This entry is part 3 of 4 in the series 25 பிப்ரவரி 2024

ஆர் வத்ஸலா

எனக்குள்ளது ஒரு துன்பம்

என உன்னிடம் நான்

சொல்லிக் கொண்டேன்

உனக்கு துன்பமே இல்லை

என நான் கருதுவதாக

அர்த்தம் செய்துக்

கொண்டு கோபித்தாய்

நீ

உன்னிடம் என்

துன்பத்தைச் சொல்லி ஆற்றிக் கொள்ள எண்ணியது

மட்டுமல்ல

உன்னை

எனக்கு உற்றவனாகக்

கருதியதே தவறு என

புரிந்து விட்டது

Series Navigationதமராகித் தற்றுறந்தார் வாழி!    விதண்டா வாதம்