும் வசப்படுத்திக் கொள்ள

இன்றைய குழந்தைகள் நீங்கள் எனினும் இனி இந்த உலகத்தை ஆள பிரந்தீர்
தின்றதையே தின்று தெவிட்டுதல்இல்லாமல் அன்றன்றும் உலகில் புதுமை காணவேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை பகர்கிறார் புரட்சி கவிஞர் பாரதிதாசன்.
கவிஞரின் கருத்துக்கு செயல் வடிவம் அளிக்கும் வகையில் குழந்தைகளின் மனத்தில் புதுமை சிந்தனைகளை விதைப்பது பெற்றோர், பெரியோர், ஆசிரியர் ஆகியோர் தம் இன்றியமையா கடமையாகும்.

இன்றைய குழந்தைகள் நாம் எதிர் பார்ப்பதைவிட அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக திகழ்கின்றனர். அவர்களுக்கு நாம் குழந்தைகளாக இருந்த காலத்தைக் காட்டிலும் அறிவியல் சாதனங்கள் எளிதில் வசமாகியுள்ளன. ஆனால் குழந்தைகள் அவற்றை எப்படி பயன்படுத்திக் கொள்ளுகின்றனர் என்பதைப் பொருத்து அவர்களது மேன்மையும் முன்னேற்றமும் அமையும். இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் அதிக நேரத்தை தொலைக்காட்சி, கணினி, இணையம், அலைபேசி ஆகிய ஊடகங்களில் செலவிடுகின்றனர்.
பெற்றோரும் இன்று வேலைக்கு செல்லுதல், வணிகம் செய்தல் உள்ளிட்ட பொருளாதார காரணங்களாலும் பிற சமூக பொறுப்புகள் காரணமாகவும் தங்கள் குழந்தைகளுக்கு பொருளை, கருவிகளை வழங்குதர்க்கு பெரும்பாலும் விரும்புகின்றனரே தவிற குழந்தைகளுடன் அதிகமாக நேரத்தை செலவிடுவதில்லை. ஆசிரியர்களோ மாணாக்கர்களை அதிக மதிப்பெண் பெருதற்க்கு ஊக்கப்படுத்துகின்றனரே ஒழிய குழந்தைகளோடு பெரும்பாலும் நெருங்கிப் பழகுவதில்லை. இன்று அவர்களுக்கு அப்படி பழகுதற்க்கான நேரமும் குறைவென்றே கூறவேண்டும். காரணம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பாடத் திட்டத்தை குறித்த காலத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற நிர்பந்தம். பெற்றோர் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடவேண்டும். தங்கள் குழந்தைகளின் இயல்புகள், நிறைகுறைகள் விருப்பங்கள் முதலியவற்றை அறிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு குழந்தைகளை புரிந்துகொண்டால்தான் பெற்றோர்கள் தம் குழந்தைகளை மேன்மை படுத்த இயலும்.
இன்று பெற்றோர்கள் தம் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறவேண்டுமென கருதுகின்றனர். அது தவறில்லை. பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதர்க்காக என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் கையாளுகின்றனர்.
விடுமுறை காலங்களில்கூட பலவகை பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். சான்றாக கோடை வகுப்புகள் என்ற ஒரு பட்டியலிட்டு நுன்கலைகளாகிய ஓவியம்,இசை, நாட்டியம் முதலிய வகுப்புகளுக்கும், தவிறவும் பிற மொழிகளைக் கற்றல், கராத்தே, ஜிம்,அபாகஸ் பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரு நாளின் நேரத்தை அட்டவணை இட்டு குழந்தைகளை அனுப்புகின்றனர். குழந்தைகளை குழந்தைகளென்று நினைக்காமல் பலவற்றையும் கட்டாயமாக விரும்பியோ விரும்பாமலோ கற்க்கும் எந்திரங்களாகவேஎண்ணுகின்றனர். ஆநால் குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டிய மனித விழுமியங்களை கற்ப்பிக்க போதிய நேரத்தை செலவழிப்பதில்லை.
இந்த நிலை மாறவேண்டும். விடுமுறை காலங்களில் உறவினர், சுற்றத்தார், நண்பர்போன்றோரின் இல்லங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதன்மூலம் பாசம்,நேசம்,தோளமை, அன்பு போன்ற மனிதரோடு இணைந்தும் பிணைந்தும் வாழக்கூடிய நல்ல பழக்கங்கள் குழந்தைகள் இடையே உறுவாகும். ”கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற முதுமொழிக்கான பொருளை குழந்தைகள் நேரடி அனுபவம் மூலம் உணரும் வாய்ப்பு கிட்டும். மேலும் பெற்றோர் குழந்தைகளை இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தலங்களுக்கு அழைத்துசெல்லுவதால் குழந்தைகளின் அறிவு விறிவடையும்;அவர்களது எண்ணமும் விசாலப்படும்.
பெற்றோர் மதிப்பென்களைவிட மனித விழுமியங்கள் முக்கியமானதென்பதை உணரவேண்டும்.
தம் குழந்தையைவிட அண்டை வீட்டு குழந்தை எதோ ொரு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றால்கூட தம் குழந்தை அக்குழந்தையை போல மதிப்பெண் பெறவில்லை என்பதர்க்காக குழந்தையை கண்டிப்பது தவறு.
குழந்தைகளை பிற குழந்தைகளோடு ொப்பிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தன்மை திறமை இருத்தலை உள்ளன்புடன் புரிந்துகொண்டு அதர்க்கேர்ப்ப செயல்படவேண்டும்.
கலில்கிப்ரான் என்ற கவிஞர் (உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல,
அவர்கள் உங்கள் மூலமாக இந்த உலகத்துக்கு அனுப்பப் படும் கடவுளின் பிரதிநிதிகள்
அவர்கள் மேல் உங்கள் கருத்தினைத் திணிக்காதீர்கள்)
என்பார். கிப்ரானின் கவிதை வரிகளின் ஆழத்தினை பெற்றோர் உணரவேண்டும்.
குழந்தைகளின் உள்ளத்தில் பெற்றோர் தம் விருப்பங்களைத் திணிக்க கூடாது. பிள்ளைகளின் விருப்பங்களையும் திறமைகளையும் புறிந்துகொண்டு எண்ணத்துக்கு ஏர்ப்ப அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
குழந்தைகள் இடம் பெரும்பாலான பெற்றோர் அக்குழந்தை மருத்துவம் படிப்பாரா? பொறிியல் படிப்பாரா? என்று கேட்பதையே பார்க்கிறோம். அப்படி மக்கள் பொறியாளர், அல்லது மருத்துவராகவேண்டும் என எதிர்ப் பார்ப்பது தவறென கூறமுடியாது. ஆனால் குழந்தைகளுக்கு அத்தகு பதவிகளைப் பற்றி சொல்லித்தருவதைவிட மனிதநேயம், அன்பு, உறவுகள் இடம் காட்டவேண்டிய நேசம், இயர்க்கை நாட்டம், பறவைகள் விலங்குகள் மரங்கள்,செடிகொடிகள் முதலியவற்றின் மேல் அக்கரை என பல விஸயங்களைப் பற்றி சொல்லித் தரலாம்.
பாரதியின் பாப்பா பாட்டில் இத்தகைய கருத்துக்கள் மேலோங்கி கிடக்கிறது. இது போன்ற நல்ல கருத்தமைந்த பாடல்களையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். எங்கோ உள்ள நாடுகள், அவற்றின் பறப்பளவுகள் போன்றவை பற்றிய தகவல்களை எல்லாம் நெட்டுறு போடச் சொல்லும் பெற்றோர் தம் சுற்றுபுரம் பற்றி குழந்தைகளுக்கு கர்ப்பிக்க தவறிவிடுகின்றனர்.
முன்பெல்லாம் தாத்தா பாட்டியர் நாம் குழந்தைகளாக இருந்தபோது நமக்கு கதை முதலியவற்றை சொல்லுவார்கள். இப்போது அவர்களும் தொலைக் காட்சி தொடர்களில் மூழ்கிவிடுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். நம் பாரம்பரிய கதைகள், நாட்டுப்புர கதைகள், பழமொழிக் கதைகள், விடுகதைகள், கலைகள், விளையாட்டுக்கள் முதலியவற்றை பெற்றோரும் பெரியோரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என எழுதுவார் புலமைப் பித்தன். எனவே குழந்தைகளை ஆரோக்கிய சிந்தனையாளர்களாக வளர்க்க வேண்டும்.

அவர்களது வளர்ச்சிக்கும் வயதுக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் ஏற்ப்ப நல்ல பட கதைகள், அறிவுக்கும் ஆன்மீகத்துக்கும் விருந்தாக அமையக் கூடிய குருந்தட்டுக்கள் என தேவையானவற்றை வாங்கி தந்து குழந்தைகளை தாமே கற்றலுக்கு தூண்டலாம்.
இப்படி பல வழிகளில் பெற்றோர் செயல்பட்டால் நல்ல குழந்தைகளை நம்பிக்கையுள்ள குழந்தைகளை உறுவாக்கலாம். குழந்தைகளுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும். அவர்கள் விரும்பியதெல்லாம் கைக்கூடும். அவர்கள் வானத்தையும் வசப்படுத்திக் கொள்ளுவர்.

இளைஞருக்கு வானம் வசப்பட_

இளைஞரே ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆவர். எப்படி முதுகெலும்பு இல்லா உயிரினம் எழுந்து நிற்க்க இயலாதோ அது போலத்தான் இளைஞரை போற்றாத சமுதாயமோ நாடோ உயர்வு பெற இயலாது.
இலைஞரே நாட்டினைத் தாங்கும் தூண்களாவர்.
இன்றைய இளைஞருக்கு வாய்ப்புகளும் மிகுதி. அதைக் காட்டிலும் சவால்களும் மிகுதி. இன்றைய பெரும்பாலான இளைஞர் தம் காலத்தை செலவிட வகைவகையான இணையதலங்கள், உள்ளன. இளைய சமுதாயத்தை திணரடிக்கும் வகையில் இணயத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
பெரும்பாலான இளைஞர் facebook, tweeter, போன்றவைகளில் நேரத்தை செலவழிக்கின்றனர். தவறே இல்லை. ஆனால் இச் செயல்மட்டும் இளைஞர் தம் முன்னேற்றத்துக்கு போதுமா? நிச்சயம் போதாது.
அவர்கள் தம் எதிர்க் காலம் குறித்த திட்டத்தினை மனத்தில் கொள்ளவேண்டும். அது ஒரு மேல்நிலைப் பள்ளி,
குறித்த வகுப்புக்குள் ஓர் அறிவியல் ஆசிரியர் புதிதாக நுழைகிறார். அறிமுகத்தின்போது மாணவர்களிடம் எதிர் காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்கிரார்.
மாணவர்கள் வழக்கமான பதில்களை சொல்ளி வர, ஒரு மாணவர்மட்டும் நான் நிலவுக்கு போவேன் என்றார். அவரைப் பார்த்து பிற மாணவர்கள் கேலியாக நகைத்தனர். ஆனால் அப்படிச் சொன்ன மாணவர் பிர்க் காலத்தில் நிலவில் கால் பதித்தார். அவர்தான் நீல் ஆம்ஸ்டராங். எனவே இளைஞருக்கு எதிர் காலம் குறித்த திட்டம் இருத்தல் நல்லது. திட்டமிடுதலுடன் உழைப்பும் விடா முயற்சியும், தொல்விகளை சகித்துக் கொள்ளும் பக்குவமும் தேவை.. உடல் குறைகளைக் கூட உதாசினப் படுத்தி முன்னேரியவர் பலர். உதாரணத்துக்கு முப்பொறி இழந்த பெருமாட்டி ஹெலன்கெல்லரை சுட்டலாம்.
கியூபப் புரட்சிக்கு வித்திட்டு அந்த நாட்டை உயர்த்தியவர்களுள் ஒருவரான சேகுவேரா கூட பிறந்தது முதல் ஒரு ஆஸ்த்துமா நோயாளியாவார். ஆனால் அவரது வாழ்வு இளைஞருக்கு சிறந்த பாடமாகும். அவர் ஒரு மருத்துவராக, தலகர்த்தராக, ஆசிரியராக,தலமைப்பண்பாளராக கியூபாவின் நிதியமைச்சராக என பல்த்துறை வித்தகராகத் திகழ்ந்தார். இத்தகு மேலானத் தலைவர் தம் பண்புகளை இளைஞர் வழி காட்டுதலாக கொள்ளவேண்டும்.
நம் தேசத்து தலைவர்களில்கூட அன்னல் அம்பேத்கார், காந்தியடிகள், பகத்சிங் நேதாஜி, சிதம்பரம்பிள்ளை, என எத்தனையோ தலைவர்களின் ஒழுக்கம், வீரம், தியாகம் போன்ற நர் பண்புகளுக்கு உரைவிடமாய் திகழ்து நாட்டை முன்னேற்றினர். இத்தகய பெரியோர்களது வாழ்க்கை வரலாற்றை அடியொற்றி இளைஞர் செயல்பட்டால் அவர்கள் தம்மையும் இந்த தேசத்தையும் உயர்த்துவர் என்பது உறுதி. இத்தகையோருக்கு வைய்யகமும் வானகமும் தாழ்ப் பணியும்.

மகளீருக்கு வானம் வசப்பட_
பாரதி புதுமைப் பெண் குறித்து பாடியுள்ளமை அனைவரும் அறிந்ததே.
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கு பெண்
இளைப்பில்லைக் காண் என்று கும்மியடி
என்பது இன்று ஓரளவு நிறைவேறியதாகத் தோன்றக்கூடும். ஆனால் முழுமையான பெண் விடுதலை இன்று சாத்தியமாகியுள்ளதா
என்பது சிந்தனைக் குறிய வினாவாகும்.
இன்று பள்ளி, கல்லூறி பல்கலைக் கழகம் என எல்லா வகைக் கல்வி நிறுவனங்களிலும் மகளீபுக்கென இட ஒதுக்கீடு இருத்தல் வெளிப்படை.

ஆடவரோடு மகளீரும் சரிநிகர் சமானமாக கற்று பட்டம் பெற்று பல் துறை பணிகளுக்கும் செல்லுகின்றனர். இன்று கல்வித் துறை முதல் காவல்த் துறை, இராணுவம் ஈராக எல்லாத் துறைகளிலும் மகளீரது பங்களிப்பு நீக்கமற நிறைந்துள்ளது.
ஆனால் இன்றும் அடித் தட்டு நடுத் தட்டு பெண்களில் பெண் என்பதால் பள்ளிக்கு செல்லாத அல்லது பாதியில் படிப்பை விடுத்த பெண்கள்இருத்தலை காணமுடிகிறது.
ிந்த நிலை மாறவேண்டும். கட்டாயம் எல்லா நிலைப் பெண்களும் படிக்கவேண்டும். ஒரு ஆண் படித்தால் அக்கல்வி அவநோடு நின்றுவிடும். ஆனால் ஒரு பெண் படித்தால் அது ஒரு குடும்பமே படித்ததர்க்கு ஒப்பாகும். காரணம் தாயே குழந்தையின் முதல் ஆசிரியர் ஆவார்.

எனவே எல்லா பெண்களுக்கும் கட்டாயம் கல்வி அளிக்கப் படவேண்டும்.
படித்த பெண்கள் இன்று ஊதியம் ஈட்டும் பொருட்டு அலுவலகம் செல்லுகின்றனர். படிக்காத பெண்களும் கூட வருவாய் ஈட்டும் பொருட்டு வெவ்வேறு தொழில் வாய்ப்புகளைத் தேடிச் செல்லுகின்றனர். பெண்களின் ிந்த செயல்பாட்டால் அவர்களுக்கு இரட்டைப் பணிச் சுமையே ஏர்ப்படுகிறது. இல்லத்திலும் அலுவலகத்திலும் பெண் உழைக்கும் எந்திரமாக தன்னை ஆக்கிக் கொள்ளுகிறாள். ிச்சிக்கல் தீர ஆண்கள் பெண்களது பணிச் சுமையை பகிர்ந்துக் கொள்ளவேண்டும். மகளீர்நிலையை புரிந்துகொண்டு அவர்களை அன்போடும் தோழமையோடும் நடத்தவேண்டும்.
முன்பைவிட இப்போது மகளீருக்கு சிக்கல்களும் கூடியுள்ளன. குறிப்பாக பாலியல் தொடர்பான சிக்கல்கள் வரதட்சனை பிரச்சனை, ,மணமுறிவு, பாலியல் வல்லுறவுகள் என பலப்பல பிரச்சனைகளைச் சுட்டலாம். இத்தகய சிக்கல்களிலிருந்து விடுபட என்ன வழி?
மாதர்த் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
என்ற அமர கவி பாரதியின் கவிதை வரி செயல்வடிவம் பெறவேண்டும். பெண்கள் கல்வி கற்பதோடு தன் நம்பிக்கையையும் மனவலிமையையும் தமக்கு உறுவாக்கிக் கொள்ளவேண்டும். தர்க்காப்பு கலையை கர்ப்பதும் தேவை என கூறலாம். தம்மை ஆடவருக்கு சமமாக பாவித்து போராடிய மகளீர் தம் வாழ்க்கையை முன் உதாரணமாகக் கொள்ளலாம். ஜான்சி ராணி
இலக்குமிபாய், வீர மங்கை ஜோனப்பார்க், இந்திய பிரதமர் இந்திரா போன்ற மகளீரது வாழ்ழ்க்கை மகளீருக்கு முன் உதாரனமாக இருத்தல் குறிப்பிடத்தக்கது.
மகளீர் கல்வி, தைரியம், திட சித்தம், ிலட்சியத்தில் உறுதி போன்ற பண்புகலைக் கைக் கொண்டால் அவர்களும் எளிதில் நட்சத்திரங்களைக் கூட மலராகப் பரித்து அணிந்துகொள்ளலாம்.
அவர்களாலும் வானத்தை வசமாக்கிக் கொள்ளமுடியும்.

மூத்தோருக்கு வானம் வசப்பட

மூத்தோர் சொல்லும் வார்த்தைதனை மறக்கவேண்டாம்.
என்பது உலகநீதி.
வள்ளுவர் பெரியாரைத் துணைக் கோடல் எவ்வளவு மேன்மையானதென்பதை
குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
கலைஞர் உரை:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு
உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
என வலியுறுத்துகிறார். எனவே ஒரு நாடு அல்லது சமுதாயம் மேன்மையுற பெறியாரைப் போற்றுதல் இன்றியமையாததாகும். பெரியோர் அல்லது மூத்தோர் இளைய தலைமுறையின் முன்னேற்றத்துக்காக வழி காட்டும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.. இளைய தலைமுறைக்கு வழிவிடுவதோடு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அளித்து இளந் தலைமுறையினை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். பெரியோரும் கால நியதிக்கு கட்டுப்பட்டவரே. அவர்கள் எப்போதும் பழமை பழமை என்று வெரும் பாவனை பேசி காலம் கழிக்கலாகாது. தலைமுறைகளைக் கடந்த மூத்தோர் தமக்கும் இளைய சமுதாயத்துக்கும் இடையே இடைவெளி ஏர்ப்படாமல் நடந்துகொள்ள முயலவேண்டும். தலைமுறை இடைவெளி என்ற சிக்கல் தவிற்க்க முடியாதது. ஆனால் பெரியோரும் இளையோரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுவதோடு விட்டுக் கொடுத்தால் ஓரளவு மாறுபட்ட தலைமுறையினருக்கிடையே உள்ள முரண்பாடுகள் குறைய வாய்ப்பு உண்டு. பெரியோரும் இளையோருக்கு ஏர்ப்ப தம்மை தகவமைத்துக் கொள்ள மநத்தளவில் இளையோரைப் போல ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடலாம். நல்ல புதுமைகளை மூத்தோர் ஏற்றுக் கொள்ளவேண்டும். தேவையற்ற பழமைக் கருத்துக்களை அவர்கள் விட்டுவிடவேண்டும். அவர்களும் இன்றைய தலைமுறையினரின் புதுமை சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். {பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வழுவல கால வகையினான‘} என்ற நந்நூல் மொழியும் கருத்தினை பெரியோர் புரிந்து செயல்படவேண்டும். இளைய சமுதாயமும் மூத்தோரை புறக்கணிக்க கூடாது. மூத்தோரின் அனுபவங்களை இளையோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஒரு நாட்டு அரசன் தன் நாட்டு குடிகள் இடம்”{வயது முதிர்ந்த பெரியோரை எல்லாம் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிடவேண்டும். அவர்களால் நம் நாட்டுக்கு பயன் விளையாது. பாதகமே விளையும்}என்றானாம். குடிகளும் அப்படியே செய்தனர். சில காலத்துக்கு பின் மன்னனும் வீரரும் காட்டு வழியாக வேட்டைக்கு சென்றனர். அவர்கள் வேட்டைக்கு சென்ற காட்டில் தண்ணீர் அகப்படவில்லை. வீரரை நோக்கி மன்னன் எட்டு திசைகளிலும் சென்று தண்ணீர் தேடி வருமாறு வீரர்களுக்கு கட்டலை இடுகிறான். வீரர் பலரும் சென்று தண்ணீர் கிடைக்காமல் வெரும் கைய்யோடு திரும்பினர். ஆனால் ஒரு இளைஞன் மட்டும் அரசரிடம் வந்து தனக்கு நீர் பொய்கை ிருக்கும் இடம் தெரியும் எனவும். சில மையில்தூரம் நடந்தால் தன்னால்நீர் பொய்கையைக் காட்டமுடியும் எனவும் கூறுகிறான். அதனைக் கேட்டு அனைவரும் வியக்கின்றனர். . இருதியில் அரசன் குறித்த இடத்தைக் காட்டினால் காட்டும் வீரனுக்கு பரிசு அளிப்பதாக கூறுகிறான். அந்த வீரனும் நீர்நிலையைக் காட்டிட அனைவரும் குடிக்கின்றனர். ஆனால் அரசன் வீரனான அந்த இளைஞனுக்கு நீர்நிலை இருந்த இடம் எப்படித் தெரியும் எனவியந்து கேட்கிறான். அப்போது இளைஞன் தனது மூடு பல்லக்கைத் துறந்து காட்டி இதோ என் வயதான பாட்டனாருடன்தான் நான் வந்தேன். அவர் நீங்கள் நீர்நிலையைத் தேடும்போது மரங்களும் பலவகை பறவைகளும்இருக்கும் பசுமையானஇடத்தில்தான் நீர் கிடைக்கும் என அனுபவத்தால் கூறினார். அதனால்தான் நாம் தாகம் தணிக்கமுடிந்தது. எனவே மூத்தோரை இகழ்ந்து மூலையில் விடவேண்டும் என்ற கருத்தினை தாங்கள் விடவேண்டும் என கூறிட மன்னனும் இளைஞனின் கருத்தை ஏற்று மூடு பல்லக்கிலிருந்த முதியவர் இடம் மன்னிப்பு கேட்டதோடு நாட்டிலுல்ல முதியோரை கௌரவத்துடன் போற்றினானாம். இளைஞனுக்கும் உறிய பரிசை வழங்கினானாம்.நம்நாட்டில் பெரியோருக்குநாம் எவ்வளவு முதன்மை அளித்துள்ளோம் என்பதற்க்கு இன்றைய அரசியல் தலைவர்களே சான்றாக அமைகின்றனர். பெரியோர் நல் நடத்தை, நல்லொழுக்கம், நர் செயல்கள், உதாரகுணம், இளையோருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு, இளையோருக்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட வழி காட்டுதல் போன்றவற்றை மேர்க்கொண்டால் இளையோர் பெரியோரோடு இணக்கம் ஏர்ப்படும். சமுதாயமும் நாடும் வளம் பெறும். மூத்தோருக்கும் வானம் வசப்படும்.

முடிவுரை_

வானம் வசப்படும் என்னும் இவ்வினிய சொல்லாட்ச்சி படைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் தம் புதினத்துக்கு அளித்த தலைப்பாகும்.
இந்த சொல்லாட்சி இன்று பிரபஞ்சத்தையே வசப்படுத்தும் சூத்திர கயிறாக அமைந்துள்ளது.
பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் பல் வகைப் போட்டிகளிலும் மேடை பேச்சுகளிலும் எல்லோரும் கைய்யாளக்கூடிய பொருளாக இந்த சொல்லாட்சி அமைந்துள்ளது. தொட்டனைத்தூரும் மணர்க்கேணி போல சிந்திக்க, சிந்திக்க ஆழமும் நுட்பமும் மிக்க புதுப் புது கருத்துக்களை வழங்கும் அறிய கருவூலமாக இத்தலைப்பு அமைந்துள்ளதென்றால் அது மிகையல்ல.
கட்டுரையில் கூறியது போல குழந்தைகள், இளைஞர்கள், மகளீர், மூத்தோர் எல்லோரும் தத்தம் கடமைகளை கருத்தூன்றி செய்தால் மனித குளத்துக்கு வானம் வசப்படும். மண்ணகத்திலேயே விண்ணகத்தை அல்லது துறக்கத்தை அடையலாம்.

==
முனைவர். கோ. கண்ணன்
இ ணை பேராசிரியர்
தமிழ்த் துரை
அரசு கலைக் கல்லூரி
தருமபுரி.

Series Navigationமூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)பேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….
author

முனைவர். கோ. கண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    காவ்யா says:

    //சங்க கவிஞர் கணியன் பூங்குன்றனாரும் ஓர் உலக நோக்கில் யாதும் ஊரே யாவரும் கேளீர்
    என பாடுதலை பார்க்கிறோம்.//

    நிறைய கருத்துக்களை இவர் கட்டுரையை வெட்டியும் சில கருத்துக்களையும் ஒட்டியும் வைக்கலாம். இப்போது ஒன்றே ஒன்று.

    சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனாரின் இவ்வரிகள் பிரபலமானவை மட்டுமல்ல மிகப்பெருமையாக முன் வைக்கப்படுகின்றன. இங்கும் அதே. இருக்கட்டும். நான் சின்னாட்களுக்கு முன் படித்ததில் சொல்லப்பட்டதென்னவென்றால், இவ்வரிகள் தமிழ்வணிகர்களுக்காகவே எழுதப்பட்டவை. பாமர மக்களுக்கன்று. பாவலர் தமிழர்கள் திரைகடலோடி திரவியம் தேடிகள் எனபதை நன்கறிந்தவர் மட்டுமல்லாமல், அதை ஊக்குவிக்கும்படி இவ்வரிகளை எழுதியிருக்கலாம். இன்றும் திரைகடலோடிகளாகத்தான் இருக்கிறார்கள். மலையாளிகளுக்கடுத்தபடி இவர்கள்தான். அக்காலத்திலும் அப்படித்தான் போலும்.

    இவ்வரிகளில் தமிழாசிரியர் கண்ணன் காண்பதென்னவென்றால், இஃதொரு உலகசமூகத்தை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்டது என்பதே. எனக்கு அப்படித் தெரியவில்லை. முதல் காரணம், உலக சமுதாயம் எனபது ஒரு உயரிய நோக்கமன்று. அது வெறும் வசதிக்கான நோக்கமட்டுமே. உலக ஐக்கிய நாட்டுச்சபை நாடுகளுக்கிடையே பரஸபர நட்பையும் ஒருவருக்கொருவர் உதவலையும் மட்டுமே நோக்கில் கொண்டமைக்கப்பட்டது. எல்லா நாடுகளையும் இணைத்து ஒரே நாடாக்க அன்று. அது முடியாது மட்டுமன்று; கூடாதும் கூட.

    உலகநாடுகள் இணையாமல் நட்பு பாராட்டலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பிறநாடுகளுக்குப்போகும் தமிழரும் பிறநாட்டவர் நம்நாட்டுக்கு வரின் அவர்களை நாம் பார்க்கும் பார்வைக்கும் ஒரு வழிகாட்டலே. அஃதாவது, அவர்களை நாம் சேய்மை பாராட்டாது அன்பு காடடி அன்பைப்பெற வேண்டும்.

    பலபல தமிழர் கருத்துக்கள் தவறான வழியில் காலங்காலமாக புரிந்து கொள்ளப்பட்டுவருகின்றன என்பதற்கு கணியன் பூங்குன்றனின் இக்கருத்துப்புரிதல் ஒரு எ.கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *