This entry is part 2 of 9 in the series 4 ஜூன் 2023

ரோகிணி கனகராஜ்

தன்மயக்கம் கொண்டு

எனக்குள்ளே எழுந்து

ஆடுகிறது சர்ப்பம் ஒன்று… 

அதனை அடக்கியாளும்

மகுடியும்கூட என் 

கையில்தான்…. 

ஒருநாள் மகுடியை

உடைத்தெறிந்து வீசினேன்

அது ஒரு தாழம்புக்காட்டைச்

சென்றடைந்தது… 

எனக்குள்ளே இருந்த

சர்ப்பமும் வெளியேறி

தாழம்புக்காட்டில் தஞ்சம்

புகுந்தது… 

நான் இப்போது பியானோ

வாசிக்கக் கற்றுக்

கொள்கிறேன்…. 

சர்ப்பத்தையும்

மகுடியையும் நான் 

தேடுவதேயில்லை…

அவை வேறு 

யாரிடத்திலாவது

இருக்கக்கூடும்…. 

Series Navigationசூடேறிய பூகோளம் முன்னிலைக்கு மீளாது2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் தான் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகி யுள்ளது .