ஆனாலும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 3 in the series 4 பிப்ரவரி 2024

ஆர் வத்ஸலா

காலையில் எழுந்து

உடற்பயிற்சி செய்து

அம்மா தந்ததை

அள்ளிப் போட்டுக்‌ கொண்டு

ஒரு நிமிடம் கண்ணாடியில் முகம் பார்த்து

அவசரமாக தலை வாரி

லேசாகக் கோதிக் கொண்டு

கட்டிக் கொடுக்கப் பட்ட சாப்பாடு

திருத்தப்பட்ட மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுடன்

ஸ்கூட்டரை உதைத்தான்

எதிர்வீட்டுப் பெண்  அப்போது தான்  கிளம்புவாள்  பணிக்கு என்றும்

தெருக் கோடி வரை அவள்‌ பின் போகலாம் என்றும்

அறிந்ததனால்

அவள் பெரிய அழகியல்ல

என்றும்

இவன் முகத்தை அவள் பார்த்ததில்லை

என்றும்

இவனுடைய கடைசி அக்காவுக்கு மணமாவதற்குள்

இவளும் மணமாகிப் போயிருப்பாள்

என்றும்

தினமும் ஒரு வெள்ளை முடியை பிடுங்கும் அவனுக்குத்

தெரியும்

ஆனாலும்

Series Navigationநம் இருவருக்கு நடுவே ஒரு ஹார்மோனியம்கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் தைப்பொங்கல் விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *