இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை

This entry is part 3 of 45 in the series 9 அக்டோபர் 2011

லதா ராமகிருஷ்ணன்

மரணதண்டனை கூடாது என்ற கருத்திற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மானுட வாழ்க்கையை முன்னின்று வழிநடத்திச்செல்வது அன்பும், அக்கறையும், அனுசரணையும், விட்டுக்கொடுக்கும் இயல்பும், மன்னிக்கும் மனோபாவமுமே. [ஒரு பிரச்னையில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து தரப்பினரிடமும் இவையாவும் இடம்பெற்றிருக்கவேண்டியதும் இன்றியமையாதது]. யார் அதிக வல்லமையாளர்களோ அவர்களே வெல்வார்கள் என்பதே வாழ்க்கைநியதி என்று சொல்லப்படுவது ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதுவே ஒட்டுமொத்த உண்மையல்ல.

அதே சமயம், ‘மரணதண்டனை கூடாது’ என்ற இயக்கம் தொடர்ந்த ரீதியில் நடத்தப்படவேண்டிய ஒன்று. கருத்தியல் ரீதியாக இது குறித்து ஒட்டியும் வெட்டியுமான கண்ணோட்டங்கள், காரசாரமான விவாதங்கள், சட்டரீதியான, அரசியல்சாசன ரீதியான பார்வைகள், புரிதல்கள் என்பதாய், மரணதண்டனை கூடாது என்பதை நம் நாட்டில், அதாவது இந்தியாவில்[இந்தியாவைத் தனது தாய்நாடாக சொல்லிக்கொள்வதையே அவமானமாகக் கருதும், கற்பித்துவரும், பிற்போக்குத்தனமாக பாவிக்கும், போதித்துவரும் ’அறிவுசாலிகள்’ நம்மிடையே கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் என்பதும் கவனத்திற்குரியது] அதிகாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் மனிதநேய ஆர்வலர்கள் இறங்கவேண்டியதும், இயங்கிவரவேண்டியதும் இன்றியமையாததாகிறது.

ஆனால், இன்று இந்த இயக்கம் தற்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் விதத்தில் இந்த சமூக அக்கறை குறித்து கட்சிரீதியாகவும், பிறவேறு காரணங்களினாலும் ‘மரணதண்டனை வேண்டும், வேண்டாம் என்று இருவேறு பிரிவாக கட்சிகட்டிக்கொண்டு நிற்கும் சூழல் நிலவுகிறது.

மூவரின் மரணதண்டனைக்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்தியக்கங்கள் பலவற்றில் ‘ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டது சரியே’, என்ற வாசகம் அல்லது கருத்து இடம்பெறும்போது காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, நுண்ணுணர் வுள்ள வேறு பலராலும்கூட அதை ஏற்க முடிவதில்லை. இவ்வாறு ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது தாங்களே என்றும் அதற்கான காரணம் இந்திய அமைதிப்படையின் அராஜகம் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் கூட பிரகடனம் செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப்போரில் 1000ற்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களும் உயிரிழந்தார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த குண்டுவெடிப்பில் இறந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களைப் பற்றி, படுகாயமுற்ற பலரைப் பற்றி ஒப்புக்குக்கூட வருத்தம் தெரிவிக்கப்படுவதில்லை. வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து ‘கருணை மனு’ வரை வந்துவிட்ட நிலையில் ‘இந்த மொத்த வழக்குமே இந்திய அரசால் புனையப்பட்ட ஒன்று’ என்று நிறுவ முனைவது சரியா?

இத்தகைய போக்குகளால் ’உங்களுடைய தலைவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டால் நீங்கள் அதை நியாயப்படுத்துவீர்களா?’ என்றவிதமான எதிர்ப்புகள் கிளம்பி மரணதண்டனைக்கெதிரான ஒருமித்த குரல் உருவாவது தடைபடுகிறது.

முதலில் சம்பந்தப்பட்ட மூவரின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும். அதற்குரிய சட்ட ரீதியான, சமூக ரீதியான [அதாவது, மக்கள் அனைவரும் ஒரே குரலில் மரணதண்டனையை எதிர்ப்பதற்கான] முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படவேண்டியதே இன்றைய அவசர, அவசியத் தேவை.

மரணதண்டனை கூடாது என்பது குறித்து தன்னுடைய புதினம் ’தி இடியட்’ல் [அப்போதைய கில்லட்டீனை முன்னிறுத்தி] மிக வலுவான வாதங்களை முன்வைத்திருக்கிறார் தாஸ்த்தாவ்ஸ்கி!

மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லும் நாம் எந்தவொரு உயர்ந்த நோக்கத்திற்காக இருந்தாலும் சரி, உணர்ச்சிக் கொந்தளிப்பில் தனக்குத்தானே தந்துகொள்ளும் மரணதண்டனை யாகிய தற்கொலை மேன்மையானது என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனித மனங்களில் வேரூன்றச்செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

Series Navigationஉறவுகள்மகிழ்ச்சியைத் தேடி…
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    GovindGocha says:

    மரண தண்டனை , குற்றத்தைப் பொறுத்து தேவை… திட்டமிட்டு நடத்தப்படும் கொலை, சிறுவருக்கு எதிரான பாலியல் பலாத்காரம், இவைகள் உங்கள் வீட்டில் நடந்தால் தெரியும்… மரணதண்டனை வேண்டும் என்பீர்… மனிதநேயம் பேசுபவர்கள் கோயபுத்தூரில் கொல்லப்பட்ட இரு சின்னஞ்சிறார் வீட்டில் போய் ஒரு வாரம் தங்கி வாருங்கள்…

  2. Avatar
    sathyanandhan says:

    The main issue has been completely misunderstood by many. For decades saner people and intellectuals have fought against capital punishment. Why? Government / Society must not act in a barbaric manner. NONE HAS THE RIGHT TO KILL ANYONE including Government.Here we must recall mahatma Gandhi’s saying “An eye for eye will end the whole world blind”. But in a politically motivated campaign the human values are very selective. Not only we must oppose capital punishment but we must also with equal vehimence condemn and fight against those who sexually abuse children, who rape, who employ child labor ,who kill or push persons to the brink of suicide
    like some teachers who abuse teenagers and people who practice untouchability and all instances of violence against Dalits / minorities. In short we must be human to all and create awareness about the plight of vulnerable sections of society. In tamil nadu there are many political orphans and idiologically blank power mongers who want to gain some mileage out of any sensitive issue.
    These people’s heart wont pain when child laborers get burnt year after year while manufacturing crackers and about the plight of lakhs of people who are effectively denied human rights due to untouchability or poverty. Punishment is the deterrent against crime. But instead of capital punishment imprisonment without any scope for release on any count can be an alternative. The article has rightly condemned the politicians who celebrate emotional suicide for some cause or other. Sathyanandhan

  3. Avatar
    காவ்யா says:

    ல.ரா

    கடைசிப்பத்தியில் என்ன சொல்ல வருகிறீர்கள் ? U r mixing suicide and regicide (killing of king)? What do u want to say there please ?

    //ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த குண்டுவெடிப்பில் இறந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களைப் பற்றி, படுகாயமுற்ற பலரைப் பற்றி ஒப்புக்குக்கூட வருத்தம் தெரிவிக்கப்படுவதில்லை. //

    அப்படியா ? அந்த மூவரும் எங்கேயும் பேட்டி கொடுத்ததாக நானறியவில்லை. மற்றவர்கள் சொல்லியிருக்கலாம். அவர்கள் சொன்னார்களா ?

    இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். பேரறிவாளன் எழுதியக் கருணை மனுவை இணயை தளங்களில் படிக்க நேர்ந்தது. அவர் அதில் தனக்கும் இக்கொலைகளுக்கும் தொடர்பில்லையென்றும். தன்னிடமிருந்து பெற்ற பொருள்கள் தன் இளங்கலையறிவியல் பட்டப்படிப்பில் ஆர்வm காரணமாகவும். அது இக்கொலைக்குக் காரணமாக இருக்கும் என்று அப்போது தனக்குத் தெரியாதென்றும் எழுதியிருக்கிறார். தன்னை வேண்டுமென்றே குற்றவாளியாக்க புலனாய்வு அதிகாரி தோமஸ் முனைந்து அனைத்தையும் திரித்தார் என்கிறார் பேரறிவாளன். அவர் தாயும் இதைத்தான் சொல்கிறார்.

    தான் நிரபராதி என்று சொல்லும் ஒருவர் எப்படி இக்கொலைகளுக்கு வருத்தம் தெரிவிப்பார்? அவர் கொலைகளைத்தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டதாக ஆகிவிடுமே?

    போகட்டும். மற்ற இருவரும் இக்கொலைகள் சரியென்று எங்கேனும் சொல்லியிருக்கிறாரகளா ? எனக்குத் தெரியாது. ஆதாரம் காட்டுங்கள்.

    ராஜீவ் காந்தியின் கொலையைச் சரியென்பவர்கள் யாரென்று பாருங்கள். அவர்கள் இலங்கைத்தமிழர்களில் சிலர் அல்லது பலர். There r some more who r Indians but SL Tamil sympathisers. அவர்கள் யாழில் வாழ்ந்து இந்தியா ராணுவத்தின் நடவடிக்கைகளை நேரில் பார்த்தவர்கள் என்கிறார்கள். அவர்கள் பல காரணங்களை அடுக்குகிறார்கள். அவற்றை நீங்கள் அவர்களிடத்திலிருந்து பார்க்கும் சக்தியுங்களுக்குண்டா ? முடிந்தால் உங்கள் பேச்சு வேறாக ஒருவேளை இருக்கலாம்.

    ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமர். எனவே இந்தியர்கள் தங்கள் பிரதமரைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் எக்காரணத்தைக் காட்டிச் செய்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு அவர் பிரதமரா ? அவர் கொலையின் நியாய அனியாயத்தை அவர்களிடத்திலிருந்துதானே பார்க்கவியலும் ? உங்களால் முடிந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் கட்டுரை ஒருதலைப்பட்சமானது என்றாவது ஒத்துக்கொள்ளுங்கள்.

  4. Avatar
    காவ்யா says:

    வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து ‘கருணை மனு’ வரை வந்துவிட்ட நிலையில் ‘இந்த மொத்த வழக்குமே இந்திய அரசால் புனையப்பட்ட ஒன்று’ என்று நிறுவ முனைவது சரியா?//

    U hav a point here. It s akin to Koodangkulam agitation. Everything s almost over and the Nuclear Reactor is abt to go critical. Now, some hav launched the agitn. In fact, there was some protest it rt at the beginning; but the agitators were convinced by positive points regarding safety etc. given by the scientists manning the Nuclear reactor, so they gave up the agitn. Now, they have risen again. AFAIK.

    What u hav written shows u r siding with one side only. V never knows what goes behind the screen. How can v take side ?

  5. Avatar
    காவ்யா says:

    //முதலில் சம்பந்தப்பட்ட மூவரின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும். அதற்குரிய சட்ட ரீதியான, சமூக ரீதியான [அதாவது, மக்கள் அனைவரும் ஒரே குரலில் மரணதண்டனையை எதிர்ப்பதற்கான] முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படவேண்டியதே இன்றைய அவசர, அவசியத் தேவை.//

    மரண தண்டனை என்பதே கூடாதென்பது ஒரு கொள்கை. அதை நோக்கிப்பயணம் செய்து அடைவது ஒரே நாளில் நடக்காது. எனவே முதலில் இவர்களின் மரண தண்டனைகள் நிறுத்தப்படவேண்டுமென்கிறீர்கள். அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும் நீங்கள் எழுதியவற்றிலிருந்து பார்த்தால்: மரண தண்டனை யென்பதே கூடாது என்பதே அது. மற்றபடி உங்களின் முழுக்கட்டுரையும் இந்த மூவருக்கும் எதிராகத்தான் வாதம் மறைமுகமாக வைக்கிறது.

    என்னைப்பொறுத்தவரை, மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா நம் நாட்டில் கிருமினல் ஜஸ்டிஸ் சிஸ்டத்தில் என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல முடியும். அந்த நாட்டில் இல்லை; இந்த நாட்டில் இல்லையென்பது சாக்காகாது. அதே போல அந்த நாட்டில் இருக்கிறது. எனவே இங்கும். என்பதும் சாக்காகாது. நமது நாட்டில் முடிபுகள் நமக்குப்பிடித்தவண்ணமே இருக்கவேண்டும். இதை யார் தீர்மானிப்பது? Who s to decide that ? Intelligentsia ? Politicians ? TV anchors ? TV debaters ? Lawyers ? Academicians ? Taking them also as members of the Indian public, lets find a way to know the will of the ppl and take it to Parliament to make it a law.

    கொடிய கொலகளைச்செய்து விட்டு வருந்தா கொலையாளிகள்; வெளியில் நடமாடவிட்டால் சமூகத்திற்கு ஆபத்து என்றால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கலாமென்பவர்கள்; please note அப்படிப்பட்ட சைகோப்பாத் கொலையாளிகள் அன்னிய நாடுகளிலும் உண்டு. அன்நாடுகளில் மரண தண்டனை இல்லை. எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள்? இப்படிப்பட்ட கொலையாளிகளை அவர்கள் நிரந்தரமாக சிறையிலேயே அடைத்து வைப்பார்கள். அவ்வளவுதான். நம்மால் அதைச்செய்ய முடிய்மென்றால், மரண தண்டனை வேண்டாம்.

    But v have to spend our money to keep them in prison life long they die naturally. Once v take a decision against capital punishment, this s the only way.

    The nature of criminal justice system shows the nature of ppl of the country.

  6. Avatar
    காவ்யா says:

    //மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லும் நாம் எந்தவொரு உயர்ந்த நோக்கத்திற்காக இருந்தாலும் சரி, உணர்ச்சிக் கொந்தளிப்பில் தனக்குத்தானே தந்துகொள்ளும் மரணதண்டனை யாகிய தற்கொலை மேன்மையானது என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனித மனங்களில் வேரூன்றச்செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். //

    தமிழ் படும் பாடு.

    தமிழண்ணல் சொல்வார்: பலர் ஆங்கிலத்தில் எப்படிச் சொற்றொடர்கள் உண்டோ அபபடியே தமிழிலும் எழுதிவிடுவார்கள்.

    எ.கா: “இங்கே உட்காரக்கூடாது என்று விண்ணப்பிக்கப்படுகிறார்கள்.” செயல்பாட்டு வினை. ஆங்கிலத்திலே மிக.”

    தமிழில், “தயவு செய்து இங்கே உட்கார வேண்டாம்”
    என்று சொன்னால் போதும்.

    தயவு செய்து நேரடியாகவே தமிழில் எழுதவும் திண்ணை எழுத்தாளர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *