சசிகலா விஸ்வநாதன்
பத்மநாபன் நன்றாய் தூங்கி கண்விழிக்கும்போதுதான் நினவில் வந்தது;சங்கேஸ்வரி, சிறு மனஸ்தாபத்தில், பிறந்தகம் போயிருப்பது. ஆஹா! இன்று விடுமுறை நாள் என்று நினைப்பே வெறுப்பாய் இருந்தது.
வாயில்
கதவைத் திறந்து செய்தி தாளை எடுப்பதற்குள், வெள்ளை பூனை ஒன்று உள்ளே வந்து மிக உரிமையாக சாப்பாட்டு மேசை மேல் தாவி உட்கார்ந்தது.
காபி அருந்தும் வேளையில் பூனைக்கும் ஒரு தட்டில் பால் ஊற்ற; அதுவும் மிக மகிழ்வுடன் நக்கிக் குடித்துவிட்டு, வீட்டை வலம் வந்தது. பத்மநாபன் எங்கு சென்றாலும் இணைபிரியா தோழன் போல், கூடவே இருந்தது.
அங்கிருந்த பந்து ஒன்றைக் கண்டு; அவனிடம் உருட்டி விட்டு, விளையாடத் தொடங்கியது.மதியம் உணவருந்தும் வேளையில் சேர்ந்து சிறிது பால் சோறும் உண்டு; மீண்டும் இடையுறா விளையாட்டு. அவன் தோளில் ஏறிக் கொண்டு இல்லாத லூட்டி அடிக்க; அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
சங்கேஸ்வரிக்கு போன் செய்து விருந்தாளி பூனையார் பற்றிச் சொன்னான்.
” சரி! சங்கு! கோபம் விட்டு சீக்கிரம் வா!நாம் வீட்டில் பூனை வளர்க்கலாம். தனிமை போக்கி இன்பம் நல்கும் நல்ல துணை.இன்றுதான் புரிந்தது;”
சசிகலா விஸ்வநாதன்
சசிகலா விஸ்வநாதன்
- `கிழக்கினை எதிர்கொண்டு’ – கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
- படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி !
- பசியாறலாமா?
- காலாதீதன் காகபூஶுண்டி
- கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு
- தனிமையின் இன்பம்
- யார்?